எந்த ஒரு சுப நிகழ்வாக இருந்தாலும், ஆடைகள், நகைகள், ஆழகு சாதனப் பொருள்களைத் தாண்டி அதில் மெஹந்திக்கும் தனி இடம் உண்டு. மெஹந்தி என்ற சொல் மெந்திகா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது. மெஹந்தி எகிப்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. எகிப்திய ராணிகள் தங்கள் தலைமுடி மற்றும் நகங்களை சாயமாக்குவதற்கு மருதாணியைப் பயன்படுத்தினர். பின்னர், அது வணிகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்பெல்லாம், மருதாணி இலையை அரைத்து வட்ட வடிவில் கையில் இட்டுக்கொள்வோம். ஆனால், தற்போது fusion என்ற பெயரில் வித விதமான மெஹந்தி வடிவமைப்புகளை ஒன்றிணைத்து, ஒரு புதிய மெஹந்தி டிசைன் உருவாக்கப்படுகிறது. இனி மெஹந்தி போடுவதற்கு முன், அது என்ன வகை மெஹந்தி என்று தெரிந்து கொண்டு போடலாமா?
பெரும்பாலும், இந்திய மெஹந்தி டிசைன்கள் பூமி, இயற்கை மற்றும் மெஹந்தி வரைந்துகொள்பவர்களின் பலவித உணர்ச்சிகளை வெளிக்காட்டும் வகையில் இருக்கும். பறவைகள் மற்றும் விலங்குகள், சூரியன், மணமகன் மற்றும் மணமகள் உருவங்கள் ஆகியவை இந்திய திருமண மெஹந்தி டிசைன்களில் அடிக்கடி இடம்பெறுகின்றன.
இந்த மெஹந்தி டிசைன்கள், இந்திய டிசைன்களை விட மிகவும் வித்தியாசமானவை. இதில், பெரும்பாலும் முந்திரிபருப்பு அல்லது மங்காய் கொட்டை மற்றும் அரபு காலாச்சரம் சம்பந்தப்பட்ட டிசைன்கள் அதிகமாக இருக்கும். அதிலும், நிழல்களுடன் (Shading) கூடிய டிசைன்களாகவே அவை வரையப்படுகின்றன. அரபு மெஹந்தி சில நேரங்களில் 'முகலாய் மெஹந்தி' என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்தோ-அரேபிய மெஹந்தி வடிவமைப்புகள் fusion வகை மெஹந்தி டிசைன்கள். அதாவது, இந்திய மற்றும் அரேபிய டிசைன்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் டிசைன்கள்தான் இவை. மலர் வடிவங்கள் மற்றும் அரபு முந்திரி மற்றும் ஷேடிங் கொண்ட பறவைகளின் ஜோடிகளை இந்தோ-அரேபிய மெஹந்தி டிசைன் கொண்டிருக்கும்.
இந்திய மற்றும் பாகிஸ்தானிய மெஹந்தி டிசைனுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இருப்பினும், மணமகள், மணமகன் போன்ற வடிவங்களுக்குப் பதிலாக, மலர்கள் மற்றும் இலை போன்ற டிசைன்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கத்திய மெஹந்தி வடிவமைப்புகள் மிகவும் வித்தியாசமானவை. அவை வடிவியல் டிசைன்கள், நகைச்சுவையான வடிவங்கள் மற்றும் பிரேஸ்லெட் மெஹந்தி, சரவிளக்கு மெஹந்தி என கை நகைகளைப் போன்ற டிசைன்களை பின்பற்றுகின்றன. மேற்கத்திய நாடுகளில் மெஹந்தி மீது இருக்கும் ஆர்வமே அங்கு டாட்டூ கலாச்சாரம் உருவாக காரணமானது என்று சொல்லப்படுகிறது.
பச்சை குத்த விரும்பாதவர்கள் இந்த வகை டிசைன்களை தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றை கைகளில் மட்டுமின்றி, உடலின் மற்ற பாகங்களிலும் வரைந்து கொள்ளலாம்.
இந்த வகை டிசைன்கள் தனித்துவமானவை. இவை பாரம்பரிய பழங்குடி சின்னங்கள், ஜிக்-ஜாக் கோடுகள் மற்றும் வடிவியல் வளைவுகளை கொண்டிருக்கும். குறிப்பாக, வைர வடிவங்கள் இதன் முக்கிய அம்சமாகும். இந்த மொரோக்கன் டிசைன்கள் மிகவும் சிம்பிள் ஆன டிசைன்கள் என்றாலும் கூட, சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் அழகானாவை. இந்த டிசைன்கள் பெரும்பாலும், மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பிரபலமானவை.
மேலே கூறப்பட்டுள்ள மெஹந்தி டிசைன்களைத் தாண்டியும், போர்ட்ரைட் (portrait) மெஹந்தி டிசைன், ஜுவல்லரி மெஹந்தி டிசைன் மற்றும் ஆப்பிரிக்கன் மெஹந்தி டிசைன் போன்று நிறைய மெஹந்தி டிசைன்கள் உள்ளன.