நவராத்திரி: வண்ணமயமான தாண்டியா நடன கொண்டாட்டம்!

Dandiya
Dandiya
Published on

தாண்டியா (Dandiya) என்பது குஜராத்தில் உருவான, நவராத்திரி விழாவின்போது ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனமாகும். இதில் நடன கலைஞர்கள் வண்ணமயமான, பாரம்பரிய உடைகளை அணிந்து, அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான மரக்குச்சிகளை (தாண்டியாவை) கைகளில் ஏந்தி, வட்டத்தில் சுழன்று தாளத்துடன் ஆடுவார்கள். இது ஆண்களும் பெண்களும் இணைந்து ஆடும் ஒரு கொண்டாட்டமான நடன வடிவமாகும். இந்த நடனம் (Dandiya) குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகவும் பிரபலமான நடனமாகும்.

1) வண்ணமயமான மரக் குச்சிகள்:

தாண்டியா நடனத்தின் சிறப்பு அம்சம் நடன கலைஞர்கள் அணியும் வண்ணமயமான உடைகள் மற்றும் அவர்கள் கையில் இருக்கும் வண்ணமயமான குச்சிகள். இந்த மரக்குச்சிகள் முட்டுக்கட்டையாக பயன்படுத்தப்பட்டு அழகாக அலங்கரிக்கப்படும். அதனால் இந்த நடனம் "குச்சி நடனம்" என்றும் அழைக்கப்படுகிறது. மூங்கிலால் ஆன இந்த குச்சிகள் கவர்ச்சிகரமாக தோன்றுவதற்கு பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டு, அலங்கரிக்கப்படுகிறது. நடனமாடும் கலைஞர்கள் தங்கள் இரு கைகளிலும் குச்சிகளைப் பிடித்து கொண்டு இசைக்கருவிகளின் தாளங்களுக்கேற்ப ஒன்றாக அடிப்பார்கள்.

தாண்டியா
தாண்டியா

2) ஆடைகளில் தனித்த அடையாளம்:

தாண்டியா நடனங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஆடை குறியீடு வேறுபட்டது. பெண்களுக்கு மூன்று துண்டுகள் கொண்ட காக்ரா, எம்பிராய்டரி சோளிஸ் மற்றும் ஒத்னி ஆகும். கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் கனமான நகைகளால் மினுமினுக்கும் பந்தனி துப்பட்டாக்கள் போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிகிறார்கள். ஆண்கள் பொருத்தமான வண்ணமயமான பாரம்பரிய வேட்டிகள் மற்றும் அங்க்ரகா அல்லது குர்தாக்களை அணிந்து கொண்டு, உடையில் ஏராளமான கண்ணாடிகளுடன் அணிவார்கள்.

3) நடனம்:

ஒரே நேரத்தில் ஏராளமான மக்களை உள்ளடக்கிய இந்த நடனத்தில், நடன அமைப்பின்படி நடன கலைஞர்களால் இரண்டு வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த நாட்டுப்புற நடனம் மிகவும் துடிப்பான மற்றும் விளையாட்டுத்தனமான நடனமாகும். இந்த நடனம் கண் தொடர்பு மூலம் நடிப்பதற்கும் செய்திகளை பரிமாறி கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. மற்ற இந்திய நடன வடிவங்களில் இருந்து தாண்டியாவின் தனித்துவம் அதன் வண்ணமயமான இசைக் குச்சிகளின் பயன்பாடு மற்றும் ஆடை கட்டுப்பாடுகளால் தனித்து தெரிகிறது.

Dandiya
Dandiya

4) தாண்டியா vs கர்பா நடனம்:

'ஆரத்தி'க்கு முன்பாக கர்பா நடனம் நிகழ்த்தப்படுகிறது. அதன் பிறகு தாண்டியா நிகழ்த்தப்படுகிறது. கர்பா பெண்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் நடனமாகும். தாண்டியாவில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடனம் ஆடுவார்கள். தாண்டியா வட்ட இயக்கங்கள் கர்பாவை விட சற்று சிக்கலானவை.

தாண்டியாவில் நடன கலைஞர்களுடன் 'மெடேல்' ட்ரம் உடன் ஒரு இசைக்கருவி வாசிப்பவர் இருப்பார். இவர் இரண்டு வட்டங்களின் மையத்தில் நின்று நடனக் கலைஞர்களை தனது தாளங்களால் வழி நடத்துவார். நூற்றுக்கணக்கான மக்கள் நாட்டுப்புற இசையின் தாளங்களுக்கு ஏற்ப நடனம் ஆடுவது பிரமிப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தாண்டியா க்வீன் பல்குனி பாதக்: களைகட்டும் மும்பை நவராத்திரி விழா!
Dandiya

நாடு முழுவதும் மக்கள் திருவிழாவில் 9 நாட்களிலும் விரதங்களை கடைபிடித்து கோவில்களுக்கு செல்வதுடன், இரவு நேரங்களில் தாண்டியா நடன நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்கிறார்கள். குஜராத் மாநில அரசு தாண்டியாவிற்காக சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்கிறது. நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா தேவியைப் போற்றி இந்த நடனம் ஆடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com