

சமீப காலமாகவே பொது அறிவு சார்ந்த கேள்விகள் இணையத்தில் உலாவி வருகின்றன. உலகில் பல மர்மங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாக சமமாக இருந்தாலும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலைத்துறையில் மக்கள் சிறந்து விளங்குகிறார்கள். அனைத்து நாடுகளில் இருந்தும் கவிஞர்கள் உருவானாலும் குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் தான் கவிஞர்கள் பூமி என்று அழைக்கின்றனர். அதற்கு பின் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க கவிஞர்களை உருவாக்கிய நாடு தான் கவிஞர்கள் பூமி என்று அழைக்கப்படுகிறது.
நோபல் பரிசு வென்ற பாப்லோ நெருடா மற்றும் கேப்ரியெலா மிஸ்ட்ரல் உள்ளிட்ட உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க கவிஞர்களை சிலி (Chile) என்ற நாடு உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக சிலி கவிஞர்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது. உலகளவில் போற்றப்படும் வசனங்கள் மற்றும் கவிதையுடன் ஆழமான கலாச்சார தொடர்பு ஆகியவற்றை படைத்த கலைஞர்கள் சிலியில் தான் இருக்கின்றனர்.
சிலி இது அதன் சக்திவாய்ந்த இலக்கிய பாரம்பரியம், கவிதை கதைசொல்லல் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகளாவிய இலக்கியத்தை வடிவமைத்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடாகும். சிலி நாட்டுக் கவிஞர்கள் இயற்கை, உணர்ச்சிகள், அடையாளம், அரசியல் மற்றும் மனித அனுபவங்களைப் பற்றி எழுதி உலக இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளனர்.
இதனாலேயே சிலி உலகில் கலைஞர்களின் புகழ்பெற்ற இடமாக பார்க்கப்படுகின்றது. தற்போதும் கூட தேசிய நிகழ்வுகள், கலாச்சார இடங்கள் போன்றவற்றில் இந்த கலைஞர்களின் கலை படைப்புகள் பாராட்டப்பட்டு வருகின்றது. உலகளவில் அதிகம் தேடப்பட்ட, கொண்டாடப்படும் கவிஞர்களில் ஒருவராக பாப்லோ நெருடா இருக்கிறார். அவரது படைப்புகள் ஆழ்ந்த காதல், மனித உணர்வுகள், இயற்கை மற்றும் சமூக நீதியை போற்றுகின்றன.
சிலி அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கவிதை திகழ்கிறது. கவிஞர்களுக்காக சிறப்பாக நிறுவப்பட்ட அருங்காட்சியகங்கள், நகரின் தெரு சுவர்களில் காணப்படும் கவிதை வரிகள், ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கியப் பெருவிழாக்கள் இவை அனைத்தும் சேர்ந்து அந்த நாட்டின் ஆழமான கவிதைப் பாரம்பரியத்தை உயிரோட்டத்துடன் வைத்திருக்கின்றன. இது தவிர இளம் எழுத்தாளர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் தொடர்கள் சிலியின் இலக்கிய பண்பாட்டு சூழலை மேலும் வளப்படுத்துகின்றன.
இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற இரண்டு பேரைக் கொண்ட அரிய நாடுகளில் சிலி ஒன்றாகும். கேப்ரியலா மிஸ்ட்ரல் மற்றும் பாப்லோ நெருடா ஆகியோரின் சாதனைகள் சிலியை உலக இலக்கியத்தில் உயர்த்தி உள்ளது.