லண்டன் நகரின் 'பிக் பென்': பெரிய கோபுரமா? பெரிய மணியா?

Big Ben
Big Ben
Published on

பிக் பென் (Big Ben) என்பது இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster) கோபுரத்தில் உள்ள பிரபலமான மணி மற்றும் மணிக் கோபுரத்திற்குக் கொடுக்கப்பட்ட பெயர்.

பொதுவாக மக்கள் 'பிக் பென்' என்று சொல்லும்போது, அந்தக் கோபுரம் முழுவதையும் குறிக்கிறார்கள். உண்மையில், பிக் பென் என்பது அந்தக் கோபுரத்தில் உள்ள பெரிய மணியின் பெயர் மட்டுமே.

பிக் பெனின் வரலாறு

தொடக்கக் கட்டுமானம்: 1834-இல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (British Parliament) பெரும் தீ விபத்தில் அழிந்தது. அதன் பிறகு புதிய அரண்மனை கட்டத் திட்டமிடப்பட்டது. அதில் ஒரு பிரமாண்டமான மணிக் கோபுரத்தையும் (Clock Tower) அமைக்க முடிவு செய்யப்பட்டது. 1843-ல் கட்டுமானம் தொடங்கப்பட்டது; 1859-ல் நிறைவுற்றது. இதை கோத்திக் மறுமலர்ச்சி (Neo-Gothic Revival) பாணியில் வடிவமைத்தவர் Charles Barry மற்றும் Augustus Pugin. 1859-இல் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டில் வந்தது.

இதையும் படியுங்கள்:
வீட்டின் எந்த அறையில் எந்த மாதிரி புகைப்படங்களை மாட்டலாம்?
Big Ben

பெயரின் தோற்றம்: 'Big Ben' என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக கோபுரத்திற்கல்ல, பெரிய மணிக்கே.

இந்தப் பெயர் வந்தது குறித்து இரண்டு கருத்துகள் உள்ளன.

அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் 'Ben Caunt' என்ற பிரபலமான குத்துச்சண்டை வீரர் இருந்தார். அவர் உடல் அளவில் பெரியவரும், புகழ்பெற்றவரும் என்பதால், அந்தப் பெரிய மணிக்கும் 'Big Ben' என்று மக்கள் நகைச்சுவையாக அழைக்கத் தொடங்கியதாக ஒரு கருத்து உள்ளது.

பிக் பென் மணி நிறுவப்பட்ட காலத்தில், Sir Benjamin Hall என்ற ஒருவர் பொது வேலைத் துறை அமைச்சராக (Commissioner of Works) இருந்தார். அவர் உயரமானவரும், பெரிய உடல் கட்டமைப்பு கொண்டவரும் ஆவார். அவரின் பெயரை நினைத்து, அந்தப் பெரிய மணிக்கு 'Big Ben' என்று பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

பெயர் மாற்றம்

2012-இல், மகாராணி எலிசபெத் II-இன் வைர விழாவை (Diamond Jubilee) கொண்டாட, மணிக் கோபுரத்தின் பெயர் Elizabeth Tower என மாற்றப்பட்டது.

பிக் பெனின் முக்கியத்துவம்:

இங்கிலாந்தின் தேசியச் சின்னம்

லண்டன் நகரின் அடையாளம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது பிக் பென். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அடையாளமாகவும், ஜனநாயகத்தின் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற மணி

பிக் பெனின் மணி ஒலி BBC-யின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் அடிக்கடி ஒலிக்கிறது. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களிலும், முக்கிய அரச நிகழ்வுகளிலும் இதன் மணி ஒலிக்கிறது. கோத்திக் மறுமலர்ச்சி பாணியின் சிறப்பான எடுத்துக்காட்டு. உலகம் முழுவதும் வரும் சுற்றுலாப் பயணிகள் லண்டனில் கண்டிப்பாக பார்ப்பது பிக் பென் தான்.

வரலாற்றின் சாட்சியம்

இரண்டாம் உலகப் போரின் போது லண்டன் மீது ஜெர்மனிகள் குண்டு வீசிய போதிலும், பிக் பென் மணியோ ஒலித்துக்கொண்டே இருந்தது. அது பிரிட்டிஷ் மக்களின் உறுதியையும் துணிச்சலையும் குறிக்கும் ஒரு சின்னமாகியது.

இதையும் படியுங்கள்:
அதிசயக் கனவினால் நமக்குக் கிடைத்த 'டிவைன் காமடி'!
Big Ben

சுற்றுலா மற்றும் கலாசாரம்

ஆயிரக்கணக்கான படங்கள், திரைப்படங்கள், சின்னங்கள், அஞ்சல் தலைகள், நினைவுப் பொருட்கள் அனைத்திலும் பிக் பென் இடம்பெற்றுள்ளது. இது லண்டனின் பிரபலமான landmark ஆக மட்டுமல்லாமல், உலக மக்கள் மனதில் 'London = Big Ben' என்ற அடையாளமாக நிலைத்துள்ளது.

பிக் பென் என்பது ஒரு சாதாரண மணி அல்ல; அது இங்கிலாந்தின் வரலாற்று பெருமையும், ஜனநாயக சின்னமும், உலக சுற்றுலா புகழும், கலாச்சார மரபும் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com