கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பரோட்டா!

ராகி, சோள மாவு, ஸ்வீட் பொட்டட்டோ பரோட்டா
ராகி, சோள மாவு, ஸ்வீட் பொட்டட்டோ பரோட்டா
Published on

ருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் விதத்தில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது மிகவும் அவசியம். இதற்காக அவர்கள் கீரை, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானிய வகைகள் அடங்கிய உணவுகளை வழக்கமாக உண்பதுண்டு. நார்ச்சத்து போன்ற நன்மை தரும் சத்துக்கள் பிரிக்கப்பட்டு  பதப்படுத்திய மைதா மாவில் உருளைக் கிழங்கு சேர்த்து தயாரிக்கப்படும் ஆலூ பரோட்டாவை சில கர்ப்பிணிப் பெண்கள் விரும்பி உண்பதும் வழக்கம்.

சத்துக்கள் குறைவான ஆலூ பரோட்டாவை உண்பதற்குப் பதில் கேழ்வரகு மாவு, வெள்ளைச் சோள மாவு மற்றும் ஸ்வீட் பொட்டட்டோ ஆகியவை கலந்து செய்யப்படும் பரோட்டாவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால் அது அவர்களுக்கும் கருவில் வளரும் சிசுவுக்கும் அதிகளவு நன்மை தரும். அந்த ராகி, சோள மாவு, ஸ்வீட் பொட்டட்டோ பரோட்டாவில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ராகி (Finger Millet)யில் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் மிக அதிகம் உள்ளன. இவை பெண்கள் கருத்தரித்திருக்கும் காலத்தில் அவர்களுக்கு அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் வராமல் பாதுகாப்பதோடு, எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுவடையச் செய்யும். சோள மாவானது காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் புரதச் சத்துக்களை அளிக்கக் கூடியது. இவை உடலுக்குத் தொடர்ந்து சக்தி கொடுத்து கர்ப்ப காலத்தில் பெண்கள் சோர்வடையாமல் இருக்க உதவும். ஸ்வீட் பொட்டட்டோ அதிகளவு பீட்டா கரோட்டீன் நிறைந்து.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதாரமாகும் ஆயில் புல்லிங்!
ராகி, சோள மாவு, ஸ்வீட் பொட்டட்டோ பரோட்டா

பீட்டா கரோட்டீன் உடலுக்குள் சென்று வைட்டமின் A யாக மாறி கரு வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். இந்த ராகி, சோள மாவு, ஸ்வீட் பொட்டட்டோ கலந்த பரோட்டா குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதனால் இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் பராமரிக்கப்பட்டு கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் தடுக்கப்படும். ராகி மற்றும் சோளத்தில் உள்ள நார்ச்சத்து சிறப்பான செரிமானத்துக்கு உதவும்; மலச் சிக்கலைத் தடுக்கும். ஸ்வீட் பொட்டட்டோவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும்.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ராகி, சோளம், ஸ்வீட் பொட்டட்டோ கலந்து செய்த பரோட்டாவை கர்ப்பிணிப் பெண்கள் ஆலூ பரோட்டாவிற்குப் பதில் உட் கொண்டு வந்தால் அவர்களின் ஆரோக்கியம் அதிசயிக்கத்தக்க வகையில் மேன்மை பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com