தபால் கார்டு வரலாறு தெரியுமா?

Lipmen Post card
லிப்மேன் போஸ்ட் கார்டுhttps://postcardhistory.net

லகில் முதன் முதலில் அஞ்சல் அட்டையை பயன்படுத்தும் கருத்தை வெளியிட்டவர் அமெரிக்காவை சேர்ந்த சர்.லட்டன் என்பவர்தான். ஆனால், இவரின் இந்தப் புதிய முயற்சி இவருக்கு பலன் அளிக்கவில்லை. இவர் லிப்மேன் என்பவருக்கு போஸ்ட் கார்டு அடிக்கும் உரிமையை விற்றுவிட்டார். இவர், ‘லிப்மேன் போஸ்ட் கார்டு’ என்ற பெயரில் அமெரிக்காவில் பிலடெல்பியா மாகாணத்தில் தயார் செய்து விற்பனையைத் துவக்கினார்.

அரசுபூர்வமான உரிமையுடன் முதன்முதலாக 1869ல் ஆஸ்திரியா போஸ்ட் ஆபீஸ்தான் தபால் கார்டு விற்பனையை முறைப்படுத்தியது. இதற்கு உதவியவர் டாக்டர் இம்மானுவேல் ஹெர்பான் என்ற பேராசிரியரே. பழுப்பு நிறத்தில் வெளியிடப்பட்ட இந்த போஸ்ட் கார்டானது முதல் மாதத்திலேயே 15 லட்சம் கார்டுகள் விற்பனையானது.

பின்னர், பிரான்சுக்கும் ரஷ்யாவுக்கும் போர் ஏற்பட்டபோது பிரெஞ்சு வீரர்கள் தங்கள் குடும்பத்தாரோடு தொடர்புகொள்ள கஷ்டப்பட்டனர். அப்போது லியோன் பெனார்சானியோ என்ற கிராமப்புற பெரியவர்  ராணுவ வீரர்களின் உபயோகத்திற்காக தனியான போஸ்ட் கார்டுகளை உருவாக்கினர். இதில் ராணுவ தளவாடங்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆகவே, படங்களுடன் வெளிவந்த முதல் போஸ்ட் கார்டு இதுதான். பின்னர் பாரிஸ் நகரில் 1889ல் ஈபில் டவர் உருவாக்கப்பட்டவுடன் அந்த கோபுரத்தின் படத்துடன் போஸ்ட் கார்டு வெளிவந்தது 1902ம் ஆண்டில் பிரிட்டனில்தான் நாம் தற்சமயம் உபயோகப்படுத்தும் போஸ்ட் கார்டு அதாவது ஒரு பக்கத்தில் விஷயங்கள் எழுதவும் மறுபாதியில் விலாசம் எழுதவும் உருவாகிய கார்டு உபயோகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இம்முறையை பிரான்ஸ் 1901லும், ஜெர்மனி 1907லும் பின்பற்றியது. அமெரிக்கா 1907ம் ஆண்டில் இம்முறையை தனது நாட்டில் பழக்கத்திற்கு உட்படுத்திக் கொண்டது.

இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் தபால் பெட்டியில் வாக்குச் சீட்டை போட்டு வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது 1996ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் கலவரம் நிலவி வந்தது. இதனால் ஜம்மு காஷ்மீரில் தங்கி இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் கலவரம் நடந்து வந்த பகுதிகளில் வசித்த மக்கள் வாக்களிக்க வசதியாக அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஒரு சட்டம் போட்டார். அங்குள்ள ஜம்மு, உதம்பூர், ரஜோரி, கதுவா, தோடா மாவட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தபால் பெட்டியில் வாக்களிக்கலாம் என்று அரசியல் சட்டம் 1952ன்படி அறிவித்தார். இதற்காக நிறுவப்பட்ட 55 தபால் பெட்டியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்கை செலுத்தினார்கள். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சீட்டை வழங்கினர். இந்த நூதன வாக்குப்பதிவானது சுமார் மூன்று வாரங்கள் தொடர்ந்து நடந்தது. தபால் பெட்டியில் செலுத்திய வாக்குகளை தபால் ஊழியர்கள் சேகரித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினர்.

250 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் தபால் நிலையம்: 1774ம் ஆண்டு அப்போதைய வங்க மாகாண கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கொல்கத்தாவில் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 250 ஆண்டுகள் பயணத்தை பறைசாற்றும் வகையில் தபால் நிலைய வளாகத்தில் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் முதல் முறையாக தபால்கள் எவ்வாறு ரயில் பெட்டிகள். கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்தும். 1911ம் ஆண்டு தபால்களை எடுத்துச் சென்ற முதல் விமானம் குறித்தும் முப்பரிமாண வடிவத்தில் விளக்கப்பட்டுள்ளது.

1773ம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் வங்கத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில் இந்தியாவின் முதல் தபால் நிலையம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post box under the sea
கடலுக்கு அடியில் தபால் பெட்டிhttps://www.onmanorama.com

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் தபால் பெட்டி: தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தக் காலகட்டத்திலும் தபால் முறைக்கு என்று தனி அங்கீகாரம் இருக்கத்தான் செய்கிறது. உலகில் இன்றும் கடிதம் மூலமாக தகவல் அனுப்புவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படியான ஒன்றுதான் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டி. ஆச்சரியமாக இருக்கிறதா?

இதையும் படியுங்கள்:
வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்க சில வாஸ்து குறிப்புகள்!
Lipmen Post card

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் இந்தத் தபால் பெட்டி ஜப்பானின் கசாமிபே என்ற இடத்தில் உள்ளது. கரையிலிருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெட்டியில் உங்களுடைய கடிதத்தை கடலுக்கு அடியில் நீந்தி சென்றுதான் போட வேண்டும். இதற்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. ஆயில் பெயிண்ட் மூலம் நீங்கள் எழுத விரும்புவதை எழுதி போட வேண்டும். இதற்காக பணிபுரிபவர்கள் அதனை எடுத்து நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பர்.

2002ம் ஆண்டு இந்தத் தபால் பெட்டியின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. ஒரு நாளைக்கு சுமார் 1000 முதல் 1500 வரை தபால் அட்டைகள் இந்தப் பெட்டியில் போடப்படுவதாகக் கூறப்படுகிறது. நீருக்கடியில் இருந்து வரும் தபால் என்பதால் இதற்கான வரவேற்பு உலக அளவில் அதிகமாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com