வருடா வருடம் இடம் மாறும் கிராமம் பற்றித் தெரியுமா?

bihar village...
bihar village...
Published on

னிதர்கள் படிப்பு மற்றும் வேலை காரணமாக இடம் பெயர்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் நாம் பார்க்கப் போகும் ஒரு கிராமம் ஒவ்வொரு வருடமும் இடம்பெயர்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். அந்த அதிசய கிராமம் பீகார் மாநிலத்தில் உள்ளது.

பீகாரில் உள்ள இந்த கிராமம் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த கிராமம் ஒவ்வொரு ஆண்டும் அதன் இடத்தை விட்டு ஒரு புதிய வடிவம் பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, ஆனால் இந்த வீடுகள் அனைத்தும் ஒரு வருடம் மட்டுமே நீடிக்கும். பீகாரில் உள்ள சஹர்சா மாவட்டத்தின் அதிசயமான ஊரைப் பற்றித்தான் இப்போது  நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இங்குள்ள மக்கள் பரிதாபகரமான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா!

நௌலா பஞ்சாயத்து, தர்ஹர், பகுனியா மற்றும் சஹர்சா மாவட்டத்தின் நோஹ்தா தொகுதியின் ஹட்டி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோசி ஆற்றில் மூழ்கிவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய கிராமங்கள் இங்கு குடியேறி புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால் இந்த வீடுகள் ஒரு வருடம் மட்டுமே இருக்கும். கோசி ஆற்றில் வெள்ளம் வரும்போது இங்கிருந்த அனைத்து சாலைகளும் தெருக்களும் அடித்து செல்லப்படுகின்றன. கோசி ஆறு இந்த கிராமங்கள் அனைத்தையும் மூழ்கடித்துச் செல்கிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும்!
bihar village...

ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தின்போது இப்பகுதி மாற்றம் அடைவதாக இங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றனர். அதன்பிறகு இவர்கள் அனைவரும் புதிய கிராமத்தில் குடியேறி, புதிய வீடுகள் கட்டிக்கொள்வதாக கூறுகின்றனர். இந்த இடைபட்ட நேரத்தில் அவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வெள்ளத்தின் போது கோசி ஆற்றின் ஆக்ரோஷத்தில் எந்த வீடு எப்போது மூழ்கும் என்று கணிப்பது கடினம் என்பதால் ஆற்றோரம் உள்ள மக்கள் இரவு பகலாக விழித்திருக்க வேண்டியுள்ளது. இப்படி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருவதால் இங்கு அபாயம் என்பது நிரந்தரமாக குடி கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிராமம் இடம் பெயர்கிறது; சாலைகள் துண்டிக்கப்படுகின்றன; போக்குவரத்திலும் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன இயற்கையை வெல்ல முடியாது என்பது உண்மைதான் ஆனால் இதில் அல்லல்படும் மக்களுக்கு உதவ முடியும் தானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com