

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மரத்தினால் ஆன விளையாட்டுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தலைமுறை தலைமுறையாக கைவினை கலைஞர்கள் இதனை தயாரித்து வருகிறார்கள். இந்தப் பொருட்களின் சிறப்பே அதன் தனித்துவமான நுண் கலைகள்தான். இயந்திரங்கள் உதவி இன்றி மனிதர்களால் முழுக்க முழுக்க இந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் பாரம்பரிய செப்புச் சாமான்கள்:
அம்மி ஆட்டுக்கல் சிறிய மேஜை நாற்காலி மற்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் சமையல் பொருட்கள் என அனைத்தும் தத்ரூபமாக உள்ளது. இந்தப் பொருட்கள் மூலம் குழந்தைகள் விளையாடுவதால் குழந்தைகளின் கற்பனை திறன் அதிகரிக்கிறது. உள்ளூர் மர வகைகள் ஆன மஞ்ச கடம்பு வேம்பு போன்றவற்றை பயன்படுத்தி இந்த பொருட்கள் செய்யப்படுகிறது. இவற்றை குழந்தைகள் வாயில் வைத்தால் எந்த தீங்கும் ஏற்படாது.
இந்தக் கலைஞர்களுக்கு நபார்டு வங்கி பக்க பலமாக இருந்து செயல்படுகிறது. இங்குள்ள செப்பு கடைசல் சாமான்களுக்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீட்டை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது இவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
இதன் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கப்படுகிறது. மோசடி நடைபெறுவது தடுக்கப்படுகிறது. அம்பாசமுத்திரம் செப்பு சாமான்களில் ஒரு பிரீமியம் கைவினைப் பொருட்கள் மற்றும் அதன் மூலம் அதிக விலை கிடைக்கிறது. குழந்தைகள் உலகில் செப்பு சாமான்களுக்கு தனி மவுசு உண்டு.
குழந்தைகள் இந்த செப்பு சாமான்களை சமைக்கும் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் இந்த செப்பு சாமான்களை வைத்து விளையாடி இருப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதியை சுற்றியுள்ள வாகைகுளம் மன்னார்கோவில் போன்ற இடங்களிலும் செப்பு சாமான்கள் செய்யப்பட்டு வருகிறது.
அதிக அளவில் அம்பாசமுத்திரம் பகுதியில் மட்டுமே இந்த தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவற்றை தயாரிக்க மஞ்சள் கடம்பு வேம்பு தாழம்பூ இலைகளை பயன்படுத்துகின்றனர். எளிதில் உடையாது நீண்ட நாட்கள் உழைக்கும். இந்த செப்பு சாமான்களை ஓலை பெட்டியில் வைத்து 150 முதல் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு ஓலை பட்டியல் 32 வகையான விளையாட்டு பொருட்கள் இருக்கும். முன்பு இங்குள்ள பெண்கள் திருமணம் செய்யும்போது இந்த மரச்சாமான்களை சீர்வரிசையாக வழங்குவது வழக்கம். தற்போது இந்த பழக்கம் நடைமுறையில் இல்லை. இந்த செப்பு சாமான்கள் கலை நயத்துடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.நாம் மறந்துபோன ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், திருவை, கல் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
நூற்றாண்டுகளை கடந்து இந்த தொழில் நடைபெற்று வருவது சிறப்பாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு சாமான்கள் ஓலை பெட்டியில் வைத்து 150 200 300 500 என விற்பனை செய்யப்படுகிறது.
கண்ணை கவரும் இந்த மரச்சாமான்கள் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1990 முதல் உள்ள குழந்தைகள் இந்த விளையாட்டு சாமான்களை கண்டிப்பாக வாங்கி விளையாடி இருப்பார்கள். குழந்தைகளுக்கு உண்டான சூப்பு கட்டை தொட்டில் கம்பு நடை வண்டி சமையல் சாமான்கள் என அனைத்தும் கிடைக்கும். தற்போது யூகலிப்டஸ் மரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இவை தவிர கோவிலுக்கு தேவையான குண்டான் தடி, அனுமார் கையில் வைத்திருக்கும் கஜாயுதம், சுடலை கோவிலுக்கு பரிகாரமாக செய்யக்கூடிய பொருட்கள் உடற்பயிற்சி கட்டைகள் அலங்கார பொருட்கள் என அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது.
பாரம்பரிய மிக்க இந்த தொழிலை நாம் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
டிஜிட்டல் திரைகளில் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு, நச்சுத்தன்மையற்ற மற்றும் கற்பனைத் திறனைத் தூண்டக்கூடிய பாதுகாப்பான பாரம்பரிய விளையாட்டுகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற தெளிவை நீங்கள் இதன் மூலம் பெறுவீர்கள். நம் மண்ணின் கலைகளை ஆதரிப்பதோடு, உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியமான விளையாட்டு உலகை மீட்டெடுக்கும் உன்னத வாய்ப்பு இது