காவலுக்குக் கெட்டிக்காரனாக விளங்கும் திண்டுக்கல் பூட்டுகளின் வரலாறு தெரியுமா?

திண்டுக்கல் பூட்டு சாவி
திண்டுக்கல் பூட்டு சாவிhttps://www.dindigulanslocks.in
Published on

வீடுகளுக்குப் பாதுகாப்பான காவலர்களாக இருப்பவை பூட்டுகள். தமிழ்நாட்டின் திண்டுக்கல் நகரத்திலிருந்து உருவாகும் பூட்டுகள் அதன் தனித்துவமான வடிவமைப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் கலாசார முக்கியத்துவத்திற்காக பிரபலமாக விளங்குகிறது. பல முக்கியமான கோயில்களில் இருக்கும் பூட்டுகள் திண்டுக்கல்லில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் ஆள் உயர பூட்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டது என்பது  திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

பாரம்பரியம்: திண்டுக்கல் பூட்டுகள் 400 ஆண்டுகள் பழைமையும் பாரம்பரியமும் வாய்ந்தவை. இப்பகுதியில் உள்ள திறமையான கைவினை கலைஞர்களால் இந்தக் கலை வளர்க்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டது. தலைமுறை தலைமுறையாக அவர்களின் கலைத்தன்மையை நாடறியச் செய்திருக்கிறது.

தரம்:  திண்டுக்கல் பூட்டுகள் அவற்றின் உயர் தரம் மற்றும் வலுவான தன்மைக்கு பெயர் பெற்றவை. அவை இரும்பு மற்றும் பித்தளை உள்ளிட்ட உயர்ந்த மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் சிக்கலான வடிவமைப்பு மற்றும் நம்பகமான பாதுகாப்பு அம்சங்களுக்காக அறியப்படுகின்றன.

புவிசார் குறியீடு: திண்டுக்கல் பூட்டின் தனித்துவத்தை அங்கீகரித்து புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த குறிச்சொல் பாரம்பரிய கைவினைப் பொருட்களை;க் பாதுகாக்க உதவுகிறது.

நம்பிக்கையின் சின்னம்: வரலாற்று ரீதியாக திண்டுக்கல் பூட்டுகள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக்கு ஏற்றதாக திகழ்கிறது. திண்டுக்கல்லில் செய்யப்பட்ட பூட்டை எளிதில் சேதப்படுத்த முடியாது என்று மக்கள் நம்புகின்றனர். மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பதற்கான விருப்பமான தேர்வாக இது அமைகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.

கலாசார அடையாளம்: திண்டுக்கல் பூட்டுகள் நகரின் கலாசார அடையாளமாக மாறி உள்ளது. திண்டுக்கல் என்றாலே பூட்டுதான் ஞாபகம் வரும். இவற்றின் உற்பத்தி செயல்முறை பாரம்பரிய நுட்பங்களை உள்ளடக்கியது. மிகுந்த உழைப்பு மற்றும் அதிக திறன் தேவைப்படும் செயல் இது. இந்தப் பூட்டு தயாரிப்போடு தொடர்புடைய கலாசார பாரம்பரியத்தையும் பரம்பரை அறிவையும் பாதுகாக்கிறது. இவற்றின் தனித்தன்மை பெரும்பாலும் கலாசார விழாக்கள், வர்த்தகக் கண்காட்சிகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் பூட்டுகளை ஊக்குவிக்க உதவுகிறது. திண்டுக்கல் நகரத்திற்கும் அதன் கைவினைகளுக்கும் அங்கீகாரத்தை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
சுனாமியில் ஸ்விம்மிங் போடும் பெட்ரல் பறவைகள்!
திண்டுக்கல் பூட்டு சாவி

வளமான பாரம்பரியம்: பூட்டு என்பது பாதுகாப்பு சாதனம் மட்டுமல்ல; உள்ளூர் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகளின் ஒரு பகுதி ஆகும். உதாரணமாக, பாரம்பரிய பூட்டுகள் பெரும்பாலும் கோயில்கள், வீடுகள் மற்றும் திருவிழாக்களின்போது பயன்படுத்தப்படுகின்றன. அவை பிராந்தியத்தின் கலாசார நடைமுறைகளில் ஆழமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் பூட்டுகளின் புகழ், அதன் வரலாறு, கைவினை திறன், தரம், கலாசார முக்கியத்துவம் மற்றும் உள்ளூர் சமூகத்தில் அது ஏற்படுத்தும் பொருளாதார தாக்கத்திலிருந்து உருவாகிறது. இந்தப் பூட்டுகள் திண்டுக்கல்லின் வளமான பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன.

இயந்திரங்களால் தயாரிக்கப்படும் அலிகார் பூட்டுக்கள் பிரபலமாகத் தொடங்கிய பின்பு திண்டுக்கல் பூட்டுகளின் தேவை சற்றே குறையத் தொடங்கியது. அலிகார் பூட்டுகள் சிறிய அளவில் அழகான தோற்றங்களுடன் மலிவான விலையில் கிடைக்கின்றன. அதனால் திண்டுக்கல் பூட்டுகள் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கத் தொடங்கியது. ஆனாலும், திண்டுக்கல் பூட்டுகளின் மவுசு இன்னும் குறையவே இல்லை. அதன் தரம் மற்றும் தயாரிப்பு முறைக்காக இன்னும் பல மக்களால் விரும்பப்பட்டு வருகின்றன என்பது பெருமைக்குரிய விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com