

விஜயநகர பேரரசுக்கும் அவர்கள் வழியாக வந்த நாயக்கர்வம்ச ஆட்சிக்கும் உட்பட்டு இருந்த பகுதிகள் கர்நாடக பிரதேசம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் தோன்றிய இசை கர்நாடக இசை (Carnatic music) என்று பிற்காலத்தில் பெயர் பெற்றது.
இதன் வரலாறு
கடந்த17 - 18 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியமா சாஸ்திரிகள் என்ற மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் ஆவர். அவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன.
கர்நாடக இசை ராகம், தாளம் என்னும் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ராகங்கள் ஏழு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது. சஜ்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஏழு ஸ்வரங்களும் சரிகமபதநி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகிறது.
வேறுபாடுகள்
இவற்றுள் மத்யமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரா, தைவதம் நிஷாதம் என்ற நான்கு ஸ்வரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 ஸ்வர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு ஸ்வரங்களைக் கொண்ட 72 வெவ்வேறு ஸ்வர அமைப்புகளைப் பெற முடியும்.
இவ்வாறு உருவாகும் ராகங்கள் 'மேளகர்த்தா ராகங்கள்' எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்துக்குரிய ஸ்வரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான ராகங்கள் பெறப்படுகின்றன.
நாதம்
சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து ஸ்ருதியும், ஸ்ருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்தில் இருந்து ராகமும் உண்டாகின்றன.
சுருதி
பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேஷ ஒலியே ஸ்ருதி. இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும் அலகு என்றும் அழைக்கப்படும். நாதத்தில் இருந்து ஸ்ருதி உண்டாகிறது. ஸ்ருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம், அதாவது ஸ்ருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஸ்ருதி சங்கீதத்திற்கு பிரதானம் என்பதால் 'ஸ்ருதி மாதா' என அழைக்கப்படும்.
ஸ்வரம்
இயற்கையாக இனிமையைக் கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். சங்கதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். தமிழ் இசையில் ஸ்வரத்திற்கு 'கோவை' எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும், தமிழ் பெயர்களும் பின் வருமாறு அமையும்.
தாளம்
கையால் ஆவது, கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்தி செல்கிறது. இது இசைக்கு தந்தை போன்றது. அதனால்தான் இசையில் சுருதி மாதா எனவும், லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அது துருதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது.
லயம்
பாட்டின் வேகத்தை ஒரே சீராக கொண்டு செல்வது லயம். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ, அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை. எனவே, இது பிதா எனப்படுகிறது லயம் மூன்று வகைப்படும்.
தியாகராஜர் இசையமைத்த கீர்த்தனைகள்
தியாகராஜார் 700க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இசையமைத்து எழுதியுள்ளார். இவை பெரும்பாலும் தெலுங்கு மற்றும் கன்னடத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இந்த கீர்த்தனைகளில் 212 ராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 121 கீர்த்தனைகளில் ஒரே ஒரு ராகம் பயன்படுத்தி தியாகராஜர் இசையமைத்துள்ளார். அதே சமயத்தில் ஒரு கீர்த்தனையில் அதிகபட்சமாக 66 ராகங்கள் பயன்படுத்திய ஒரே இசை மேதை என்றால் அது தியாகராஜர் தான்.
இவர் போன்ற பலவித்வான்கள் 2000 ஆண்டுகளாக கர்நாடக சங்கீதத்துக்கு புதிய வடிவம் கொடுத்து பல கீர்த்தனைகளை உருவாக்கினர். இன்று பல இளம் தலைமுறை கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்கள் உலக அளவில் பல இசைக் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.
இன்றும் ஜனவரி மாதத்தில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழா மிகவும் பிரபலமானது. தியாகராஜரின் சமாதிக்கு அருகே இசை நிகழ்ச்சிகள் நடக்கும். இதில் திருவையாறில் அனைத்து சங்கீத இசை கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைத்து பாடல்களை பாடி வருகின்றனர்.