'அடி' என்ற ஈரெழுத்துச் சொல்... அதற்கு இத்தனை அர்த்தங்களா? வியந்துப் போன வெளிநாட்டுக்காரன்!

Beauty of Tamil(தமிழ்) Language
Beauty of Tamil Language
Published on

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் மொழி' என்று சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தொன்மையான தமிழ்மொழியின் இனிமையையும், சிறப்பையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஒருமுறை தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்த வெளிநாட்டுக்காரன் ஒருவன் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியைக் படிக்கத் தொடங்கினான். 'அடி' என்ற ஒரே வார்த்தையை மட்டுமே கற்றுக் கொண்டான்.  ஆனால், அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை ஆசிரியரிடன் அவன் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவில்லை.

அவன் நேராக பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றான். அங்கே இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 'குதிரை பந்தயத்தில் பணத்தை கட்டி செம அடி வாங்கி விட்டேன்' என்று ஒருவன் கூறினான். அதற்கு அந்த வெளிநாட்டுக்காரன் 'அடி' என்றால் என்னவென்றுக் கேட்டான். அதற்கு அந்த நண்பர்கள் 'பெருத்த நஷ்டம்' என்று கூறினார்கள்.

பேருந்து வந்ததும் ஏறினான். அந்த பேருந்தில் இருந்த கூட்டத்தில் திருக்குறளின் இரண்டாவது அடி (வரி) சரியாக தெரியாமல் மறைத்தது. உடனே அங்கிருந்தவரை குனிய சொல்லி இரண்டாவது அடியை (வரியை) படித்தான்.

அப்போது கண்டக்டர் படியில் தொங்கிக் கொண்டிருந்தவர்களை ஒரு அடி முன்னே வர சொன்னார். அதாவது பேருந்துக்குள் ஒரு அடி உள்ளே நகர்ந்து வர சொன்னார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டே அந்த வெளிநாட்டுக்காரன் ஆசிரியர் வீட்டிற்கு செல்கிறான். இவனை பார்த்து வரவேற்ற ஆசிரியர், 'வலது அடியை எடுத்து வைத்து உள்ளே வாங்க!' என்று கூறினார்.

அதாவது வலதுக்காலை எடுத்து வைத்து வர சொன்னார். அப்படியே வீட்டை சுற்றிக் காட்டிக்கொண்டிருந்த போது வேலைக்காரி துணியை துவைத்துக் கொண்டிருந்தாள். அதற்கு அந்த ஆசிரியர், துணியை நன்றாக அடித்து துவைக்க சொன்னார். அப்படியே கிணத்தைக் காட்டி, 'நம் வீட்டில் ஆறு அடியில் (அளவு) தண்ணீர் இருக்கிறது பாருங்கள்!' என்று கூறினார். அந்த வெளிநாட்டுக்காரன் வியந்துப் போய்விட்டான்.

'அடி' என்ற இரண்டு எழுத்தை மட்டும் தான் கற்றுக் கொண்டேன். ஆனால், அதற்கு இத்தனை அர்த்தங்கள் இருக்கிறதா? என்று தமிழ் மொழியின் சிறப்பை எண்ணி வியந்தானாம்.

காளமேகப்புலவர் எழுதிய அழகிய சொல் சித்திரப் பாடல்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது.

இந்த பாடல் முழுவதும் 'தா' எழுத்து வரிசையிலேயே எழுதப்பட்டிருப்பது புலவரின் அறிவுத்திறனை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. இந்த பாடலின் அர்த்தம் என்னவென்றால், தத்தித் தாவிப் பறந்து சென்று பூக்களில் இருக்கும் தேன் துளியான தாதுவை (தேன் துளிகளை) உண்கின்ற வண்டே! ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின்பு மீண்டும் வேறு ஒரு பூவில் சென்று தாது எடுத்து உண்கிறாய். உனக்கு எந்த பூவினுள் உள்ள தேன் தித்தித்தது? என்பது பொருளாகும்.

இதையும் படியுங்கள்:
காஞ்சிப் பட்டா? போச்சம்பள்ளி பட்டா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க!
Beauty of Tamil(தமிழ்) Language

இது தமிழ் மொழியின் பெருமையையும், சிறப்பையும் நமக்கு உணர்த்துகிறது. தமிழ் மொழியை கற்க கற்கவே அதனுடைய இனிமையை நம்மால் உணர முடியும். அதனால் தான் பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்' என்று கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com