சுராஹி: தமிழர் கலை, பாரம்பரியம் மற்றும் ஆரோக்கியத்தின் சின்னம்!

Surahi
Surahi

‘சுராஹி’ – கேள்விப்படாதப் பெயராக உள்ளதே என்று யோசிக்கிறீர்களா? தமிழில் நீர்க் குடம் என்றால் தெரியுமா? ஆம்! சுராஹி என்றழைக்கப்படும் இந்தியாவின் பாரம்பரியமிக்க இந்த நீர்க்குடம் இந்தியாவின் கலை, பாரம்பரியம், ஆரோக்கியம், வரலாறு என அனைத்தையும் தாங்கி நிற்கிறது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? வாருங்கள் அதனைப் பற்றிய இன்னும் சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்தப் பண்டைய இந்தியர்கள் இயற்பியலையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய ஒரு பொருள்தான் சுராஹி. இன்னும் சொல்லப்போனால் சிந்து சமவெளி நாகரிகத்தின் போது பண்டைய மக்கள் இதனைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. முழுக்க முழுக்க களிமண்களால் மட்டுமே செய்த இந்த சுராஹியின் வாய் மிகவும் குறுகிய நிலையில் வடிவமைக்கப்பட்டதால் கிளாஸ்களில் ஊற்ற மிகவும் வசதியாக இருந்தது. சுராஹியின் மூலம்தான் முதன்முறையாக கழுத்துப் போன்ற வளைந்த மெல்லிய மற்றும் குறுகிய வடிவமைப்பு குவளை தோன்றியது.

முதலில் வெறும் களிமண் வைத்து செய்யப்பட்ட இந்த சுராஹி முகலாய காலத்தில்தான் நுனுக்கமான கலை வடிவங்களுடன் தயாரிக்கப்பட்டது. அதனாலேயே கலைநயமிக்க சுராஹியில் இஸ்லாமியர்களின் கலைநயம் சாயல் அமைந்திருக்கும். காலங்கள் மாற மாற களிமண்ணிலிருந்து வெண்கலம், சில்வர், சிராமிக் போன்ற அனைத்திலும் இந்த சுஹாரி செய்யப்பட ஆரம்பித்தது.

Surahi before mughal empire
Surahi before mughal empire

அதேபோல் பழங்கால இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த சுராஹி பயன்படுத்தப்பட்டது. அதற்குக் காரணம் இது எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒன்று என்பதுமட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்ததால்தான். ஆம்! பானை தண்ணீரை விட இந்த சுராஹியில் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதேபோல் இந்த சுராஹியிலிருந்து நீர் குடிப்பதால் நமது உடலில் பிஅச் சமநிலையில் இருப்பததோடு, மெட்டபாலிசத்தையும் அதிகரித்து, செரிமானத் தன்மையையும் அதிகரிக்கிறது. ஆகையால்தான் சுராஹி ஆரோக்கிய மேம்பாட்டிலும் பங்களிக்கிறது என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த சுராஹியை அனைத்து மதங்களின் சடங்குகளுக்கும் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் இன்றும் இது கலாச்சார முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

அதன்பின்னர் இதன் வடிவமைப்புகள் டிசைன்கள் ஆகியவை இதனை அத்தியாவசியத்திலிருந்து அழகியலுக்கு மாற்றியது. ஆம்! மிகவும் பாரம்பரியமாக ஒவ்வொரு வீட்டிலும் வைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்திய இந்த சுராஹி 19ம் நூற்றாண்டுகளில் வீடுகளில் அலங்காரப் பொருட்களில் ஒன்றாக மாறியது. நுனுக்கமான கலைநயமிக்க இந்த சுராஹி உடைந்தால் கூட அந்த உடைந்த அழகுடனே வீட்டு அலங்காரத்திற்காக வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த உடைந்த அழகுகூட பிரம்மாண்டமாகவே உள்ளதாக நம்பப்படுகிறது. இதன் பயன்பாடு குறைந்தால்கூட இன்னும் இதனை அருங்காட்சியகத்திலும் பாரம்பரிய கண்காட்சிகளிலும் வைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
Shell Shock: முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் சந்தித்த உளவியல் பாதிப்பு!
Surahi

அதேபோல் இன்னும் சில கிராமப்புற வீடுகளில் இந்த சுராஹியை நீங்கள் பார்க்கலாம். அதேபோல் என்னத்தான் வெண்கலம், பித்தளை, களிமண், கண்ணாடி என அனைத்திலும் செய்யப்பட்டாலும் பிளாஸ்டிக்கில் மட்டும் இதனை செய்வதேயில்லை. ஏனெனில் இதன் பாரம்பரியம், ஆரோக்கியம், வரலாறு மற்றும் கலை ஆகியவை இதனின் மரியாதையாகக் கருதப்படுகிறது என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com