
தாண்டியா க்வீன் பல்குனி பாதக் ஆடுகிறார் என்றாலே, மும்பை மாநகரில் நவராத்திரி விழா களைகட்டிவிடும். இந்த வருடம் நடைபெறவிருக்கும் 'ரேடியன்ஸ் தாண்டியா' அதிகமாகவே களைகட்டப் போகிறது.
பல்குனி பாதக், நவராத்திரி விழா மைதானத்தில் இறங்கி ஆடிப்பாட ஆரம்பித்து விட்டால், அனைவரும் சுழன்று-சுழன்று கலர் ஃபுல்லாக ஆடுவது அற்புதமாக இருக்கும்.
பல்குனி பாதக்:
தாண்டியா க்வீன் பல்குனி பாதக், குஜராத்தி சமூகத்தினரிடையே மிகவும் பிரபலமானவர். பாலிவுட்டிலும், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தா தாயா என்ற இசைக்குழுவின் ஆதரவுடன் பல நிகழ்ச்சிகளில் நடித்தவர்.
தாரக் மேத்தா கா உல்டா சாஷ்மா, கோன் பனேகா குரோர்பதி, ஸ்டார் தாண்டியா தூம், காமெடி நைட்ஸ் வித் கபில் மற்றும் பாண்டியன் ஸ்டோர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.
பல்குனி பாதக்கின் இசை குஜராத்திய பாரம்பரிய இசை வகைகளை சார்ந்ததாக இருக்கும். திரைப்படங்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடி, பதிவு செய்துள்ளார். மேலும், இவரது ஆல்பங்கள் மெல்லிசை மற்றும் அவைகளுடன் சித்தரிக்கப்பட்ட அழகான காதல் கதைகளுக்கு பிரபலமானதாகும்.
பல்குனி பாதக்,1998 ஆம் ஆண்டு முதல் இசை நிகழ்வுகளை நடத்தி வருகிறார். மைனே பாயல் ஹை சங்காய்; ஆயி பர்தேஷ் சே; ஸாவன் மே போன்றவைகள் இவரது பிரபலமான பாடல்களாகும்.
பல்குனி பாதக் நிகழ்வு என்றாலே ஸ்பான்ஸர்கள் அதிகம்தான். பத்து வருடங்களுக்கு முன்பே நவராத்திரி விழாவிற்கு ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் பெற்றவர். இப்போது ரூபாய் 20 கோடியைத்- தாண்டியிருக்கும். நடனத்தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்கு, பல்குனி பாதக், கூலாக கூறும் காரணம் "இயல்பாகவே அமைந்துவிட்டது" என்பதாகும்.
ஏ.ஸி. அறைக்குள் பல்குனி பாதக்கின் ரேடியன்ஸ் தாண்டியா:-
பல்குனி பாதக்கின் தாண்டியா நடனம், வழக்கம் போல மைதானத்தில் நடைபெறாமல், இவ்வருடம் ஏ.ஸி. அறைக்குள் நடைபெறவிருக்கிறது.
ரேடியன்ஸ் தாண்டியா "நவராத்திரியின் உற்சாகமான உணர்வை, கவர்ச்சியான மற்றும் ஸ்டைலான முறையில் மிகப்பெரிய உட்புற ஏ.ஸி. வசதியுடன் கூடிய அறையில் தாண்டியா மூலம் வெளிப்படுத்துவதாகும்.
உபரி தகவல்கள் :-
பாந்த்ரா (கிழக்கு) பகுதியில் அமைந்திருக்கும் "ஜியோ உலக மாநாட்டு மையத்தில்" நவராத்திரி ஆரம்ப தினத்திலிருந்து, "22/09/2025 முதல் 01/10/2025 வரை பல்குனி பாதக்கின் தாண்டியா நிகழ்வு நடைபெறவுள்ளது. இங்கே 10,000 பேர்கள் வரை ஆடலாம்.
குஜராத்தி மற்றும் இந்தி மொழிகளில் தாண்டியா நிகழ்வு நடைபெறும். 2 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி உண்டு.
டிக்கெட் விபரம் :-
1 நாள் பாஸ் Rs. 1,499/-
ஸீஸன் பாஸ் Rs.10,499/-
வி.ஐ.பி.பாஸ் Rs. 3,499/-
(1 நாள்)
ப்ரைவேட் பாஸ் Rs. 5,999/-
(1 நாள்)
Book my show மூலம் முன் பதிவு செய்ய வேண்டும்.
பிரம்மாண்டமான ஏ.ஸி. அறையில், (ரேடியன்ஸ்) நடைபெறவிருக்கும் தாண்டியாவில் கலந்து கொண்டு, தாண்டியா க்வீனின் ஆடலையும், பாடலையும் கேட்டு ரசிப்பதும், ஆடுவதும் ஒரு சுவாரசியமான, வித்தியாசமான அனுபவம்தான்.
நவராத்திரியில் அனைவரையும் ஆடவைக்கும், பல்குனி பாதக்கின் இந்த ரேடியன்ஸ் தாண்டியா ராத்திரி!