கோதுமையை Pregnancy Tester ஆக பயன்படுத்திய பண்டைய எகிப்து பெண்கள்!

Wheat pregnancy  Tester
Wheat pregnancy Tester
Published on

நாடி துடிப்பு அறிந்து ஒருவர் கர்ப்பமாக உள்ளாரா? இல்லையா? என்பதுதான் முதன்முதலில் நமது முன்னோர்கள் அறிந்த வித்தையாகும். ஆனால், பல ஆண்டு காலங்களுக்கு முன்னர் கோதுமை வைத்து ஒருவர் கர்ப்பமாக உள்ளாரா? இல்லையா? என்பதை பண்டைய எகிப்து பெண்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களின் இந்த செயல்தான், இன்று Pregnancy Tester Kit வந்ததற்கு காரணம் என்று கூறினால், நம்புவீர்களா?

சரியாக 1350 BCE காலக்கட்டத்தில் எகிப்து பெண்கள், தங்களது சிறுநீரை கோதுமையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த கோதுமை வேகமாக வளர்ந்தது என்றால், அது பெண் குழந்தை என்றும், மெதுவாக வளர்ந்தது என்றால் ஆண் குழந்தை என்றும், ஒருவேளை கோதுமை வளரவே இல்லை என்றால், அந்தப் பெண் கர்ப்பமாகவே இல்லை என்றும் கோட்பாடுகள் இருந்தன.

அந்தப் பெண்கள் இரண்டு சின்ன பைகளில் தங்களது சிறுநீரை வைத்து, அதில் சிறிதளவு கோதுமையைப் போட்டு ஓரமாக வைத்துவிடுவார்களாம். அந்த கோதுமை வளர்கிறதா? இல்லையா? என்பதை சில நாட்கள் பொருத்திருந்து அவர்கள் பார்ப்பார்கள். அதன்பின்னரே கர்ப்பமானது உறுதியாகும்.

Egypt Women and Pregnancy Tester
Egypt Women and Pregnancy Tester

இதனை 1963ம் ஆண்டுதான், இவ்வாறு எகிப்து பெண்கள் இந்த நடைமுறையை பின்பற்றினார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதன்பின்னர், அதனை அவர்கள் ஆராய்ச்சியும் செய்துப்பார்த்தனர். அதன்படி, அது 70 சதவீத அளவு வெற்றியில் முடிந்தது. அப்போதுதான், முதல்முறையாக சிறுநீர் வைத்து கர்ப்பமாக உள்ளார்களா? இல்லையா? என்பதை கண்டறியலாம் என்று தெரியவந்தது.

மேலும் சிறுநீர் தன்மை மற்றும் அதன் நிறத்தைக் கண்டு அந்த நபருக்கு எதாவது நோய் உள்ளதா? என்பதையும் தெரிந்துக்கொண்டுள்ளனர். இவ்வாறு ஒரு மனிதனின் சிறுநீர் அனைத்திற்கும் உதவுகிறது என்பதை 16ம் நூற்றாண்டுகளில் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து பெண்களின் இந்த முறையை கையாண்டே, ஆராய்ச்சியாளர்கள் படிபடியாக இரண்டு கோடுகள் விழும் Pregnancy tester-ஐ  கண்டுபிடித்தார்கள் என்று கூறப்படுகிறது .

இதையும் படியுங்கள்:
Paithani Saree: பைதானி கைத்தறி புடவையின் சுவாரசிய தகவல்கள்!
Wheat pregnancy  Tester

இருநாடிகள் துடித்தால், அந்த பெண் கர்ப்பமாக உள்ளார் என்பதிலிருந்து, இப்போது வீட்டில் அந்த பெண்ணே டெஸ்ட்டரை பயன்படுத்தி கண்டுபிடிக்கும் முறை வரை வந்துவிட்டது. இதற்கெல்லாம் வேர் என்றால், அது கோதுமை என்றுதான் கூற வேண்டும். இப்போது நம்முடைய தொழில்நுட்பத்தை அவர்கள் பார்த்தால், ஆச்சர்யக் கடலில் மூழ்குவார்கள். அதேபோல், அவர்களின் இந்த Preganancy test முறையை பார்த்தால் நமக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஆச்சர்யமாகதான் உள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் என்ன வித்தையெல்லாம் செய்தார்களோ தெரியவில்லை. இருப்பினும், இந்த வித்தியாசமான முறை ஆச்சர்யமாக உள்ளதுதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com