ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

Interesting history of sweaters
Interesting history of sweaters
Published on

குளிர் மற்றும் பனிக்காலத்தில் குளிருக்கு இதமாக உடலைத் தழுவும் ஸ்வெட்டர்கள் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் நடைமுறை தேவைகளுடன் பின்னிப் பிணைந்த வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஸ்வெட்டர்களின் தோற்றம்: ஸ்வெட்டர்களின் வரலாறு மத்திய கிழக்கில் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. முதல் முதலில் கம்பளியை பயன்படுத்தி பின்னப்பட்ட ஆடைகள் சாக்ஸ் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டன.

மீனவர்களின் தொழில் முறை உடை: 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள மீனவர்கள் கடல்களில் மீன் பிடிக்கும்போது குளிரை தாங்கும்வண்ணம் ஸ்வெட்டர் அணிந்திருந்தார்கள். கடுமையான கடல் காலநிலைக்கு எதிராக வெப்பத்தையும் பாதுகாப்பையும் அவை வழங்கின. ஒரு வலுவான தொழிலாளர் வர்க்க அடையாளமாகத் திகழ்ந்தன. அந்த ஆரம்பகால ஸ்வெட்டர்கள் தடிமனான, கனமான கம்பளியால் செய்யப்பட்டன. பெரும்பாலும் சிக்கலான வடிவங்கள் மற்றும் கேபிளில் பின்னப்பட்ட வடிவமைப்புகளைக் கொண்டிருந்தன. அவை தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அயர்லாந்தில் மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பவர்களும் ஸ்வெட்டர்களை பயன்படுத்தினர். 1890களில் விளையாட்டு வீரர்களால் அமெரிக்காவில் அணியப்பட்டது.

தொழில் புரட்சி: 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாக, ஜவுளி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தது. பின்னல் இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, பின்னப்பட்ட ஆடைகளை பெரும் அளவில் உற்பத்தி செய்ய வழிவகுத்தது. கம்பளி ஆடைகளுக்கான தேவைகளும் பயன்பாடுகளும் ஸ்வட்டர்களை இன்னும் பிரபலமாக்கின.

கடற்படை செல்வாக்கு: 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ராயல் கடற்படை தங்கள் சீருடையின் ஒரு பகுதியாக கம்பளி ஸ்வெட்டர்களை அறிமுகப்படுத்தியது. இந்தப் பின்னப்பட்ட ஆடைகள் பெரும்பாலும் தனித்துவமான வடிவங்களைக் கொண்டிருந்தன. நீண்ட பயணங்களின்போது கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்கு கடுமையான கடல் காற்று மற்றும் குளிரைத் தாங்கும்வண்ணம், கம்பளி ஸ்வெட்டர்கள் ஆறுதலாக அரவணைப்பாக இருந்தன. இரண்டாம் உலகப் போரின்போது ராணுவ சீருடைகளின் ஒரு பகுதியாக ஸ்வெட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இது மேலும் அவற்றை பிரபலப்படுத்த உதவியது.

விளையாட்டுகள் மற்றும் ஹாலிவுட்டில் ஸ்வெட்டர்கள்: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஸ்வெட்டர்கள் பிரபலமான ஆடையாக மாறின. கோல்ஃப் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்காக உருவாக்கப்பட்டன. விளையாட்டு வீரர்கள் விதவிதமான வடிவமைப்புகளில் ஸ்வெட்டர்களை பயன்படுத்தினர். ஹாலிவுட் படங்களில் ஸ்வெட்டர்கள் மிகவும் நாகரிகமான உடைகளாக இருந்தன. 1930களில் ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் ஸ்வெட்டர்களை பிரபலப்படுத்தினார்கள்.

நவீன ஸ்வெட்டர்கள்: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்வெட்டர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வடிவங்களில் நாகரிக ஆடையாக மாறியது. பல்வேறு வண்ணங்கள் வடிவங்கள் மற்றும் அலங்காரங்களுடன் தயாராகின.

இதையும் படியுங்கள்:
புயல் காற்றையே தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட அலையாத்திக் காடுகள்!
Interesting history of sweaters

கலாசாரச் சின்னங்கள்: இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஸ்வெட்டர்கள் பல்வேறு துணை கலாசாரங்கள் மற்றும் சமூக இயக்கங்களுடன் தொடர்புடைய ஆடைகளாக மாறின. ஹாலிவுட் நடிகைகள் ஸ்வெட்டர்களை ஃபேஷன் பொருள்களாகப் பயன்படுத்தினர்.

கலாசார மாறுபாடுகள்: உலகெங்கிலும் பல பாணிகளில் ஸ்வெட்டர்கள் பன்முகத் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. பாரம்பரிய ஐரிஷ் அரன் ஸ்வெட்டர்கள், நார்டிக் வடிவமைப்புகள், உள்ளூர் கலாசாரம் மற்றும் கைவினை திறனை கொண்டாடும் பல்வேறு பிராந்திய பின்னல் நுட்பங்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகின்றன.

நவீன நாகரிகப் பிரதிபலிப்பு: ஸ்வெட்டரின் கண்டுபிடிப்பு நடைமுறை கைவினைத் திறன் மற்றும் கலாசார முக்கியத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு கவர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளது. வெவ்வேறு தலைமுறையினருடன் எதிரொலிக்கும் செயல்பாட்டு மற்றும் அழகியல் குணங்களை உள்ளடக்கிய இந்த ஆடைகள் நவீன நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பிரியமான ஆடையாகவும் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com