அமெரிக்க அதிபருக்கு பரிசளிக்கப்பட்ட உலகின் அரிய தேநீர்! கிலோ $1.2 மில்லியன் ஏன்?

Da Hong Pao Tea - அரிய தேநீர்
Da Hong Pao Tea - அரிய தேநீர்AI Image
Updated on

டோக்கியோவில் அதிக அளவு செர்ரி பூக்கத்தொடங்கிய இந்த காலத்தில் மக்கள் அதிகம் நாடுவது தேனீர். தற்போது ஜப்பானில் விலையுயர்ந்த க்யோகுரோ தேனீர் புகழ் பெற்று மக்களை ஈர்த்து வருகிறது.‌ இது நல்ல பச்சை நிறத்தில் இருக்கும் ஜேட் நிறத்தில் இருக்கும். இதை உற்பத்தி செய்வதில் தன் அக்கறை காட்டுவார்கள்‌ இதன் விலை சுமார் 10,000ரூபாய்.

சீனாவிலிருந்து டீ ஒன்பதாம் நூற்றாண்டில் ஜப்பானுக்கு பரவியது.‌ முதலில் இந்த டீயை ஜப்பான் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.12 ம் நூற்றாண்டில் ஜென் புத்தபிட்சுக்களால் க்யோடோ மற்றும் க்யுஷு பகுதிகளில் டீ உற்பத்தி செய்யப்பட்டது. இந்த விலையுயர்ந்த டீ 1835ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த டீ வகையை விவசாயிகள் பெரும்பாலும் நிழலிலேயே உற்பத்தி செய்ததால் நல்ல பச்சை நிறம் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு வகை இனிப்பு சத்தும் இந்த டீயில் உள்ளது.‌ பொதுவாக ஜப்பானில் பாட்சா டீ பிரபலமானது. தற்போது க்யோகுரோவை அதிக அளவில் மக்கள் நாடுகிறார்கள்.

மற்று தேயிலைகளை பயிரிடுவதைவிட இதற்கு அதிகப்படியான கவனிப்பு தேவைப்படுகிறது இதன் நிறம் மணம் மற்றும் இனிப்புச் சுவையை தக்கவைக்கஅதிக அளவு உழைப்பு தேவைப்படுகிறது. மற்ற வகை தேயிலை களுக்கு சூரியவெளிச்சம் தேவைப்படுகிறது‌ ஆனால் க்யோகுரோவிற்கு நல்ல நிழலே தேவைப்படுகிறது. சுமார் 20நாட்கள் இதை பறிப்பதற்கு முன் நிழலிலேயே இருக்க வைக்கப்படுகிறது‌.

இதனால் 70லிருந்து 80சதவீதம் நேரடி சூரிய வெளிச்சம் இதன் மீது படிவதை தடுக்கப்படுகிறது. இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த தேயிலைக்கு எமரால்டு பச்சை நிறம் கிடைக்கிறது.

Da Hong Pao Tea - அரிய தேநீர்
Da Hong Pao Tea - அரிய தேநீர்AI Image

இந்த வகை தேயிலை சூரிய வெளிச்சத்தில் இருந்து காக்கப்படுவதால் இதிலுள்ள கெமிக்கல்கள் மாறுகிறது.‌ குறைந்த வெளிச்சத்தின் மூலம் அதிக க்ளோரோஃபில் சேர்வதால் இந்த வகை தேயிலை நல்ல பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

மேலும் தேயிலை விவசாயிகள் சூரிய வெளிச்சத்தை தடுப்பதால் இந்த க்யோகுரோ தேயிலைக்கு நல்ல நறுமணம் கூட்டப்படுகிறது. இதன் மணம், நல்ல நிறம் மற்றும் இதன் தனித்தன்மையான இனிப்புச் சுவை இதை ஸ்பெஷலாக்குகிறது. இந்த வகை தேயிலை க்யோடோ பகுதியில் அதிகம் காணலாம்.‌ ஜப்பானில் இது மிக தரமான தேனீராக கருதப்படுகிறது.‌ ஃப்யுகோகா மற்றும் ஷிஷூவோகா பகுதிகளிலும் இது உற்பத்தி செய்யப்படுகிறது.

வெறும் 6 செடிகள் மட்டுமே உள்ள டா ஹாங் பாவோ அரிய தேநீர்:

சீனாவின் புஜியான் மாகாணத்தில் வூயி மலைப்பகுதியில் விளையும் விலையுயர்ந்த தேனீர் வகையாகும். ஒரு கிலோ டா ஹாங் பாவோ டீ யின் விலை சுமார் 1.2.மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன் சீனா சென்றபோது மாசேதுங் 200கிராம் டா ஹாங் பாவோ டீயை பரிசாக வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
சொப்பு சாமான்கள்: அம்பாசமுத்திரத்தின் உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய மர விளையாட்டுகள்!
Da Hong Pao Tea - அரிய தேநீர்

இது செடியிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 6 செடிகளே உள்ளன. அவற்றிலிருந்து பறிக்கப்பட்ட 20கிராம் தேயிலை 2005ம் ஆண்டு 30,000அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.

தைவானில் ஹை மவுண்டன் டீ

1000 மீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதியில் இந்த டீ வளர்க்கப்படுகிறது. உயரமான மலைப்பகுதி,அங்கு நிலவும் ஈரக்காற்று, தேயிலை நொதித்தல் செயல்முறை விரைவாக நடைபெறுதல், போன்றவற்றால் அதிகமணம் சுவை கொண்டதாக உருமாறுகின்றது. ஒருகிலோ டீ தேயிலை 250 டாலர் வரை விற்கப்படுகிறது.

சர்வதேச அரசியல் வரலாற்றில் தேநீர் எவ்வாறு ஒரு முக்கிய தூதரகப் பரிசாகப் பயன்படுத்தப்பட்டது என்ற வரலாற்று நிகழ்வையும், வெறும் 6 செடிகளிலிருந்து மட்டுமே பெறப்படும் ஒரு பொருளின் அரிய மதிப்பையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உலகப் பொருளாதாரத்தில் 'அதிநவீன ஆடம்பரப் பொருட்கள்' (Luxury Goods) எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்ற புதிய பார்வையை இது வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com