
புரட்சியாளர்!
இப்போது நமது இளைஞர்களிடம் ஒரு வழக்கம் வந்து உள்ளது.
சே குவேரா படம் பொறித்த டீ-ஷர்ட் அணிவது. நான் சிலரைக் கேட்டும் பார்த்தேன். பலருக்கு சே குவேரா யார் என்றே தெரியவில்லை. பாரதி, பகத்சிங் போன்றவர்கள் டீ-ஷர்ட் போடலாமே?
சே குவேரா யார்? (Who is Che Guevara?) என்ன செய்தார்?? அவர் கதை என்ன???
சே குவேரா ஒரு மருத்துவர். முறையாக படித்தவர். ‘உலகின் சக்கரை கிண்ணம்’ என்று அழைக்கப்படும் கியூபாவில்தான் முதலில் இருந்தவர்.
புரட்சியாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது அவர் ஒரு சிறந்த புரட்சியாளராக மாறினார். கியூபாவின் கட்சித் தலைவர் கேஸ்ட்ரோவைச் சந்தித்தார். சே குவேரா ஒரு எழுத்தாளர் கூட. மிகவும் அருமையாக எழுதி வெளியிட்டார். அவரது புத்தகங்களை கியூபா அரசு வெளியிட செய்து பெருமைப்படுத்தியது.
எப்போது அமெரிக்கா உடன் போரிட ஆரம்பித்ததோ அப்போது கியூபா படையில் முக்கிய அங்கமாக இருந்தார். ‘கொரில்லா போர் முறை’தான் அவர் செய்தது. சீன புரட்சியில் மாவோ ‘கொரில்லா போர்’ முறையைக் கடைப்பிடித்தார். அதாவது மறைந்து இருந்து தாக்குவது.
எவ்வளவு பெரிய நாடு அமெரிக்கா…? அதை வெல்ல வேண்டும் என்றால் போர் தந்திரம் மிகத் துல்லியமாக இருக்கவேண்டும். கியூபா புரட்சி முடிந்ததும் அவருக்கு நிதி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
அப்போது காங்கோ மற்றும் பொலியாவில் புரட்சி நடந்துகொண்டு இருந்தது. அவர் காங்கோ புரட்சியில் பங்கு பெற்றார். அப்போது அவரை பொலிவியா புரட்சியாளர்கள் ஆதரவைக் கேட்டார்கள். பதவியை உதறித் தள்ளிவிட்டு எங்கெல்லாம் புரட்சி நடக்கிறதோ அங்கு எல்லாம் சென்று போராடினார்.
1967ல் பொலிவியாவில் அமெரிக்க படை சதி செய்து சே குவேராவை கொன்றது. வரலாற்றில் கியூபா புரட்சி முடிந்தபோதும் மக்களுக்காக பொலிவியா சென்று அங்கு கொலை செய்யப்பட்டு விட்டார். அவர் கிடைத்த பதவியைக்கூட உதறி தள்ளி வேரோரு நாட்டிற்கு சென்று புரட்சி செய்தவர் ஒரே ஒருவர்… ஆம். சே குவேராதான்…!
பொதுவாக ‘புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்…’ என்று சொல்லுவார்கள். சே குவேரா சரித்திரம் படித்த எந்த நபரும் சே குவேரா இறந்துவிட்டதாக சொல்ல மாட்டார்கள்... அவர் மக்களின் மனதில் என்றும் உயிரோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். சே குவேரா டீ-ஷர்ட் நம்மூர் டாக்டர்கள் தான் அணிய வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள்.
இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ சே குவேரா டீ-ஷர்ட் அணிவது சிறப்பே. ஆனால் அவரைப் பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் பேசிய கடைசி வார்த்தைகள்… அதாவது அமெரிக்க அடிவருடியான சி. ஐ. ஏ. கைக்கூலிகளிடம்… “ஏய்… கோழைகளே! உங்களால் என் ஒருவனை மட்டுமே இப்படி கொல்ல முடியும்…” அவர் போலிவியாவில் போலிவியா கம்யூனிஸ்ட் கட்சியால் (இடது சாரிகள்) அமெரிக்க சி.ஐ.ஏ. யிடம் காட்டிக் கொடுக்கபட்டார். துரோகிகள். மன்னிப்பு என்பதே அவர்களுக்கு இல்லை.
சே குவேரா மாதிரி உண்மையான 'மக்கள் சேவகன்' இனி கிடைப்பது அரிது. சிறந்த எழுத்தாளர், சிறந்த போர் வீரர், சிறந்த மருத்துவர் மற்றும் சிறந்த புரட்சியாளர் இனி காண்பது அரிது.
மனதார வாழ்த்துவோம்…!
சே குவேரா புகழ் ஓங்குக… !