'BATA' இந்திய பிராண்ட் இல்லையா? பெரும்பாலான இந்தியர்கள் அறியாத உண்மை வரலாறு!

சாமானியர்களின் பிராண்டாக மாறிய உலகளாவிய காலணி சாம்ராஜ்யத்தின் பிரமிப்பூட்டும் பின்னணி கதை.
பாட்டா வரலாறு - , Bata Shoes
பாட்டா வரலாறு - , Bata Shoes
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on: 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பென்றால் நமக்கு ஞாபகம் வருவது BATA என்ற பெயர்தான். BATA ஷோரூம் இல்லாத நகரம் என்ன ஊரை கூட பார்க்க முடியாது. முதன் முதலில் செருப்புகளை அட்டகாசமான செருப்புக்கடைகளை அமைத்து வாடிக்கையாளர்களை இழுத்தது இந்த நிறுவனம்தான்.

TATA ன்னா எப்படி steelஓ பாட்டான்னா காலணிகள். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுதும் செருப்புகளுக்கும் ஷூக்களுக்கும் பெயர்போன இந்த நிறுவனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

1894 இல் ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசின் (தற்போது செக் குடியரசு - Czech Republic) லோசான் என்ற நகருக்கு அருகில் உள்ள 'ஸ்லின்' (Zlín) என்ற சிறிய நகரில் தொடங்கப் பட்டதுதான் இந்த சர்வதேச நிறுவனம். இதை நிறுவியவர்கள் பெரிய பணக்காரர்களோ கொம்பர்களோ இல்லை.

ஒரு சாதாரண பரம்பரை பரம்பரையாக செருப்பு தைக்கும் அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் COBBLER குடும்பத்தில் வந்தவர்களான தாமஸ் பாட்டா அவரது சகோதரர் அண்டோனின் மற்றும் அவர்களின் சகோதரி அன்னா ஆகிய மூவரால் தொடங்கப்பட்டதுதான் பாட்டா.

தற்போது உலகம் முழுதும் கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்தில் உள்ள லோசான் என்ற நகரில் உள்ளது.

ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்க, தாமஸ் பாட்டா தோல் விலையைவிட குறைவான விலையுள்ள துணிகளைப் (Canvas) பயன்படுத்தி காலணிகளை தயாரித்தார். இந்த எடை குறைவான, மலிவான காலணிகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஐரோப்பாவில் முதன்முதலில் காலணி தயாரிப்பில் நீராவி எஞ்சின் இயந்திரங்களையும் (Steam-driven machinery) அசெம்பிளி லைன் (Assembly Line) முறையையும் புகுத்தி, காலணிகளை பெருமளவில் (Mass Production) தயாரித்த பெருமை பாட்டாவையே சேரும்.

பாட்டா வரலாறு - , Bata Shoes
பாட்டா வரலாறு - , Bata Shoes

பாட்டா நிறுவனம் எங்கு தொழிற்சாலை தொடங்கினாலும், தன் தொழிலாளர்களுக்கான வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் திரையரங்குகள் கொண்ட முழுமையான நகரங்களை உருவாக்கியது. இந்தியாவில் உள்ள 'பாட்டா நகர்' (Batanagar - கொல்கத்தா) இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

பாட்டா நிறுவனம் இன்று 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் 5,300-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டு, உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான ஜோடி காலணிகளை ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது.

பாட்டா நிறுவனம் 1931-ல் இந்தியாவில் கால் பதித்தது. முதலில் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள கொன்னகர் (Konnagar) என்ற இடத்தில் சிறிய அளவில் உற்பத்தியைத் தொடங்கியது.

விடுதலைக்கு முன்பே இந்தியாவில் காலூன்றியதாலும், ஒவ்வொரு சாமானிய இந்தியரின் பள்ளிப் பருவம் மற்றும் அலுவலக வாழ்க்கையோடு (White canvas school shoes & Bata Sandals) இரண்டறக் கலந்ததாலும், பெரும்பாலான இந்தியர்கள் இன்றும் பாட்டாவை ஒரு இந்திய நாட்டு நிறுவனம் என்றே நம்புகிறார்கள்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பாட்டா கடைக்கு செருப்பு வாங்க போவதென்றால் அதனை குஷி. வகை வகையாக டிசைன் டிசைனாக அந்த காலத்திலேயே செருப்புக்களை அடுக்கி வைத்திருப்பார்கள். வீட்டில் ஒருத்தருக்கு செருப்பு வாங்க எல்லோரும் அக்கடிக்குள் புகுந்து விடுவோம்.

பெண்களுக்கு அந்த காலகட்டத்திலேயே High Heel காலணிகளை தயாரித்தது இந்த நிறுவனம். அதையெடுங்கள் இதை எடுங்கள் என்று படுத்தி விடுவோம். அப்போதே சிண்ட்ரெல்லா அணிந்தது போன்று காலணிகளை இந்நிறுவனம் தயாரித்தது.

இந்தியாவில் பாட்டாவிற்கு ஹோசூர் (தமிழ்நாடு), பாட்டா நகர் (மேற்கு வங்கம்), பரிதாபாத் (ஹரியானா), மற்றும் பாட்டகஞ்ச் (பீகார்) உட்பட 5 முக்கிய உற்பத்தி ஆலைகள் உள்ளன.

உலகளாவிய பாட்டா நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் கட்டாரியா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com