ஒடிசாவின் Bonda இன மக்கள்… வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்!

Bonda Tribes
Bonda Tribes

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வெளி இடங்களுக்கு செல்லும் மக்களும், வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த மக்களும் ஏராளம். அப்படி இந்தியாவுக்கு வந்து, இந்தியாவையே தங்களது தாய் நாடாக ஏற்றுக்கொண்ட மக்கள்தான் Bonda இன மக்கள். இவர்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறைகளைப் பற்றி பார்ப்போம்.

60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறிய முதல் இனம் Bonda இனம்தான். அதேபோல் அங்கிருந்து வந்த மக்கள், முதன்முதலாக இந்தியாவின்  காட்டுப் பகுதிகளில் குடியேறிய மக்களும் இவர்கள்தான்.

ஆகையால், இத்தனை வருடங்களுக்கு பின்னரும் ஆஃப்ரிக்கா மக்களின் சில பழக்க வழக்கங்களையே அவர்கள் பின்பற்றி வருவதாலும், அதே உடை மற்றும் அணிகலன்களின் வடிவமைப்புகளைப் பின்பற்றுவதாலும் இவர்கள் இந்தியாவின் மற்ற இன மக்களுக்கு விசித்திர மனிதர்களாகத் தோன்றுகிறார்கள். இந்த இனத்தின் மக்களை ஒன்றின் அடையாளத்துடன் தனித்துவப் படுத்தலாம். அதாவது இந்த இனத்தின் பெண்கள் கழுத்தில் வளையம் அணிந்துக்கொள்வார்கள்.

அதேபோல் மற்ற ஆபரணங்கள் அனைத்துமே தனித்துவமாகத்தான் இருக்கும். காடுகளில் வசித்த இவர்கள் விவசாயிகளாகவும், வேட்டையாடுபவர்களாகவும், காட்டில் கிடைத்தவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளாகவும்தான் இருந்தார்கள். இவர்களில் ஒரு பகுதி மக்கள் பயணம் செய்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இடங்களுக்கு குடிப்பெயர்ந்தார்கள். ஒருப்பகுதி மக்களே இன்னும் ஒடிசாவின் மல்காங்கிரி பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் கலாச்சாரத்தில் பர்மாவின் கலாச்சாரம் கலந்திருப்பதையும் பார்க்கலாம். அதேபோல் இவர்களின் வழக்கத்தின்படி பெண்கள் தன்னை விட 5 முதல் 10 வயது இளைய ஆண்களைத்தான் திருமணம் செய்துக்கொள்வார்கள். ஏனெனில், பெண்களின் இளமைக் காலத்தில் தன் கணவரை முழு பொறுப்புடன் பார்த்துக்கொள்வார்கள் என்பதும், அதேபோல் முதுமைக் காலத்தில் ஆண்கள் தங்கள் மனைவிகளைப் பார்த்துக்கொள்வார்கள் என்பது அவர்களின் எண்ணம்.

ஆஃப்ரிக்காவின் ஒரு பழக்கத்தை மட்டும் இன்றும் இவர்களில் அதிகமாக காணலாம். ஆம்! மலர்களிலிருந்து மதுவைத் தயாரித்து நாள் முழுவதும், அளவே இல்லாமல் குடிப்பார்கள். திருவிழாக்கள் போன்ற அனைத்து நிகழ்வுகளிலுமே மது அருந்துவது மட்டுமே முதன்மை. மற்றதெல்லாம் பிறகுதான். கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் செயல்படுவார்கள். இதுதான் Bonda மக்களின் ஒரு மோசமான பழக்கமாகும். ஏனெனில், அவர்கள் நாள் முழுவதும் மது அருந்துவார்கள் என்பதால், யாருமே அவர்களிடம் பேச இயலாது.

இதையும் படியுங்கள்:
ரஜப்புத்திரர்களின் புகழ்பெற்ற Kangra Paintings!
Bonda Tribes

அதேபோல் இவர்களுக்கு அடிப்படை வசதிகளும் இப்போது வரை இல்லை என்றே கூறப்படுகிறது. அதாவது நீரைத் தேடி காடுகளில் வெகுதூரம் அழைய வேண்டிய சூழல் இருக்கிறதாம். அந்த நீரும் சுகாதாரமில்லாமல் இருக்கும் என்றும், அதனால், அந்த மக்களுக்கு எளிதாக நோய் பரவுகிறது என்றும் கூறப்படுகிறது.

இப்போது, அந்த கிராமத்திற்குள் நீங்கள் செல்ல வேண்டும் என்றால், அனுமதி பெறாமல் உள்ளே செல்ல இயலாது. ஆனால், பலர் அனுமதிப்பெற்று அவர்களின் ஆடை, நகை வடிவமைப்புகளையும், கலாச்சாரத்தையும் பார்க்க அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com