Shell Shock: முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் சந்தித்த உளவியல் பாதிப்பு!

Shell Shock
Shell Shock
Published on

முதல் உலகப்போர் மனித வரலாற்றில் நடந்த மிகக் கொடிய போர்களில் ஒன்றாகும். இதன் விளைவாக இதில் கலந்துகொண்ட போர்வீரர்களுக்கு உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் போர் வீரர்கள் அனுபவித்த துன்பங்களில் உளவியல் பாதிப்பான Shell Shock குறிப்பிடத்தக்கது. இந்தப் பதிவில் முதல் உலகப்போரில் வீரர்கள் சந்தித்த ஷெல் அதிர்ச்சியின் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம். 

Shell Shock என்றால் என்ன? 

Shell Shock என்பது ‘போர் அழுத்த எதிர்வினை’ என சொல்லப்படுகிறது. இது முதல் உலகப்போரின்போது போர் வீரர்கள் அனுபவித்த உளவியல் அறிகுறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சொல். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கவலை, கனவுகள், உறுதியேற்ற தன்மை, நினைவாற்றல் இழப்பு, கட்டுப்படுத்த முடியாத உடல் நடுக்கம் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு துன்பகரமான அறிகுறிகளை வெளிப்படுத்தினர். 

காரணங்கள்: பதுக்கு குழிகளில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து போர் புரிந்தது, ஷெல் அதிர்ச்சிக்கு வழிவகுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயம், மரண அச்சுறுத்தல் மற்றும் போர்க்களத்தில் பெரும் சத்தம் ஆகியவற்றை வீரர்கள் நீண்ட காலமாக வெளிப்படுத்தினர். இடைவிடாத தாக்குதல்கள் மற்றும் தோழர்கள் காயம் அடைவது அல்லது கொல்லப்படுவது ஆகியவை, மற்ற போர் வீரர்கள் மீது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மன உறுதியை உடைத்தது. 

மேலும் போர்வீரர்கள் நீண்ட காலம் பதுங்கு குழிகளில் இருந்ததால் இதன் நிலைமை மேலும் மோசமானது. பதுங்கு குழிகளில் கூட்ட நெரிசல், சுகாதாரமற்ற நிலை, தொடர் ஈரப்பதம், தூக்கமின்மை, சோர்வு மற்றும் மரணம் தொடர்பான சம்பவங்கள் வீரர்களின் மனநிலையை முற்றிலும் சிதைத்து ஷெல் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. 

Effects of shell shock.
Effects of shell shock.

அறிகுறிகள்: ஷெல் அதிர்ச்சி பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. எனவே அதைக் கண்டறிந்து புரிந்து கொள்வது கடினம். இதனால் பாதிக்கப்பட்ட வீரர்கள் அடிக்கடி கடுமையான பதற்றம் அல்லது திடீர் உணர்ச்சி வெளிப்பாடுகளால் சத்தங்களை ஏற்படுத்தினர். இத்தகைய கடுமையான உணர்ச்சி துயரத்திற்கு வழிவகுத்தது. கட்டுப்பாடில்லாத நடுக்கம், பக்கவாதம், திடீர் புன்னகை, ஞாபகம் மறதி போன்றவற்றை இதனால் பாதிக்கப்பட்ட போர்வீரர்கள் அனுபவித்தனர். சில வீரர்கள் தங்களது சொந்த அடையாளங்களைக் கூட மறந்துவிட்டனர். இது சிப்பாய்களின் போரிடும் திறனை பாதித்தது மட்டுமில்லாமல், போருக்குப் பிந்திய சராசரி வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தது.  

இதையும் படியுங்கள்:
AC வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
Shell Shock

கற்றுக்கொண்ட பாடங்கள்: முதல் உலகப்போரின் போது வீரர்கள் அனுபவித்த ஷெல் அதிர்ச்சி அடுத்தடுத்த போர்களின்போது, மனநல பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு சிகிச்சையளிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை ஒரு தீவிர உளவியல் நிலையாக அங்கீகரித்ததால், ஷெல் அதிர்ச்சியை பற்றிய பல புரிதல்களைத் தெரியப்படுத்தியது. இதன் மூலமாக ராணுவ வீரர்களுக்கு மனநல உதவி தேவை என்பதை உணர்ந்து கொண்டனர். 

இந்த அதிர்ச்சியின் மூலமாக ராணுவ வீரர்களின் மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது தொடங்கப்பட்டது. இதனால் தொடக்கத்திலேயே அவர்கள் மன உறுதியை வெளிப்படுத்தும் பல சவால்களுக்கு அவர்களை உட்படுத்தத் தொடங்கினர். இப்போது இத்தகைய மனநிலைகளைப் புரிந்துகொண்டு சிகிச்சையளிப்பது மேம்பாட்டிருந்தாலும், வரலாற்றில் போர் வீரர்கள் ஷெல் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது, சரித்திர நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com