
இளம் வயதிலேயே, இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் சுதந்திர இசை பயணத்தை தொடங்கிய BTS எனும் பாடல் குழவினருக்கு BIGHIT நிறுவனம் அரியதொரு வாய்ப்பு அளித்தது. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டு கொடுத்த தென்கொரிய இசை நிறுவனம்.
2021ல் HYBE என பெயர் மாற்றம் செய்யப்பட்ட BIGHIT என்ற இசை நிறுவனம், 2005ல் துவங்கப்பட்டது. பல இசை மற்றும் நடன கலைஞர்களை வெளிச்சப்படுத்திய நிறுவனம். இந்த வரிசையில் உலகில் பிரகாசித்த ஏழு நட்சத்திரங்களை பற்றி பார்ப்போம். 2010ல் உருவான ஏழு பேர் கொண்ட இசைக்குழுவாகிய 'BTS (Bangtan Sonyeondon)' 2013 இல் அதிகாரப்பூர்வமாக பிக்ஹிட் நிறுவனத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
RM (Kim nam-joon), Jin (kim Seok-jin), Suga (Min Yoon-Gi), J-hope (Jung Ho-seok), Jimin (Park Ji-min), V (Kim Tae-hyung) and Jungkook (Jeon Jung-kook) இவர்களின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, கடின உழைப்பு, மேம்பட்ட திறமைகள் இவர்களை உலகிற்கு பிரபலப்படுத்தின. இக்குழுவின் தலைவராக RM (Kim Nam-joon) செயல்படுகிறார். தங்களுடைய உணர்வுபூர்வமான பாடல் வரிகளை இசையின் மூலம் வெளிப்படுத்திக் குழந்தைகளையும், இளைஞர்களையும், முதியவர்களையும் ஊக்கப்படுத்திய இவர்களது பாடல்கள் தென்கொரிய pop இசை கலாச்சாரத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது. ஆரம்பக் காலத்தில் உலகிற்கு அறியப்படாமல் இருந்தும், பின்னர் வெள்ளை மாளிகையில் உரையாற்றியப் பெருமை இவர்களைச் சாரும். இக்குழுவின் தலைவரான RM, ஆசிய எதிர்ப்பு, வெறுப்பு மற்றும் இனப்பாகுபாடு பற்றி ஆற்றிய உரை பிரபலமானது.
இவர்கள் தங்கள் ரசிக குழுவிற்கு ARMY என பெயரிட்டுள்ளனர். மக்களை தங்களோடு ஒருங்கிணைக்கும் பாலமாக இவர்களின் இசை உலகமெங்கும் திகழ்கிறது. பல்வேறு நாடுகளுக்கு சென்று இசைக் கச்சேரிகளை பிரம்மாண்டமாக நிகழ்த்தி, தன் ரசிகர்களை மகிழ்வித்து நேர்மறை எண்ணத்தை மக்களிடம் பரப்புவதில் சிறந்தவர்களாக திகழ்கின்றனர்.
தென்கொரிய நாட்டில் வாழும் 18 முதல் 28 வயது வரையுள்ள இளம் ஆண்கள் அந்நாட்டு ராணுவத்தில் இரண்டு வருடம் கட்டாய பயிற்சி பெற வேண்டும் என்பது விதிமுறை. இதன் அடிப்படையில், இவர்கள் குறிக்கப்பட்ட தேதிகளில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, பயிற்சி காலத்தை வெற்றிகரமாக முடித்தவர்களாய் வந்துள்ளனர்.
தற்சமயம், ’the wait is over’ என்ற அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப உலகமெங்கும் உள்ள Army of BTS, ஜுன் 21 ம் தேதி இராணுவப் பயிற்சியை நிறைவு செய்யும் சுகா (Suga) வின் வருகைக்காகவும் மேலும் இவர்களின் தொடர் இசைப் பயணத்தை எதிர்பார்த்தும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர்களின் பயிற்சிக் காலத்திலும், மக்களோடு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக social media வில் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டே தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்.
ஒரு குறிப்பிட்ட இசை நிறுவனத்தின் கீழ் செயல்படும் இசைக்குழுவினர் 10 ஆண்டு காலம் மாத்திரமே ஒப்பந்தம் செய்ய முடியும் என்பது நியதி. இவர்களோ தங்கள் இசையினாலும், உணர்வுப் பூர்வமானக் கருத்துகளினாலும் கவரப்பட்ட தங்களுடைய ரசிக பெருமக்களுக்காக மேலும் 10 ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு!