Abayomi dolls: அடிமையாய் இருந்தவர்களின் பாச அடையாளமான அபயோமி பொம்மைகள்!

Present Abayomi Dolls
Present Abayomi Dolls

பொதுவாகவே பொம்மைகள் என்பது குழந்தைகளின் விருப்பமான விளையாட்டுப் பொருள். அப்படி ஆரம்பித்து, இப்போது மத வாரியாகவும், கலாச்சார வாரியாகவும் பல பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் அடிமையாக இருந்தபோது உருவான அபயோமி பொம்மைகளின் சரித்திரம் தான் இந்தக் கதை.

மேற்கு ஆப்பிரிக்காவின் யொருபா (Yoruba) கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்தான், இந்த அபயோமி பொம்மைகளைக் கண்டுப்பிடித்தார்கள். அப்போது அடிமையாக இருந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை வெகுநாட்கள் பார்க்காமல் அடிமையாக வேலைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தங்களின் குழந்தைகள் நியாபகம் வரும்போதெல்லாம், தங்களது அழுக்கு ஆடைகளின் ஒரு சிறு பகுதியை கிழித்து ஒரு பொம்மை செய்வார்கள்.

தங்கள் குழந்தைகளைப் பார்க்கும்வரை அவர்களுக்கு அதுதான் அவர்களின் குழந்தை. குழந்தைகளின் நியாபகம் வரும்போதெல்லாம் அந்த பொம்மையை எடுத்து பார்த்துக் கொள்வார்கள். வலிகளுக்கு இடையே இருந்த பாசம் மற்றும் ஏக்கங்களில் கிடைத்த ஒரு நிம்மதிதான் அந்த அபயோமி பொம்மைகள். அபயோமி என்றால் “அவள் மகிழ்ச்சியைத் தருகிறாள்” அல்லது “விலைமதிப்பற்ற ஒன்று” என்று பொருள்.

அப்போது அடிமையாய் இருந்தவர்கள் அழுக்கு துணிகளிலும், மிச்ச மீதமிருந்த துணிகளிலும் இந்த பொம்மைகளைச் செய்ததால், அவர்கள் மிகவும் படைப்பாற்றல் கொண்டவர்களாகக் கருதப்பட்டார்கள். அதேபோல், அந்த பொம்மைகள் எளிமைவாய்ந்த பொம்மைகளாகவும் கருதப்பட்டன.

அடிமைத் தனத்திலிருந்து மீண்டு வந்த அவர்கள், தாங்கள் இருந்த நிலைமையை என்றும் மறக்கக்கூடாது என்பதற்காகவும், எதிர்காலத்தில் வளரும் குழந்தைகள், தங்களது முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்காகவும், இந்த பொம்மைகள் அவர்களிடையே கலாச்சார அடையாளமாக மாறின.

அப்போதிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவின் பாரம்பரிய பொம்மை என்றால், அது அபயோமி பொம்மைதான். மேலும் அபயோமி பொம்மைகள் கலாச்சாரத்தின் அடையாளம் என்பதோடு, சமத்துவத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
NOTA என்றால் என்னன்னு தெரியுமா?
Present Abayomi Dolls

வரலாறு, சமத்துவம், கலாச்சாரம், பாரம்பரியம் என அனைத்தின் அடையாளமாக விளங்கும் அபயோமி பொம்மைகள் நாளடைவில் மேற்கு ஆப்பிரிக்கா மக்களால் மட்டுமல்ல, உலகளவில் உள்ள கலைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் உணர்வுப்பூர்வமான ஒன்றாக மாறின.

இன்று மேற்கு ஆப்பிரிக்கா, பள்ளிக் குழந்தைகளுக்கு வரலாற்றைப் பற்றி கற்றுத்தர பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால், அது அபயோமிதான். அதேபோல் அபயோமி பொம்மைகள், சமூக மாற்றத்திற்கான பெண்களின் பங்கை எடுத்துரைக்கும் சின்னமாகவும் ஆப்பிரிக்க மக்கள் கருதுகின்றனர். அபயோமி பொம்மைகள் இன்றும் அதன் மகத்துவம் மாறாமல் ஆப்பிரிக்கா மக்களால் செய்யப்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com