பச்சைக்குத்தும் வழக்கம் குறைந்து போவது ஏன்?

Tattoo
Tattoo
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வதைப் பச்சைக் குத்துதல் என்கின்றனர். உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்ளல் பச்சைக்குத்துதல் என்று சொல்லலாம். இது ஒரு நாகரிகப் பாணியாகவும் சில இனக்குழுமங்களில் சடங்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பண்ணை விலங்குகளை இனங்காணும் நோக்கில் அடையாளப்படுத்தவும் பச்சைக்குத்தல் பயன்படுத்தப்படுகிறது.

பச்சைக் குத்துதல் பல்வேறு நாகரிகங்களிலும் காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. சப்பானிய ஐனு இனக்குழுவைச் சேர்ந்த மக்கள், முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள். இந்திய, இலங்கை உள்ளிட்ட மக்களிடமும் பழங்காலத்திலிருந்து பச்சைக் குத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

ஐரோப்பியா - ஆசியா நாடுகளில், பச்சைகுத்துதல் என்பது கற்காலத்திலிருந்து நடைமுறையிலுள்ள வழக்கமாகும். கி.மு 4000 முதல் கி.மு 5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஓட்சி பனி மனிதனின் கை, கால்களில் பச்சை குத்தியதற்கான அடையாளம் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இருந்தன. இவை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான அக்குபஞ்சர் மருத்துவ வகையாகவும் கருதப்படுகிறது.

இக்கலை தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆசியாவின் பிற பகுதிகளிலும், அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானியரின் அக்குபஞ்சர் மருத்துவ முறையானது பச்சைக் குத்துதல் கலையோடு தொடர்புப்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
காது குத்துதல் நிகழ்வின் வரலாறும் முக்கியத்துவமும் தெரியுமா?
Tattoo

அமெரிக்க தோலியல் கல்வி அமைப்பு பச்சைக் குத்துதலைக் கீழ்க்காணும் ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்துகிறது.

  1. இயற்கையிலான (அ) தழும்புகளாலானது - இது விபத்துக்களாலான காயங்களால் ஏற்படுவது.

  2. தொழில்முறை சார்பிலானது - அனேகப் பச்சைக்குத்தல்கள் குலங்கள், கூட்டங்கள், சமூகநிலை, சமயம் அல்லது நம்பிக்கை பற்றி, வீர தீரத்தைக் காட்டுவதற்காக, காதலை வெளிப்படுத்தி, தண்டனைகளைக் குறிக்க, பாதுகாப்புக்காக இடப்படுகின்றன. அத்தகைய பச்சைகுத்தல்கள் தொழில் ரீதியிலானது எனப்படும்.

  3. அலங்கார அல்லது அழகியல் வழியிலானது பச்சைக்குத்தல்கள்.

  4. மருத்துவ நோக்கிலானது.

  5. அடையாளப்படுத்துவதற்கானது

உடலின் மேல் தோலின் கீழாக, நிறப்பொருள்களை உட்செலுத்துவதன் மூலம் பச்சைக்குத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உட்செலுத்தப்பட்ட நிறப்பொருள் கீழ்ப்புற மேல் தோலின் கீழாகப் பரவி, மேல் தோல் கலங்களைச் சிதைக்கும். இவ்வாறு தோற்றுவிக்கப்படும் நிறப்பொருளை, பிற பொருளாகக் கருதி உடலின் நிர்ப்பீடனத் தொகுதியிலுள்ள பிற பொருள் எதிரிகளைச் சுரந்து வளைத்துக் கொள்ளும்.

உடலில் மார்பு, மேல் கை, முன்னங் கை, கால் போன்ற பகுதிகளில் பச்சை குத்தப்படுகிறது. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தோர் பச்சை குத்தும் தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைக்கின்றனர். அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கிக் கொள்கின்றனர். நீர் கலந்து அதனைப் பசையாக்குகின்றனர். கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி எடுத்துத் தேவையான உருவங்களை வரைகின்றனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்கின்றனர். இப்பொழுது பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றம் அளிக்கும். இது எந்நிலையிலும் அழியாது.

இதையும் படியுங்கள்:
கத்திரிக்கோலின் கதை தெரியுமா உங்களுக்கு?
Tattoo

தெய்வ வடிவங்கள், கோலங்கள், தேள், பாம்பு போன்ற உருவங்கள், பெயர்கள் போன்றவை பச்சை குத்துதலில் அதிகமாக இடம் பெறுகின்றன. குறிப்பாக, பெண்கள் அழகிற்காகவும், அடையாளத்திற்காகவும் இக்கலையைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சின்னங்கள், திரைப்பட நடிக, நடிகையர் படங்களைப் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது.

தற்பொழுது, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் குறைந்து போய்விட்டது. அழகிய உருவங்களுக்கான அச்சின் வழியாக, மருதாணிப் பசை கொண்டு உடலில் பல உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com