கலாஷ் மக்களில் ஐரோப்பியர்களின் DNA! யார் இவர்கள்?

Kalash Girl
Kalash Girl
Published on

பண்டைய இந்து சமயத்தை பின்பற்றும் கலாஷ் மக்களில் ஐரோப்பியர்களின் DNA சிறிதளவு காணப்படுகிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஐரோப்பியர்களுக்கும் கலாஷ் மக்களுக்கும் என்ன தொடர்பு? யார் இவர்கள்? எங்கு உள்ளார்கள்? என்ற கேள்விகள் எழுகிறதா?

வட பாகிஸ்தானில் உள்ள சித்ரல் மாவட்டத்தில் உள்ளதுதான் கலாஷ் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கை சுற்றிதான் ஹிந்து – குஷ் மலை உள்ளது. இப்போது கலாஷ் மக்கள் வட பாகிஸ்தானில் உள்ள பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்தாலும், பண்டைய இந்து சமயத்தின் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறார்கள். அந்தக்காலத்தில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒன்றாக இருக்கும்போது, அவர்கள் இந்து மக்களாகவே வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களுக்கென தனித்துவமான கலாச்சாரம், வழிமுறைகள் என அனைத்தும் இருந்தன. அதேபோல் அவர்கள் கலாஷ் கடவுளையே இப்போது வரை வணங்கி வருகிறார்கள். அதாவது அவர்கள் இருக்கும் பள்ளத்தாக்கை தெய்வமாகக் கருதி அவர்கள் வழிப்படுகிறார்கள். சிலர் கலாஷ் என்பது விநாயகர் என்றும் கௌரி தேவி என்றும் கூறி, அந்த கடவுளின் சிலைகளை வழிப்படுகிறார்கள்.

இந்தப் பள்ளத்தாக்கின் பார்டர் முடிவிலிருந்து செல்லும் வழி, ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்லும் வழியாகும். பொதுவாக, ஒரு பகுதியை சுற்றியுள்ள பகுதிகளின் கலாச்சாரத்தின் சாயல் அந்தப் பகுதி மக்களிடம் தெரியும். ஆனால், கலாஷ் மக்களிடம் அவர்களை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களின் கலாச்சார சாயல் சுத்தமாகவே இருக்காது.

Kalash People
Kalash People

இவர்கள் கலாஷ் கலாச்சாரத்தை மட்டுமே முழுவதுமாக பின்பற்றுகிறார்கள். அதேபோல் தோற்றமும் இவர்களிடம் தனித்துவமாக இருக்கும். அண்டை பகுதிகளில் இருக்கும் மக்களை போல சிறிதும் இல்லாமல், கூந்தல் நிறம், கருவிழியின் நிறம், சருமத்தின் நிறம் ஆகியவை வித்தியாசமாகவே இருக்கும். தெற்கு ஆசியாவிலேயே கலாஷ் மக்களை போல் யாருமே இல்லை என்பதே உண்மை.

அவர்கள் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் ஒரு மதுபானத்தைத் தயாரிப்பார்கள். திருவிழாக்களில் நன்றாக உடை அணிந்து, மது அருந்தி, நடனமாடுவார்கள்.

எப்போதும் கலாஷ் பெண்கள் பளிச்சென்ற நிறத்திலேயே உடைகள் அணிவார்கள். தலையிலிருந்து கால் வரை அவர்கள் அணியும் அனைத்து அணிகளும் மிகவும் நுனுக்கமாகவும் அதிகமாகவும் டிசைன்களைக் கொண்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
முட்டையை தலையில் தடவும் நபரா நீங்கள்? இது தெரிஞ்சா தடவ மாட்டீங்க!
Kalash Girl

இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளை இணைத்துப் பார்த்தாலும், கலாஷ் மக்களில் தான் ஐரோப்பியர்களின் DNA காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அலக்ஸாண்டர் இந்தியாவில் படையெடுத்து வரும்போது, அவரின் படையில் சிலர் இந்த நாட்டிலேயே தங்கிவிட்டனராம். அலெக்ஸாண்டர் அவர் நாட்டிற்கு திரும்பும்போது இந்திய நாட்டின் சூழலும், அழகும் பிடித்துப்போய் படையில் சிலர் இங்கேயே தங்கிவிட்டனர். அதன்பின்னர் அவர்கள் நம் நாட்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்களாம். ஆகையால் அவர்களின் சந்ததியினர்தான் கலாஷ் மக்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆகையால்தான், கலாஷ் மக்களில் ஐரோப்பியர்களின் DNA காணப்படுகிறது. கலாஷ் மக்களின் வித்தியாசமான அலங்காரம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பார்ப்பதற்கே நிறைய பேர் அங்கு சுற்றுலா செல்கின்றனர். இவையனைத்தையும் விட, அந்த இடம் இயற்கையின் சொர்க்கபூமி என்பதால், பலருக்கு அங்கு செல்வது மன அமைதியை தருகிறது என்றும் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com