தெருக்கூத்து
தெருக்கூத்து

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

ம் கிராமப் பகுதிகளில் மிகவும் புகழ் பெற்றது தெருக்கூத்து. தெருக்கூத்து நடக்கிறது என்றால் அந்த கிராமமே அந்த இடத்தில் குழுமி இருக்கும். எல்லோரும் ரசித்துப் பார்ப்பார்கள். இப்பொழுது இருக்கும் தலைமுறைக்கு தெருக்கூத்து என்றால் என்வென்று தெரியாத அளவுக்கு அந்த கலை முற்றிலுமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தெருக்கூத்தில் நடிக்கும் அந்த கலைஞர்களின் குரல் வளம், அடடா கேட்கவா வேண்டும்? கம்பீரமாக கண்ணீரென்று இருக்கும். ரசாயனம் இல்லாத ஒப்பனை, ஒவ்வொரு தெய்வங்களையும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்.

தமிழகத்தில் அழிந்து வரும் கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்றாகும். தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக, ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் நன்கொடை வழங்குவர் கலைஞர்களுக்கு.

தற்காலத்தில் இக்கலை அருகி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்கள் இன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடு பரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளால் ஆகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல், வசனம் ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்.

தெருக்கூத்து
தெருக்கூத்து

தெருக்கூத்து வெறும் பொழுதுபோக்காக அன்றி கோயில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களைக் கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து, பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரி பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள்:
ஜல்ஜீரா என்றால் என்ன தெரியுமா?
தெருக்கூத்து

நம் பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் இன்னும் மிஞ்சிப்போய் இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களை அழைத்து நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகள் நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு நம் கலை கலாசாரத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com