200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த உலகில் உள்ள பல நாடுகள் வெள்ளையர்கள் அல்லது வெளிநாட்டவர்களால் ஆளப்பட்டது. அதிலிருந்து நாம் 1947, ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்று அந்தச் சந்தோஷத்தை வருடாவருடம் கொண்டாடுகிறோம். ஆனால், ஒரு புறம் இவ்வுலகில் இருக்கும் சில நாடுகள் ‘சுதந்திரம்... அப்படி என்றால் என்ன?’ என்று இப்போதும் அதன் சுவடே இல்லாமல் இருக்கின்றன. அவை என்னென்ன நாடுகள்?
சுதந்திரம் என்றால் என்ன?
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் சுதந்திரத்தை ஒரு பெரிய சாதனையாகக் கொண்டாடுகின்றன. பொதுவாக வெளிநாட்டு ஆட்சியாளர்கள் அல்லது காலனித்துவ சக்திகளுக்கு (colonial powers) எதிராகப் போராடிய பிறகு கிடைத்த சுதந்திரத்தை ஒரு பொக்கிஷம் போன்று அந்த நாட்டில் உள்ளவர்கள் கொண்டாடுவார்கள். இதனால் தங்கள் நாட்டிற்கு என்ன தேவையோ அதை தாங்களாகவே முடிவு செய்ய முடியும் என்ற democratic நிலையை அடைவார்கள்.
நேபாளம் (Nepal):
உயரமான இமயமலையினால் பாதுகாக்கப்பட்டு, வலிமையான போர்வீரர்களுக்கு பெயர் பெற்ற நேபாளம்; பிரிட்டிஷ் பேரரசுகளால் ஒருபோதும் கைப்பற்றப்படவில்லை.
அதனால் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு பதிலாக நேபாளம் மே 28 அன்று குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. ஒரு ஜனநாயக நாடாக மாறிய நாளாக இதை கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான்(Japan):
ஜப்பானும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நாடும் வெளிநாட்டவர்களால் ஒருபோதும் கைப்பற்றப்பட்டதில்லை. பல நூற்றாண்டுகளாக அவர்களின் சொந்த பேரரசர்களால் ஆளப்பட்டு வந்தது. ஜப்பானில் பிப்ரவரி 11 அன்று தேசிய நிறுவன தினம் (National Foundation Day) கொண்டாடப்படுகிறது. இது அந்த நாட்டின் தொடக்க நாளாக கருதப்படுகிறது.
தாய்லாந்து(Thailand):
ஒரு காலத்தில் சியாம் (Siam) என்று அழைக்கப்பட்ட தாய்லாந்து ஐரோப்பியர்களுடன் (Europeans) பல புத்திசாலித்தனமான ஒப்பந்தங்களைச் செய்து, நாட்டை விரைவாக நவீனமயமாக்குவதன் மூலம் அந்நிய சக்திகள் உள்ளே நுழைவதைத் தவிர்த்தது. அதன் அண்டை நாடுகள் வெளிநாட்டவர்களால் கைப்பற்றப்பட்ட போதும் தாய்லாந்து அந்நேரத்தில் சுய ஆட்சியில்தான் இருந்தது. வருடாவருடம் தாய்லாந்து மன்னரின் பிறந்தநாளை அதன் தேசிய நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
சவுதி அரேபியா(Saudi Arabia) மற்றும் சீனா(China):
சவுதி அரேபியா வெவ்வேறு பழங்குடியினர்களை ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்து ஒரு நாடாக மாறியது.
சீனாவும் நீண்ட பேரரசர்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது. பின்னர் ஒரு கம்யூனிச நாடாக (communist state) மாறியது. இறுதியில் இரண்டு நாடுகளும் வெளிநாட்டு சக்திகளை உள்ளே விடாமல் தங்கள் நாட்டை சொந்த கட்டுப்பாட்டிலே இப்போதுவரை வைத்திருக்கின்றன.
இந்த நாடுகள் வலுவான தலைவர்கள், ஒன்றுபட்ட கலாசாரங்கள் மற்றும் பிற நாடுகளுடன் கையாள்வதில் பல புத்திசாலித்தனமான முடிவுகளைக் கொண்டிருப்பதன் மூலம் வெளிநாட்டவர் ஆளுமை இன்றி பல நூற்றாண்டுகளாக சுதந்திரமாக (Independence) இருந்து வந்தன.