பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

Do you know the history of piggy banks?
Do you know the history of piggy banks?
Published on

வெளிநாடுகளில் குழந்தைகள் காசு, பணம் சேர்க்க 'பிக்கி பேங்க்' என்று அழைக்கப்படும் பன்றி வடிவ உண்டியலையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். அது ஏன்? அதற்கான காரணம் குறித்தும் அத்துடன் உலக சேமிப்பு நாள் பற்றியும் கொஞ்சம் இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோமா?

பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் காசு சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட உண்டியல்கள் கிடைத்துள்ளன. இந்த உண்டியல்கள் களி மண்ணிலோ, மரத்திலோ செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலும் பானை வடிவம் மற்றும் ஜாடி வடிவத்தில் காசு போடுவதற்கான துளையுடன் அவை இருந்தன.

இந்த உண்டியல் துளையை தலைகீழாகக் கவிழ்த்து ஓரிரு காசுகளை எடுக்கலாம் என்றாலும், மொத்த காசையும் எடுக்க வேண்டுமென்றால், அந்த உண்டியலை உடைக்கவே வேண்டும். அதற்குப் பிறகு அந்த உண்டியலை தூக்கிபோட்டுவிட வேண்டியதுதான்.

மத்திய காலத்தில்தான் உண்டியல்களின் வடிவமும் களி மண்ணும் மாறின. அந்தக் காலத்தில் உண்டியல்கள் செய்ய ஆரஞ்சு வண்ணக் களி மண்தான் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில் அதன் பெயர் 'Pygg' (பிக்).

இந்தக் களி மண்ணில் செய்யப்பட்ட உண்டியல்கள் 17ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலம். அது 'பிக் பேங்க்' (Pygg Bank) எனப்பட்டது. காலப்போக்கில் அது மருவி 'பிக்கி பேங்க்' (Piggy Bank) என்றாகி விட்டது. பெயர் மருவிய பிறகுதான் பன்றி வடிவ உண்டியல்கள் பிரபலமடைந்தன.

இதையும் படியுங்கள்:
இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!
Do you know the history of piggy banks?

உலகின் பல பகுதிகளில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகின்றன. ஜெர்மனியிலும், நெதர்லாந்திலும் பன்றி உண்டியல்கள் அதிர்ஷ்டப் பரிசாகவும், புத்தாண்டுப் பரிசாகவும் கொடுக்கப்படுகின்றன. இன்றைக்கு களி மண்ணைத் தவிர மற்ற பொருட்களிலும், பன்றியைத் தவிர்த்த மற்ற வடிவங்களிலும் உண்டியல்கள் செய்யப்படுகின்றன. ஆனால், ஆங்கிலத்தில் உண்டியல் பெரும்பாலும் ‘பிக்கி பேங்க்' என்றே அழைக்கப்படுகிறது.

ஜப்பானில், ‘மனேகி நெகோ’ எனப்படும் காசுப் பூனை அதிர்ஷ்டத்துக்காகவும், நல்ல எதிர்காலத்துக்காகவும் வீடுகளில் வைக்கப்படுகிறது. அதனால் ஜப்பானில் பிக்கி பேங்க் உண்டியலுடன், மனேகி நெகோ உண்டியலும் மிகவும் பிரபலமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com