
ஆனை மங்கல செப்பேடுகள் நாம் எத்தனையோ செப்பேடுகளைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒரு வினோதமான செப்பேடு இருப்பது யாருக்கும் தெரியாமல் போனது தான் விந்தையாக உள்ளது. 450 ஆண்டு கால சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்று அடிப்படையில் உருவான இந்த செப்பேடு தற்போது நம் நாட்டில் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். முதலாம் ராஜ ராஜேந்திர சோழன் என்பவரால் சோழ சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டது. கிபி 985 முதல் 1014 வரை நாகப்பட்டினத்தை தலைநகராகக்கொண்டு சோழர்கள் ஆண்டு வந்தனர். சுமார் 16 சோழ மன்னர்கள் 450 இந்த ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்தனர்
கிபி 13 ஆம் நூற்றாண்டில் சுந்தர பண்டியன் படையெடுப்பின் மூலம் சோழர்களின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது புலிக்கொடி இறங்கி வில் அம்பு கொடியேற்றம் ஆனது. ராஜ ராஜேந்திரன் சோழன் ஆட்சி காலத்தில் கல்வி கலாச்சாரம் அரசியல் கட்டிடக்கலை பொருளாதாரம் ஆட்சியமைப்பு இவை பற்றிய குறிப்புகள் செப்பேட்டில் இடம் பெற்றன. மொத்தம் 21 செப்பேடுகள் உள்ளது. மொத்த எடை 30 கிலோ. இவை அனைத்தையும் ஒரு கனமான வளையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த வளையத்தில் முன் பகுதியில் சோழர் காலம் முத்திரை பதிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு செப்பேடுகள் 14 இன்ச் நீளமும் ஐந்து இன்ச் அகலம் கொண்டது. முதல் ஐந்து செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும் மீதி பதினாறு செப்பேடுகள் தமிழ் எழுத்துக்களிலும் உள்ளது.
டச்சு கம்பெனி மூலம் இந்தியாவுக்கு வந்த நெதர்லாந்து நாட்டினர் சுமார் 200 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த செப்பேடுகள் அனைத்தும் பிளாரன்ஸ் கேம்பர் என்பவர் மூலம் 1867-ல் நெதர்லாந்துக்கு எடுத்துச் செலலப்பட்டது.
அங்கு தற்போது நெதர்லாந்து லீ டைன் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இது போன்று வெளிநாடுகளைச் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்கள் உள்ளன. தற்போது அந்த அரசு வெளிநாடுகளுக்கு அவர்கள் நாட்டு பொருட்களை தகுந்த ஆதாரத்துடன் திரும்ப எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நம் நாடும் இந்த அரிய செப்பேடு பொக்கிஷத்தை கேட்டு பெற வேண்டும். ஆனைமங்கலம் செப்பேட்டில் ஆமூர் நாணலூர் புத்தாகுடி மூஞ்சி குடி சந்திரபாடி உதய மார்த்தாண்ட நல்லூர் ஆகிய ஊர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
ராஜராஜ சோழனின் சாதனைகள் பெருமளவில் விவரிக்கப்பட்டுள்ளது. 26 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்
1867-ல் ராஜேந்திர சோழன் அரண்மனை இடிக்கப்பட்டு தற்போது அஸ்திவாரமும் சில கட்டிட இடிபாடுகள் மற்றும் என்ஜி உள்ளது. 1970 இல் யுனெஸ்கோ ஒரு விதியை கொண்டு வந்து. அதன்படி 1970 நவம்பருக்கு பின் திருடிய பொருட்கள் மட்டும் இது பொருந்தும் படியாக உள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் படையெடுப்பின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் அனேக கல்வெட்டுக்கள் ஆதாரங்கள் அழிந்துபோனது. தற்போது மாளிகை மேடு என்ற இடத்தில் ராஜேந்திர சோழன் அரண்மனையின் அஸ்திவாரம் மட்டும் காணப்படுகிறது
தமிழக அரசும் இந்திய அரசும் நெதர்லாந்து அரசுடன் பேசி அங்குள்ள லீ டைன் பல்கலைக்கழகத்தில் உள்ள நம் சோழர் காலத்து செப்பேடுகளை பத்திரமாக இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே நம் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.