வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்க சில வாஸ்து குறிப்புகள்!

வாஸ்து அறை
Vastu Roomhttps://www.magicbricks.com

வீட்டில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிறைந்திருக்க வேண்டுமானால் எப்போதும் வீட்டில் நல்ல அதிர்வலைகள் நிறைந்திருக்க வேண்டும். இதற்கு எந்தவித செலவும் இல்லாமல் வீட்டில் சிறிய மாற்றங்களை செய்தாலே குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

வாஸ்து என்பது இயற்கையுடன் தொடர்புடையதாகும். வீட்டில் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடி அடைத்து வைக்காமல் எப்பொழுதும் திறந்திருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நல்ல வெளிச்சம், காற்று ஆகியவை வீட்டிற்குள் வருவதால் நேர்மறை ஆற்றல் பெருகும். பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று மற்றும் சூரிய ஒளியும் வீட்டுக்குள் வருவதால் நேர்மறை ஆற்றல்கள் பெருகி எதிர்மறை ஆற்றல்கள் விலகி ஓடும்.

அடுத்ததாக வீட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தவும், எதிர்மறை ஆற்றல்களை விலக்கவும் மணி பிளான்ட் போன்ற வாஸ்து செடிகளை வீட்டிற்குள் வளர்க்க, மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வீட்டுக்குள் அடர்த்தி வண்ணங்கள் இல்லாமல் லைட் வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரும். குறிப்பாக படுக்கை அறையிலும், வரவேற்பறையிலும் இளம் நீலம், க்ரீம் கலர் வண்ணங்களை தேர்ந்தெடுத்து அடிப்பது மகிழ்ச்சியைத் தரும்.

வீட்டில் அழகிற்காக அமைக்கப்படும் நீரூற்று வாஸ்து குறைபாடுகளைப் போக்கும் தன்மை கொண்டது. வீட்டின் வடகிழக்கு திசையில் மீன் தொட்டிகள் வைப்பதும் பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும். தென்கிழக்கு எனப்படும் அக்னி மூலையில் சமையல் அறை வரும்படி அமைத்து அடுப்பை வைப்பதும், கிழக்கு திசை நோக்கி நின்று சமைப்பதும் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி உருவாகாமல் எப்பொழுதும் சந்தோஷத்தையும் அமைதியையும் நிலவச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
சத்துக்களை வாரி வழங்கும் அட்சய பாத்திரம் பப்பாளிப்பழம்!
வாஸ்து அறை

முக்கியமாக, வீட்டின் கழிவறைக் கதவுகள் எப்பொழுதும்  மூடி இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி கழிவறை கதவுகள் மூடி இருப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுத்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். வரவேற்பறையில் அதிகப்படியான பொருட்களை சேர்த்து அடைத்து வைக்காமல் இருப்பதும், உடைந்த தேவையற்ற பொருட்களை அவ்வப்போது வெளியேற்றி விடுவதும் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

நீலம், பச்சை போன்ற அமைதியான வண்ணங்களை படுக்கை அறையில் அமைக்க அமைதியான தூக்கம் மற்றும் நேர்மறை ஆற்றலை உண்டாக்கும். வீட்டின் ஆற்றலை அதிகரிக்க கண்ணாடிகளை அதுவும் சதுரக் கண்ணாடிகளை விட, வட்டமான, ஓவல் வடிவான கண்ணாடிகளை தேர்ந்தெடுத்து அறைகளின் வடக்கு அல்லது கிழக்கு சுவர்களில் மாட்டவும்.

இனிமையான ஒலிகளும், நறுமணங்களும் ஒரு இடத்தின் ஆற்றலை உயர்த்தும் சக்தி பெற்றவை. வீட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க காற்றில் அசையும் மணிகள், இனிமையான இசை நறுமணம் வீசும் அகர்பத்திகள் அல்லது மெழுகுவர்த்திகளை உபயோகிக்கவும். அதேபோல், வீட்டிலுள்ள குழாய்களில் ஏதேனும் கசிவு இருக்குமானால் அதனை உடனடியாக சரிசெய்வது எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com