

டெல்லியில் உள்ள குதுப்மினார் உலகின் மிக உயரமான செங்கற்களால் கட்டப்பட்ட மினார் ஆகும். இது 73 மீட்டர் உயரம் கொண்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது. 1192 இல் குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டு பல ஆட்சியாளர்கள் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. இது இந்திய இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்திய வெற்றி கோபுர சின்னமாகும்.
இந்து இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. 1192ல் குத்புதீன் ஐபக் அடித்தளம் நாட்டினார். பின்னர் அவரது மருமகன் இல்துத் மிஷ் என்பவர் மூன்று அடுக்குகளை சேர்த்து கட்டினார். 1368 ல் பிரஸா துக்ளக் ஐந்து மற்றும் கடைசி அடுக்குகளை கட்டி முடித்தார். சிவப்பு மணல் கற்கள் மற்றும் பளிங்கு கற்களால் கட்டி முடிக்கப்பட்டது. 14.3 மீட்டர் விட்டம் கொண்டது மேலும் மேலே செல்ல செல்ல 2.7 மீட்டர் குறுகிய நிலையில் காணப்படுகிறது.
இது டெல்லி மொகராலி பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலம் ஆகும். குதுப்மினாருக்கு இந்த பெயர் எப்படி வந்தது… குத்புதீன் ஐபக் உத்தரவிட்டதால் அவர்கள் பெயரால் குதுப்மினார் என அழைக்கப் பட்டது. அக்காலத்து போர் அறிவிப்பு தொழுகை அறிவிப்புகள் எச்சரிக்கை செய்திகள் அனுப்ப இந்த மினாரை பயன்படுத்தினார்கள். இந்த மினாரில் குர்ஆனின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய மற்றும் பெர்சிய நாட்டு கலை அம்சங்களைக் கொண்டது இந்த மினார். இந்த வளாகத்தில் புத்தர்கள் காலத்தில் உள்ள ஒரு பிரம்மாண்ட இரும்புத்தூண் உள்ளது. சுமார் 2000 ஆண்டுகளாகியும் இன்னும் துருப்பிடிக்காமல் உள்ளது இந்த இரும்பு தூண். இந்தத் தூணில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகிறது. இந்த தூண் ஒரு அறிவியல் அதிசயமாக காணப்படுகிறது.
குதுப்மினார் உள்ளே செல்ல செல்ல படிக்கட்டுகள் அமைத்து அதன் உச்சி வரை சென்று பார்க்க வசதி உள்ளது. 1981இல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-ககும் மேற்பட்ட நபர்கள் இறந்து போனார்கள்.
எனவே தற்போது இந்த படிக்கட்டில் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குதுப்மினார் வளாகத்தில் இமாம் கல்லறை அலாவுதீன் கில்ஜி கல்லறை சுல்தான் நினைவுச் சின்னங்கள் உள்ளன.
குதுப்மினார் என்றால் அரபு மொழியில் துருவம் அல்லது அச்சு என பொருள்படும். இந்த இடத்தில் இமாம் கல்லறை மற்றும் மிகப்பெரிய சூரிய கடிகாரம் உள்ளது. 1993 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக இதை அறிவித்தது. இதை ஒட்டி உள்ள மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி என கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மினார் கட்டி முடிக்கப்பட்டது.
1505 ல் ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது இந்த மினார் பாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் அருகே உள்ள இரும்புத்தூண் ஆறுடன் எடை கொண்டது.
1.12 மீட்டர் சுற்றளவு கொண்டது. குதுப்மினார் இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கோபுரம் ஆகும். இதன் ஒவ்வொரு அடுக்கும் கோண வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
1981 ஏற்பட்ட விபத்துக்கு பிறகு பொதுமக்கள் இதன் அடித்தளத்தையும் கீழே இருந்து மேல்பகுதியில் பார்வையிடும் வசதி உள்ளது. இந்தக் குதுப்மினாரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்வையிடலாம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் மாதத்தில் குதுப் திருவிழா நடைபெறும்.
குதுப்மினார் லால்கோட் அருகில் கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 240 அடி. 379 சுழல் படிகள் உள்ளன. ஒவ்வொரு இந்தியரும் பார்க்கவண்டிய அற்புதமான இடம் டெல்லி குதுப்மினார் என்றால் மிகையாகாது. அப்படியே அருகில் உள்ள புகழ்பெற்ற இரும்பு துணையும் பார்த்துவிட்டு வரலாம்.