உலகிலேயே மிகப்பெரிய பாதாள நகரமான இந்த Derinku, துருக்கி நாட்டில்தான் உள்ளது. இது மிகப்பெரியது மட்டுமின்றி, மிகமிக பழமைவாய்ந்த பாதாள நகரமாகவும் இருந்து வருகிறது. அதனாலேயே இந்த பாதாள நகரம் எப்படி உருவாக்கப்பட்டது? என்ற கேள்விக்கான பதில் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கே கிடைக்கவில்லை.
துருக்கி நாட்டில் உள்ள Elengubu என்றப் பழமைவாய்ந்த நகரமான இந்த நகரம், தற்போது Derinku என்றப் பெயரால் அழைக்கப்படுகிறது. பூமிக்கடியில் 85மீ ஆழத்தில் அமைந்திருக்கும் இந்த நகரத்தில், 18 அடுக்கடுக்கான சுரங்கங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் மக்கள் அந்த நகரத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இந்த நகரம் Phrygians மக்களிடமிருந்து Byzantine Era வைச் (8th Century BCE) சேர்ந்த கிறித்துவ பெர்சியன் மக்களுக்குக் கைமாறியிருக்கிறது. இந்த நகரம் 1920ம் ஆண்டு, கிரேக்க மற்றும் துருக்கிய போரின்போதுதான் கிரேக்கர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. அங்கு குகை போன்ற அறைகள் நிறைய கண்டுப்பிடிக்கட்டப்பட்டன. அதன்பின்னர் சிறு சிறு இடங்களாக கிட்டத்தட்ட 200 இடங்கள் சுரங்கம் மூலமாக இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
போர்களிலும், மதச் சண்டைகளிலிருந்தும் தப்பிப்பதற்காக மக்கள் அந்த பாதாள நகரத்திலேயே தங்கினர் என்றும், இது கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் வாழக்கூடிய நகரம் என்றும் கூறப்படுகிறது. அந்தப் போருக்கு பின்னர், அதாவது கிரேக்க மக்கள் வெளியேறிய பின்னர் மீண்டும் இந்த நகரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதன்பின்னர் 1963ம் ஆண்டு துருக்கியில் வாழ்ந்த ஒருவர், தொலைந்தக் கோழி குஞ்சைத் தேடி செல்கையில் தான் மீண்டும் அந்த நகரம் இருந்ததுத் தெரியவந்தது. அதன்பின்னர்தான் தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டிற்கும் வந்தது.
துருக்கியில் உள்ள வீடுகளிலிருந்து இந்த நகரத்திற்கு சுமார் 600 நுழைவாயில்கள் இருந்தன என்பது அவர்களை மிகவும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. அதன்பின்னர், உணவு சேகரிப்பு கிடங்கு, கால்நடைகளுக்கான இடம், பள்ளிகள், மாடிகள், சர்ச்கள் என அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்தனர். அதன்பின்னரே தெரியவந்தது, இந்த நகரத்தில் ஒரு நாகரீகமே வளர்ந்தது என்று. மேலும் அனைத்து வெளிபுற சிக்கல்களிலிருந்தும் ஒதுங்கி இருந்து, ஒரு பாதுகாப்பான நகரமாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆகையால், கடந்த 1985ம் ஆண்டு இந்த நகரம் Unesco World Heritage பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்த நகரத்தில் இன்னும் ஏராளமான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம்தான் உள்ளன. இதில் சுவாரசியம் என்னவென்றால், அவர்கள் இன்னும் அந்த நகரம் முடியும் இடத்தைக் கண்டுபிடிக்கவே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு சுரங்கமும் அடுத்த சுரங்கத்தோடு இணைக்கப்பட்டிருப்பது தொடர்க்கதையாக இருந்து வருகிறது.
போர்களிலிருந்து மட்டுமல்லாது, இயற்கைப் பேரிடர்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஏற்றவகையில் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 100 கிலோ எடைக்கொண்ட கதவுகளையும், வென்டிலேஷன் வசதியையும் கொண்டுள்ளது இந்த நகரம். தோண்டத் தோண்ட கிடைக்கும் அற்புதம்போல, இந்த பாதாள நகரத்தில் கிடைக்கும் அற்புதங்கள் குறைந்தப்பாடு இல்லை என்றே கூற வேண்டும்.