கலாசார மரபு கொண்ட கையெழுத்துக் கலை!

ஆகஸ்ட் 14, உலக கையெழுத்து தினம்
கையெழுத்துக் கலை
கையெழுத்துக் கலை
Published on

ண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கு கடைசியாக கையால் கடிதம் எழுதியது எப்போது என்று நினைத்துப் பார்த்தால் பலருக்கும் நினைவில் வராது. ஏனெனில், டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில், கையால் எழுதுவதன் அவசியத்தை மறந்து விட்டோம். இதை நினைவூட்டுவதற்காகவே ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலக கையெழுத்து தினம் கொண்டாடப்படுகிறது.

அழகான கலை: கையெழுத்து என்பது ஒரு அழகான கலை. இது ஒருவரின் திறமை மற்றும் அனுபவத்தின் தனித்துவத்தை உலகத்திற்கு பறைசாற்றுவதற்கான கூடுதல் வாய்ப்பாகும். ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது.

பண்டைய தோற்றம்: கையெழுத்துக் கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. கிழக்கு ஆசியாவில் கையெழுத்து பற்றிய முதல் குறிப்பு கி.மு. நாலாயிரத்தில் பண்டைய சீனாவில் உருவானது. மேலும் எகிப்திலும் கையெழுத்துக் கலையின் ஆரம்பங்கள் காணப்படுகின்றன.

பலவிதமான பாணிகள்: வெவ்வேறு கலாசாரங்கள் அவற்றின் தனித்துவமான கையெழுத்து பாணிகளைக் கொண்டுள்ளன. கையெழுத்து கலையானது பல்வேறு கலாசாரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்த பண்டைய மரபுகளை ஒருங்கிணைக்கிறது. மேற்கத்திய ஐரோப்பிய, ஆசிய, சீன, ஜப்பானிய, இஸ்லாமிய கையெழுத்துக்கள் அவற்றின் உருவாக்கத்தின் மூலமாக எழுத்துக்கலையின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அரபு கையெழுத்து: இது இஸ்லாமிய கலை மற்றும் கட்டடக்கலையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கையெழுத்து வடிவம்.  சிக்கலான வடிவத்திற்கு பெயர் பெற்றது.

சீன கையெழுத்து: சீன கலாசாரத்தில் மிக உயர்ந்த கலை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் தூரிகை ஸ்ட்ரோக்குகள் தனித்துவம் மிக்கவை.

மேற்கத்திய எழுத்துக்கள்: இவை லத்தீன் எழுத்துக்களில் இருந்து உருவானவை. கோதிக் இத்தாலிய மற்றும் செப்பு தகடு போன்ற ஸ்டைலில் வடிவமைக்கப்படுகிறது.

கையெழுத்துக்கலையின் குறியீடுகள்: பல கலாசாரங்களில் கையெழுத்து என்பது வெறும் எழுத்து என்பதை தாண்டி நிறைய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஒருவருடைய ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அது இருக்கிறது.

கையெழுத்துக்கலையின் கருவிகள்: பேனாக்கள் மற்றும் தூரிகைகள்; வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு கருவிகள் தேவை. எடுத்துக்காட்டாக அரபு மற்றும் சீன எழுத்துக்கள் பெரும்பாலும் தூரிகைகளை கொண்டு எழுதப்படுகின்றன. அதே சமயம் மேற்கத்திய கையெழுத்து பொதுவாக நிப்புகளுடன் கூடிய பேனாவால் எழுதப்படுகின்றன. பாரம்பரிய கையெழுத்து மைகள் பெரும்பாலும் கையால் செய்யப்பட்டவை. சமையல் குறிப்புகள் கையால் எழுதப்பட்டு  பல தலைமுறைகளாக வலம் வருபவை.

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பரோட்டா!
கையெழுத்துக் கலை

தியான செயல்முறை: பல கலாசாரங்களில் கையெழுத்து பயிற்சி ஒரு தியான செயல்முறை போல கருதப்படுகிறது. சீரான, அழகான  எழுத்துக்களை உருவாக்குவதற்கு குவிந்த கவனம், நினைவாற்றல் மற்றும் மன அழுத்தம் இல்லாத தளர்வு நிலை அவசியம்.

நவீன காலத்தில் கையெழுத்துக்கலை: இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியிலும் கையெழுத்துக்கலை பிரபலம் அடைந்துதான் வருகிறது. பலர் இதை ஒரு கலை வடிவமாகவும் வேகமான டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகி இருக்க ஒரு வழியாகவும் கருதுகிறார்கள். ஜப்பானில் ஷேடோ என்கிற கலை வடிவமாக கருதப்படுகிறது. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இது ஒழுக்கம், செறிவு மற்றும் பொறுமையை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது.

தொழில்நுட்பத்தில் கையெழுத்து: கையெழுத்துக்கலையின் தாக்கம் நவீன அச்சுக்கலை வரை நீண்டுள்ளது. டிஜிட்டல் மீடியாவில் பயன்படுத்தப்படும் பல எழுத்துருக்கள் பாரம்பரிய கையெழுத்து பாணிகளால் ஈர்க்கப்பட்டு பழைய  புதிய பாணியில் மிளிர்கின்றன. உலகெங்கிலும் பாரம்பரிய மற்றும் சமகால கையெழுத்துக் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கையெழுத்துக்கலை போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

உளவியல் சிகிச்சை: கையெழுத்துக்கலை சிகிச்சை அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த மோட்டார் திறன் (கைகளை பயன்படுத்தி எழுதுவோர்) கொண்ட நபர்களுக்கு இது உதவுகிறது. எழுதும் செயல்முறையின் மூலம் உணர்ச்சி மற்றும் உளவியல் நன்மைகளை வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com