நீண்ட விரல்களைக் கொண்டவர்களுக்கான 8 மெஹந்தி மாடல்கள்!

Mehandi Design
Mehandi Design
Published on

அனைத்து மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கும், திருவிழாக்களுக்கும் பெண்களின் மனதைப் பூர்த்தி செய்யும் ஒரு விஷயம் என்றால், அது மெஹந்திதான். மருதாணி இலைகளை அரைத்து, அதனை கைகளில் வட்டங்களாக போடும்போது அவ்வளவு அழகாக இருக்கும். பிற்பாடு அது மெஹந்தியாகவும், பல பல டிசைன்களில் அழகழகாகப் போட ஆரம்பித்தனர்.

இப்போது இளம்பெண்கள் அனைவருமே புதுப்புது டிசைன்களில் மெஹந்தி போடுகிறார்கள். விரல்கள் குட்டையாக இருந்தால் எளிதாக பல டிசைன்கள் பயன்படுத்தி விதவிதமாக மெஹந்தி போட்டுவிடலாம். ஆனால், இதுவே நீண்ட விரல்கள் என்றால், ஒரு கைக்கு மெஹந்தி போடவே அவ்வளவு நேரமாகும். அதேபோல், நுனுக்கமான டிசைன்களை விரல்களுக்கு ஏற்றவகையில் நீட்டிப் போடும்படி ஆகிவிடும். அது பார்ப்பதற்கு அதிகப்படியான வெற்றிடத்தைக் கொடுப்பதுபோல இருக்கும். ஆகவே அவர்களுக்கெனவே சில டிசைன்கள் தனியாக உள்ளன. அவற்றைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

Floral mehandi design
Floral mehandi design

Floral mehandi design:

Floral design என்றால் பூக்கள், இலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி போடும் டிசைன் ஆகும். பூக்களே பாதி இடத்தை அடைத்துவிடும் என்பதால், நீண்ட விரல்கள் கொண்டவர்களுக்கு இது ஏற்ற மாடலாகும். மேலும் எளிமையாகப் போட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த டிசைன் கொண்ட மாடலைத் தேர்ந்தெடுக்கலாம்.

Intricate design
Intricate design

Intricate Mehndi Design:

இந்த டிசைனில் பாதி அளவு பூக்கள் மற்றும் பாதி அளவு டிசைன் பயன்படுத்தப்பட்டிருக்கும். நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த டிசைனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சேலை, கௌன், லெஹங்கா போன்ற ஆடைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

Circle Mehandi Design:

இந்த டிசைன் பயன்படுத்தினால், கையின் பின்புறம் மற்றும் மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் எடுப்பாகவும் அழகாகவும் தெரியும். அதுவும் சுழல் போன்ற வட்ட டிசைன், நீண்ட கைகளை உடையவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

Full finger mehandi design
Full finger mehandi design

Full finger mehandi design:

உங்கள் விரல்களின் அனைத்து இடங்களையும் நுனுக்கமான டிசைன்களால் நிரப்ப வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் இந்த Full finger mehandi design ஐ பயன்படுத்தலாம்.

Traditional Mehandi Design
Traditional Mehandi Design

Traditional Mehandi Design:

இந்த மெஹந்தி டிசைன் பழமையானது என்பதால், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தலாம்.  நீண்ட விரல்களில் பாதி அளவு வரை போட விரும்புபவர்கள் இதனைப் பயன்படுத்தினால் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும்.

Triangular Mehandi Design
Triangular Mehandi Design

Triangular Mehandi Design:

முக்கோண வடிவமும், புள்ளிகளும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த டிசைனை நீங்கள் திருமணம், திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கோடையில் உங்க தலைமுடி அதிகமா உதிருதா? கேரட்டை இப்படி பயன்படுத்துங்க!
Mehandi Design
Tattoo Like Mehndi Design
Tattoo Like Mehndi Design

Tattoo Like Mehndi Design:

இந்த டிசைனையும் நீங்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு டாட்டூ போட்ட உணர்வைக் கொடுக்கு இந்த டிசைனே பலரால் விரும்பப்படுகிறது.

Ornamental Finger Design
Ornamental Finger Design

Ornamental Finger Design:

நீங்கள் நினைப்பது சரிதான், இந்த டிசைன் நகை டிசைன்போல்தான் இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு டாட்டூ போல எளிமையாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com