ஜல்ஜீரா என்றால் என்ன தெரியுமா?

Jaljeera
Jaljeerahttps://manjulaskitchen.com
Published on

ல்ஜீரா என்பது அநேக ஆரோக்கிய நன்மைகளுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் சுவையும் கொண்ட, கோடை காலத்தில் அருந்தக் கூடிய ஒரு பானம் ஆகும். லேசான புளிப்பு சுவை கொண்ட இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன்  நல்ல நீரேற்றம் தரவும், பசியைத் தூண்டவும், சீரான செரிமானத்துக்கு உதவவும் செய்கிறது.

கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீரில், வறுத்து அரைத்த ஜீரகப் பொடி, பிளாக் சால்ட், புதினா இலைகள், இஞ்சி மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து ருசிக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்தால் கிடைப்பதே ஜல்ஜீரா.

இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைப் பொருள்கள் மற்றும் ஸ்பைஸஸ்களின் கலவை இதற்கு ஒரு மாறுபட்ட சுவையையும் புத்துணர்ச்சி தரும் குணத்தையும் தருகிறது. இந்த பானம் கோடைக் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. மேலும், அப்போது உடலில் தோன்றும் வியர்வை, கட்டிகள், கொப்புளங்கள், சோர்வு ஆகிய அசௌகரியங்களைக் குறைக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் இன்னும் ஏன் உட்டி மரங்கொத்தியை ரசிக்கிறார்கள் தெரியுமா?
Jaljeera

இதில் சேர்க்கப்படும் சீரகம் மற்றும் பிளாக் சால்ட் அஜீரணத்தைத் தடுத்து நல்ல செரிமானம் நடைபெற உதவுகின்றன. இதில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரானது கோடையிலும் கடினமான உடல் உழைப்பிற்குப் பின்னும் உடலில் தேவையான நீரோட்டம் நிறைந்திருக்க உதவுகிறது.

ஜல்ஜீராவில் சேர்ந்திருக்கும் கூட்டுப் பொருட்களின் அடிப்படையில், வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கிறது. இதனால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.

இத்தனை நற்பயன்கள் தரும் ஜல்ஜீராவை நாமும் தயாரித்து அருந்துவோம்; நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com