ரஜப்புத்திரர்களின் புகழ்பெற்ற Kangra Paintings!

Kangra Painting
Kangra Painting

மலையடிவார மக்களின் பழமை வாய்ந்த ஓவியம், கங்க்ரா ஓவியம். அன்றைய காலங்களில் பஹாரி ஓவியப் பள்ளியில் பயில்விக்கப்பட்ட இந்த கங்க்ரா ஓவியம், பிற்பாடு அவர்களின் புகழ்பெற்ற ஓவியமாக மாறியது.

பழமைக்கும் கலைக்கும் பெயர்போன இந்தியாவில், எண்ணற்ற கலைகள் உள்ளன. கலைக்கு முக்கியத்துவம் கொண்ட பாரத நாட்டில், ஓவிய கலை என்பது போற்றத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. நமக்கு தெரியாத பல ஓவியக் கலைகளும் ஏராளம் உள்ளன. புதைந்துக் கிடைக்கும் கலைகளைத் தோண்ட ஆரம்பித்தோம் என்றால், கிடைத்தற்கரிய பல ஓவியங்கள் கிடைக்கும்.

அந்தவகையில், தற்போது ரஜப்புத்திரர்களின் கங்க்ரா ஓவியத்தைப் பற்றி பார்ப்போம்.

ரஜப்புத்திரர்கள் வாழ்ந்த 17ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மலை பகுதிகளுக்கு அடியில் வாழ்ந்த மக்களால்தான் இந்த கங்க்ரா ஓவியம் உருவாக்கப்பட்டது. அதாவது ஹிமாச்சல் பிரதேசம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு ஓவியம் என்றால், அது கங்க்ரா ஓவியம்தான். ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் கங்க்ரா ஆகும். அந்தப் பெயரே அந்த ஓவியக்கலைக்கும் சூட்டப்பட்டது. பின்னர், அந்த கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டது.

கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டாலும், ஓவியத்தின் பெயர் இன்று வரை கங்க்ராதான். இந்த ஓவியக்கலையில் ரஜப்புத்திரர்களின் டிசைன் மற்றும் முகலாய டிசைன்களையும் காண முடியும். முன்னதாக இந்த ஒவியத்தை அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளையே வண்ணமாகத் தீட்டினார்கள். பின்னர் நாளடைவில் ஹிந்து புராணக் கதைகளான மகாபாரதம், ராமாயணத்தின் நிகழ்வுகளை ஓவியமாகத் தீட்டினார்கள். அந்த ஒவியங்களை திருவிழாக்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தினார்கள்.

காங்க்ரா சமஸ்தானத்தின் ஆட்சியாளர்களிடமிருந்து பெரிய ஆதரவு கிடைத்தது. அவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் கங்க்ரா ஓவியர்களை நியமித்தனர். இதன்மூலம், அங்கு நடக்கும் நிகழ்வுகளும் ஓவியமாகத் தீட்டப்பட்டன. இந்து புராணங்கள், காதல் காட்சிகள் மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் காட்சிகள் ஆகியவற்றின் மேலாதிக்க கருப்பொருள்களைக் கொண்டுள்ளது இந்த ஓவியம். சிவப்பு, பச்சை மற்றும் தங்கம் போன்ற பிரகாசமான நிறமிகளைப் பயன்படுத்தினார்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே Fruit Facial செய்யும் வழிமுறைகள்!
Kangra Painting

உருவங்கள், ஜவுளிகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் சிக்கலான விவரங்களை துல்லியமாகப் பயன்படுத்தினார்கள்.

தற்போதும் இந்த கங்க்ரா ஓவியம் மிகவும் புகழ்வாய்ந்த ஓவியமாகவே இருந்து வருகிறது. ஆனால், நவீன காலத்திற்கேற்ப கங்க்ரா ஓவிய கலையும் பல மடங்கு வளர்ச்சியடைந்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com