NOTA என்றால் என்னன்னு தெரியுமா?

Do you know what is NOTA?
Do you know what is NOTA?

நோட்டா (NOTA) என்றால் என்ன? நாம் நமக்குப் பிடித்த வாக்காளர்களுக்கு வாக்களிப்போம். இல்லை ஏதோ ஒரு காரணத்தினால் அனைத்து வாக்காளர்கள் மீதும் நாம் அதிருப்தியில்  இருப்போம். அப்படிப்பட்ட சமயத்தில் நாம் வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து விடுவோம். அப்படி இருப்பதால் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்துவிடும். தேர்தல் ஆணையத்தின் இலக்கு 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.

அரசியல்வாதிகள் முன்பெல்லாம் டெபாசிட் போய்விடும் என்றுதான் கவலைப்படுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் நோட்டா வந்த பிறகு நாம் வாங்கும் வாக்கு நோட்டாவுக்கு கீழே போகக்கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். நோட்டா என்றால் என்ன? அது முதலில்  எங்கு அறிமுகம் செய்யப்பட்டது? அதனால் யாருக்கு என்ன பாதிப்பு என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நோட்டா என்றால் என்ன?

இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் ஒரு வாக்காளர் ஆதரிக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் கருத்து வேறுபாட்டைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையாக நோட்டாவில் தங்கள் எண்ணத்தை தெரியப்படுத்தலாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அதிகாரத்தை வாக்காளர்களுக்கு இந்த விருப்பம் வழங்குகிறது.

நோட்டா எப்போது முதலில் பயன்படுத்தப்பட்டது?

சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 2013 சட்டமன்றத் தேர்தல்களிலும், பின்னர் 2014 பொதுத் தேர்தலிலும் முதல் முறையாக நோட்டா பயன்படுத்தப்பட்டது. PUCL எதிராக யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இது தேர்தல் செயல்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோட்டாவை விரும்பும் வாக்காளர்கள், தங்கள் அதிருப்தியை அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் வைக்கும் வேட்பாளர்கள் மீது வெளிப்படுத்த இது அனுமதிக்கும் என்றும், இதனால் அரசியல் அமைப்பை தூய்மைப்படுத்த உதவும் என்றும் உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
மாம்பழச்சாறு பருகுவதன் மகத்தான நன்மைகள்!
Do you know what is NOTA?

இது தேர்தல் முடிவுகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்திய அரசியல் அமைப்பில் நோட்டாவுக்கு தேர்தல் மதிப்பு இல்லை. நோட்டாவுக்கு ஆதரவாக அதிகபட்ச வாக்குகள் அளிக்கப்பட்டாலும், கோட்பாட்டளவில் ஒரு வாக்கு கூட அதிகமாகப் பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இது என்ன நோக்கத்திற்காக உதவுகிறது?

நோட்டாவிற்கு தேர்தல் மதிப்பு இல்லையென்றாலும், வாக்காளர்களுக்கு அது இன்னும் முக்கியமான கருவியாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த இது வாய்ப்பளிக்கிறது.

நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு யாரையுமே பிடிக்கவில்லையா? டோன்ட் வொரி நோட்டாவுக்கு ஓட்டை போட்டு விட்டுப் போங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com