மர்மங்கள் நிறைந்த கிளியோபாட்ராவின் வாழ்க்கை! 

Cleopatra
Cleopatra's life full of mysteries!
Published on

கிளியோபாட்ரா, எகிப்தின் கடைசி பார்வோன் (ராணி). வரலாற்றில் மிகவும் கவர்ச்சிகரமான, புரிந்துகொள்ள முடியாத நபர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் ஒரு அழகான புத்திசாலி பெண் என்றும், சீசர் மற்றும் மார்க் ஆண்டனி போன்ற சக்தி வாய்ந்த ஆண்களை மயக்கி, எகிப்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முயற்சித்தார் என்றும் பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது. ஆனால், இந்த கதைகள் உண்மையா? கிளியோபாட்ராவைப் பற்றிய உண்மையான வரலாறு என்ன? இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கிளியோபாட்ரா VII என அழைக்கப்படும் கிளியோபாட்ரா, கிமு 69-இல் பிறந்தார். தொலமைக் வம்சத்தை சேர்ந்த அவரது மூதாதையர்கள், மெசிடோனியாவைச் சேர்ந்தவர்கள். கிளியோபாட்ரா பல மொழிகள் பேசக்கூடிய ஒரு படித்த பெண்ணாக இருந்தார். எகிப்திய, கிரகம் மற்றும் லத்தின் மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். கிளியோபாட்ராவின் தந்தையான தோலமிக் XII, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் கிளியோபாட்ரா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஆட்சியைப் பகிர்ந்துகொண்டனர். 

கிமு 48 இல் ரோமன் குடியரசில் உள்நாட்டு போர் வெடித்தது. போரில் தோற்ற சீசர் எகிப்துக்கு தப்பி ஓடினர். அங்கு கிளியோபாட்ரா சீசரை சந்தித்து, அவருடன் ஒன்றாக சேர்ந்து தனது சகோதரியை எதிர்த்துப் போரிட்டார். சீசர் அந்தப் போரில் வென்று கிளியோபாட்ராவை எகிப்தின் அரசியாக அறிவித்தார். பின்னர், சீசருக்கும் கிளியோபாட்ராவுக்கும் ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் சீசரியான். 

சீசர் கொல்லப்பட்ட பிறகு கிளியோபாட்ரா ரோமன் தளபதி மார்க் ஆண்டனியை சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோர் எகிப்தை ஒரு சக்தி வாய்ந்த பேரரசாக மாற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ரோமன் தளபதி ஆக்டோவியன், மார்க் ஆண்டனியை எதிர்த்துப் போரிட்டு வென்றார். இதனால் கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனி தற்கொலை செய்து கொண்டனர். 

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை; அமுதாவின் பிறந்தநாள்!
Cleopatra

கிளியோபாட்ராவைப் பற்றிய பல கட்டுக் கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் அவர் மிகவும் அழகான பெண் என்று நம்பப்படுவதும் ஒன்று. ஆனால், கிளியோபாட்ராவின் உண்மையான தோற்றம் பற்றி யாருக்குமே தெரியாது. மேலும், கிளியோபாட்ரா பல மொழிகள் பேசக்கூடிய ஒரு புத்திசாலி பெண் என நம்பப்படுகிறது. அவர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த ஆண்களை மயக்கி எகிப்தை சிறந்த நாடாக மாற்ற முயற்சித்தார் என்றும் கூறப்படுகிறது. கிளியோபாட்ராவின் மரணத்தில் இன்றளவும் மர்மம் நீடிக்கிறது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அதற்காக எந்த விஷயத்தை பயன்படுத்தினார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 

இதன் காரணமாகவே கிளியோபாட்ரா புரிந்துகொள்ள முடியாத வரலாற்றுப் பெண்மணியாகவே நம்பப்படுகிறார். இவரைப் பற்றி பல கட்டுக் கதைகள் இருந்தாலும், அவரது உண்மையான வாழ்க்கை பற்றி, யாருக்கும் எதுவும் தெரியாது. இன்றளவும் சில ஆய்வுகளை மேற்கொண்டு, கிளியோபாட்ரா பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com