வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

Temple
Temple
Published on

ஆந்திராவில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலில் உள்ள சிலை வேற்றுகிரக வாசிகளால் செய்யப்பட்டது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

ஆந்திராவில் ரேணிகுண்டாவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் குடிமல்லம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றங்கரையில்தான் பரசுராமேஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவன் சிலைதான் உலகிலேயே மிகவும் பழமையான சிலை என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.  இந்த லிங்கத்தின் காலமானது இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இங்கு மூலவர் சிவனோடு மும்மூர்த்திகளையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்த சிவனின் ஒரு கையில் பரசும் மற்றொரு கையில் ஆட்டுக்கிடாவும் இருப்பதால், இது பரசுராமர் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல் இங்குள்ள சிவன் ஆறடி பள்ளத்தில் நின்று காட்சி தருவதால்தான் இந்த கிராமத்திற்கு குடி பள்ளம் என்று பெயர் வந்தது. இந்தக் கோவிலில் பல மர்மங்கள் அடிங்கியிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது ஒரு சாதாரண கல்லில் கதவு போல் திறக்குமாம். அதேபோல் இந்தக் கோயிலில் ஒன்பது வகையான பாதைகள் வரைபடத்தில் உள்ளன. இவை அனைத்துமே நிலத்துக்கு அடியில் நம்மை அழைத்துச் செல்லும். கோயில் இருக்கும்  நிலத்துக்கு அடியில் செவ்வக கிரானைட்களால் செய்யப்பட்ட சுவர்கள் இருக்கிறதாம்.

ஒன்பது குறிப்பிட்ட கற்கள் இங்கு உள்ளன. இவை அனைத்துமே பூமிக்கு அடியில் செல்வதற்கான ரகசிய பாதையாக இருக்கலாம் என்றும் அவை திறக்கும் வகையில் உள்ளது என்றும் உள்ளூர் வாசிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சிவலிங்கத்தின் கல்லானது நம்முடைய கிரகத்தில் உள்ள கல் இல்லை என்றும், வேற்று கிரகத்தில் உள்ள கல் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியின்மூலம் தெரிவிக்கின்றனர். இந்த கல் 5 அடிக்கு மேல் உயரமாக உள்ளது மேலும் கடினமான கரும்பழுப்பு நிற பாறையாக  உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பச்சைக்குத்தும் வழக்கம் குறைந்து போவது ஏன்?
Temple

இந்த கல் பூமியில் இல்லாததால் வேற்று கிரக வாசிகள்தான் கொண்டு வந்து சிலை செய்திருக்கிறார்கள் என்று கணிக்கின்றனர்.

இந்த சிலை உலகிலேயே மிகவும் பழமையானது என்பதாலும், இந்த பூமியிலேயே இல்லாத கல் என்பதாலும் கண்டிப்பாக இந்த கோவில் பல மர்மங்கள் நிறைந்துள்ளதுதான் என்று மக்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com