பீனிக்ஸ் பறவை படம் எந்த திசையில் வைக்கவேண்டும்? வாஸ்து சொல்வது என்ன?

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையின் சிறப்பு மற்றும் அதை வைப்பதற்கான சரியான வாஸ்து முறைகள்.
பீனிக்ஸ் திசைகள் - Phoenix Placement Vastu
பீனிக்ஸ் திசைகள் - Phoenix Placement Vastu
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

நம்பிக்கையின் மறு உருவமாக பீனிக்ஸ் (Phoenix) பறவை இருக்கிறது. மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு பீனிக்ஸ் பறவையே உதாரணமாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் பீனிக்ஸ் பறவை என்பது எகிப்து, கிரேக்கம், பாரசீகம் மற்றும் சீனா போன்ற பல்வேறு நாடுகளில் பழங்காலப் புராணங்களில் கூறப்படும் ஒரு கற்பனையான அழியாத பறவை ஆகும்.

பீனிக்ஸ் பறவையின் சிறப்புகள்

பார்ப்பதற்கு பிரம்மாண்டமான கழுகு அல்லது தீக்கோழி போன்ற தோற்றத்துடன் சிவப்பு மற்றும் தங்க நிற இறகுகளைக் கொண்டு இருக்கும் பீனிக்ஸ் பறவை தன்னுடைய வாழ்நாளின் முடிவில் அதாவது சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் வரை வாழ்ந்த பிறகு தனக்குத்தானே தீ மூட்டி எரிந்து சாம்பலாகிவிடும். அந்த சாம்பலில் இருந்து மீண்டும் ஒரு புதிய பீனிக்ஸ் பறவை உயிர்த்தெழும் என்பதால் அழியாத தன்மை மற்றும் மறுபிறப்பின் அடையாளமாக இப்பறவை கருதப்படுகிறது.

பனித்துளியையும் மூங்கில் பூக்களையும் உணவாக கொள்வதாக சீனப் புராணங்களில் கூறப்படுகிறது. பெரிய தோல்விகள் மற்றும் பெரும் துயரங்களில் இருந்து புதிய உத்வேகத்துடன் மீண்டும் வருவதற்கு பீனிக்ஸ் பறவை குறியீடாக கருதப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி பீனிக்ஸ் பறவை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

* வாஸ்து சாஸ்திரத்தின் படி பீனிக்ஸ் பறவையை படத்தை வீட்டில் வைப்பது மறுபிறப்பு, வளர்ச்சி மற்றும் நேர்மறை ஆற்றலை தரும் என நம்பப்படுகிறது.

* பீனிக்ஸ் பறவை படம் இருக்கும் வீட்டில் உள்ள யாருக்காவது பின்னடைவு ஏற்பட்டால் மனதளவில் அவர் பலம் பெற்று சவால்களை சமாளிப்பவராக மாறுவார். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை, அரவணைப்பு ஆகியவற்றையும் இப்படம் கொண்டு வருகிறது.

* குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் லட்சியத்தையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இதனால் பீனிக்ஸ் பறவை இருக்கும் இடத்தில் வளர்ச்சி மற்றும் செழிப்பு அதிகமாக உள்ளது.

பீனிக்ஸ் திசைகள் - Phoenix Placement Vastu
பீனிக்ஸ் திசைகள் - Phoenix Placement Vastu

பீனிக்ஸ் திசைகள்:

பீனிக்ஸ் பறவை ஓவியம் வரையும் திசைகள்

நெருப்பு உறுப்புடன் பீனிக்ஸ் பறவை ஓவியம் ஒத்துப்போவதால் வாஸ்துபடி கிழக்கு அல்லது தென்கிழக்கில் பீனிக்ஸ் பறவை ஓவியம் இருப்பது சிறந்த பலனைக் கொடுக்கும்.

பீனிக்ஸ் பறவை ஓவியம் தவிர்க்க வேண்டிய திசைகள்

வாஸ்துபடி வடக்கு அல்லது மேற்கு திசைகள் நீர் மற்றும் காற்றை குறிப்பதால் பீனிக்ஸ் பறவையின் படம் அல்லது ஓவியத்தை அத்திசைகளில் வைப்பது அசுப பலன்களை கொடுக்கும் என நம்பப்படுகிறது. மேலும் நேரடியாக தரை அல்லது குளியலறை போன்ற இடங்களில் வைப்பது தவிர்க்க வேண்டும்.

பீனிக்ஸ் பறவை ஓவியம் வைப்பதற்கு சிறந்த அறை

* துடிப்பான ஆற்றலை அதிகரிக்க பீனிக்ஸ் பறவை படத்தை வாழ்க்கை அறையில் வைக்க வேண்டும். மேலும் கூட்டமான இடங்களில் பீனிக்ஸ் பறவை படம் தனி அழகை காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

* கவனம், இலட்சியம், புதுப்பித்தலை ஊக்குவிக்க படிப்பு அல்லது அலுவலகங்களில் பீனிக்ஸ் பறவை படத்தை வைக்கலாம்.

* வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க வீட்டின் முன் கதவிற்கு முன்னால் பீனிக்ஸ் பறவை படம் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் வெள்ளி யானை... இத வெச்சா என்ன நடக்கும் பாருங்க!
பீனிக்ஸ் திசைகள் - Phoenix Placement Vastu

* பீனிக்ஸ் பறவை ஓவியத்தை கண் மட்டத்தில் வைக்க வேண்டும்.மேலும் சிவப்பு, ஆரஞ்சு, தங்கம் போன்ற வண்ணங்களிலும் தேர்வு செய்தால் அழகாகத் தோன்றும்.

நம்பிக்கை,நேர்மறை, வலிமை, புதுப்பித்தல் போன்றவற்றின் சின்னமாக இருக்கும் பீனிக்ஸ் பறவையை சரியான இடத்தில் வைத்து மிகுந்த பலன்களை பெறுங்கள்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல இந்த 5 பொருளும் காலியா இருக்கா? உடனே மாத்துங்க பணம் கொட்டும்!
பீனிக்ஸ் திசைகள் - Phoenix Placement Vastu
logo
Kalki Online
kalkionline.com