2025ன் டிரெண்டிங் ஆங்கில சொற்கள்: புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்கப்பா!

2025-ம் ஆண்டின் டிரெண்டிங்காக வலம் வந்த சில ஆங்கில சொற்கள் என்னவென்று பார்த்து நாமும் தெரிந்து கொள்ளலாமே!
trending english words
trending english words
Published on

மொழி என்று சொன்னால் உலகில் பல்வேறு மொழிகள் இருக்கின்றன. அதற்கு அகராதிகளும் இருக்கின்றன. மொழிகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

அதிலும் ஆங்கிலம் உலக அளவில் வணிகத்திற்காகவும் தொடர்பிற்காகவும் ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் புதிய சொற்களை இன்றைய இளைஞர்கள் கண்டுபிடிக்கின்றனர்.

2025-ம் ஆண்டின் டிரெண்டிங்காக வலம் வந்த சில ஆங்கில சொற்கள் என்னவென்று பார்த்து நாமும் தெரிந்து கொள்ளலாமே!

FINFLUNCER – எவர் ஒருவர் நிதி, பணம் வணிகம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறாரோ அவரை இந்த வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்.

NOMOPHOBIA – அலைபேசிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்ட இந்நாளில் கூட, அதைப் பயன்படுத்த தெரியாதவர்களைக் குறிக்கும் சொல்லாக அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளளது.

SHARENT – பெற்றோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சமூகவலைத்தளங்கள் குறித்த தகவல்களை தங்கள் பிள்ளைகளுக்கு பகிர்வது குறித்து இவ்வார்த்தையை தற்போது பயன்படுத்த துவங்கி விட்டனர் இன்றைய இளைஞர்கள். (SHARE +PARENT = SHARENT)

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரியுமா? அப்படியென்றால் இந்த 7 மொழிகளும் கற்க சுலபம்தான்!
trending english words

FITSPIRATION – எவர் ஒருவர் உடல்நலம் மற்றும் உடல் கட்டமைப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வமாகவும் பிறருக்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறாரோ அவரைக் குறிக்கும் சொல்லாக இந்நாளில் வலம் வருகிறது. (fitness and Inspiration)

STAN – ஒருவர் குறிப்பிட்ட பிரபல நடிகர், நடிகையர் அல்லது தலைவர் மேல் அதீத ஆர்வமுள்ளவராகவோ… அல்லது தீவிர வெறியராக உள்ளவரை இப்படி அழைக்கிறார்கள். (Stalker and Fan)

AWESOMESAUCE - ஒரு விஷயத்தில் ஒரு அனுபவத்தில் அதிகபட்ச பயன்கள் அல்லது நல்லனவற்றைக் குறிக்க கூடிய சொல்லாக வழங்கப்படுகிறது. (உதாரணம் – மலைகளின் ராணி என்றழைக்கப்படும் உதகமண்டலம் சுற்றிப்பார்த்ததில் சிறப்பான அனுபவம் கிடைத்தன)

LOWKEY – ஒரு நிகழ்வு நடைப்பெறுவதாக இருந்து அது ரத்து செய்யப்பட்டால் ஏற்படும் உணர்வுக்கு இந்த வார்த்தையை தற்போது பயன்படுத்துகிறார்கள். (உதாரணம் – இசைக் கச்சேரி ரத்தானதால் நான் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக மாறினேன்)

SITUATIONSHIP – நம்மால் நண்பர்களிடம் மனம் விட்டு பேசி நிறைய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அந்த விஷயங்களை நமக்கு பிடித்த தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையை உணர்த்தும் சொல்லாக இந்த சொல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

METAVERSE – நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு நேரில் உறவாடுவதைத் தவிர்த்து, கணினி மற்றும் டிஜிட்டல் தளங்களில் அதிகமாக பொழுதுபோக்குவோரை இந்த சொல் குறிக்கிறது.

HANGRY – எந்தவொரு நிகழ்வு உணர்ச்சி வசப்பட வைக்கிறதோ.. அல்லது எரிச்சலூட்டுவதாக அமைகிறதோ அந்த நிகழ்வின்பால் ஏற்படுகின்றன உணர்வுக்கு இந்த சொல் பயன்படுகிறது. (உதாரணம் – நான் நேற்று பர்கர் வாங்க டோமினோஸ் சென்ற போது அந்த விற்பனையகம் மூடப்பட்டிருந்ததால் நான் கோபமுற்றேன்)

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு சின்ன வார்த்தை!
trending english words

காலங்கள் மாற மாற இன்னும் நிறைய சொற்கள் கண்டுபிடிக்கப்படும் அதைப் பயன்படுத்தி கொள்வோமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com