சித்தன்னவாசலை போலவே ஓவியக் கலைக்கு புகழ் பெற்ற அர்மா மலை குகை!

Arma Hill cave is famous for its paintings like Siddannavasal
Arma Hill cave is famous for its paintings like Siddannavasalhttps://www.hindutamil.in
Published on

மிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சமண குகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள கழுகுமலை, சித்தன்னவாசல், மதுரைக்கு அருகில் உள்ள யானைமலை, புதுக்கோட்டை நாகமலை மற்றும் பொள்ளாச்சிக்கு அருகில் திருமூர்த்தி மலை என சமணர்களின் குகைகள் அமைந்துள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் மலையம்பட்டு கிராமத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஆர்மா மலை குகை. இந்த குகை பழங்கால ஓவியங்களுக்காக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

8ம் நூற்றாண்டை சேர்ந்த சமண குகை இது. இயற்கையாக உருவான நினைவுச் சின்னமான இதன் சுவர்களில் மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் காணப்படுகிறது. இவை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகையில் காணப்படும் ஓவியங்களைப் போன்று இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்த நினைவுச் சின்னமான பழங்கால குகை மலை அடிவாரத்திலிருந்து 100 அடி தொலைவில் நூறு கிரானைட் படிகளுடன் அமைந்துள்ளது. குகை பல அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 70 - 80 நபர்கள் தங்கக்கூடிய வகையில் மண் மற்றும் சுடப்படாத செங்கற்களால் இது அமைக்கப்பட்டுள்ளது. 3000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த குகையின் கூரை மற்றும் சுவர்களில் அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் சமணர்கள் மற்றும் அஷ்டதிக் பாலர்களின் கதைகளை சித்தரிக்கும் வகையில் உள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் கிளிகள் மற்றும் பலவிதமான பூக்கள் காணப்படுகின்றன.

குகை ஓவியம்
குகை ஓவியம்https://www.bbc.com

இந்த குகை சமணர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் நீண்ட பயணம் மேற்கொண்ட சமணர்கள் இந்த ஆர்மா மலை குகையில் தங்கி சமண மத கோட்பாடுகளை எடுத்துரைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. மேலும், இந்த ஆர்மா மலை குகையில் காக்கும் தெய்வங்களை வழிபடுவதற்காக பாறைகளில் புடைப்புச் சிற்பங்களை வடித்து வணங்கி வந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகவும் பழைமை வாய்ந்த ஐந்து ஓவியக் கலைகள் தெரியுமா?
Arma Hill cave is famous for its paintings like Siddannavasal

தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உடைந்த கிரானைட் படிகள் சரி செய்யப்பட்டு நினைவுச் சின்னங்கள் மேலும் சேதமடையாமல் இருக்க வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குகை பாறை ஓவியங்கள் 1960களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துக்களும் சுவர்களில் காணப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com