வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம் தெரியுமா?

EVM and VVPAD machines
EVM and VVPAD machines

டைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை தொடங்க இருக்கிறது. ஆனால், அந்த வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு எப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். வாக்கு சீட்டாக இருந்தால் சீட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பார்கள். வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும் வாக்குகளை எப்படி எண்ணி அறிவிப்பார்கள் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். உங்கள் குழப்பத்தைப் போக்கத்தான் இந்தப் பதிவு.

தொகுதியில் உள்ள EVM இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஒரே மையத்துக்கு எடுத்து வரப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ரிடர்னிங் ஆபிசர், துணை ரிடர்னிங் ஆபிசர் மேற்பார்வையில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் 7 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, அங்கு வாக்கு எண்ணும் முகவர்கள் மூலம் எண்ணிக்கை நடைபெறும். சிறிது தொலைவு இடைவெளியில் தடுப்புக்கு அப்பால் வேட்பாளர்களின் முகவர்கள் நின்று இதைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும். அதன்பிறகு அரை மணி நேரம் கழித்து EVM இயந்திரம் சீல் அகற்றப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்களிடம் காட்டிய பிறகு வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் முகவர்கள், அப்பணி முடிந்து ரிசல்ட் வெளிவரும் வரை வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் உரிய ஒப்புதல் பெற்று அங்குள்ள போர்டில் முகவர்கள் எழுதுவர். இதுபோல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றோரின் விவரம் படிவம் 40ல் எழுதப்படும். அதற்கு கண்காணிப்பாளர் ஆட்சேபனை இல்லை (NOC) என்ற சான்று அளித்ததும் முடிவு சத்தமாக அறிவிக்கப்படும்.

Vote counting centre
Vote counting centre

வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். EVM வாக்குகளும் VVPAT சீட்டுகளும் அதற்கென உள்ள விதிப்படி ஒப்பிட்டு சரி பார்க்கப்படும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், EVM இயந்திரங்கள், VVPAT இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு தேர்தல் ஆணையத்தால் பாதுகாப்பாக வைக்கப்படும். யாரேனும் சந்தேகம் எழுப்பினாலோ, வழக்குத் தொடுத்தாலோ இதை வைத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

17 C Form
17 C Form

படிவம் 17சி என்றால் என்ன?

'வாக்குச் சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன' என்பது பற்றிய தகவல் அடங்கிய ஆவணமே 17சி படிவம் என்று அழைப்படுகிறது. இது ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள தலைமை அதிகாரியால் தயாரிக்கப்படும். இந்த ஆவணம் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் பெரும் பங்கை வகிக்கிறது. பூத் மட்டத்தில் முழுமையான வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த விரிவான தரவை 17சி படிவம் மூலம் அறிய முடியும்.

17சி படிவத்தில் EVM எந்த வரிசை எண்ணை சேர்ந்தது?

வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 17A ன் கீழ் வாக்காளர்கள் பதிவேட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விதி 49AMன் கீழ் வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வாக்கு சீட்டுகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் தேர்தல் அதிகாரியால் முழுமையாக நிரப்பப்படும்.

இதையும் படியுங்கள்:
உணவில் உப்பைக் குறைப்பதற்கான 5 எளிய வழிகள்!
EVM and VVPAD machines

இந்தப் படிவத்தின் அடுத்த பகுதியும் உள்ளது. வாக்கு எண்ணும் நாளில் அது பயன்படுத்தப்படும். இதில் ஒரு வேட்பாளர் எத்தனை வாக்குகள் பெற்றார் என்று எழுதப்படும். தேர்தல் நடத்தை நெறிமுறைகள் 1961ன் 49A & 56Cன் கீழ், தேர்தல் அதிகாரி வாக்குகள் பற்றிய தகவல்களை படிவம் 17Cன் பகுதி1 ல் நிரப்ப வேண்டும். வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் அதிகாரி இத்தகவலை வாக்குச்சாவடி முகவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

இதுதான் வாக்கு எண்ணிக்கை முறையாகும் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் திருவிழா ஒரு வழியாக செவ்வாய் அன்று வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. நாம் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி நாம் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டோம் என்ற மன நிம்மதியோடு நமது வாழ்க்கை பயணத்தை தொடர்வோம். புதிதாய் பொறுப்பேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com