கின்னஸ் சாதனை புத்தகம் தோன்றிய வரலாறு தெரியுமா?

ஆகஸ்ட் 27, கின்னஸ் சாதனை புத்தகம் தோன்றிய நாள்
Guinness Book
Guinness Bookhttps://mixmag.net
Published on

டந்த 1951ம் ஆண்டு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'சர்க்யூ பீவர்' என்பவர் வேட்டையாடுவதற்காக ஆற்றங்கரையோரம் நடந்து சென்றார். அப்போது வானில் 'கோல்டன் பிளவர்' பறவைக் கூட்டம் ஒன்று சென்றது. உடனே தனது துப்பாக்கியை எடுத்து, அந்த கூட்டத்தை நோக்கி சுட முயன்றார். ஆனால், அதற்குள் பறவை கூட்டம், கண்ணுக்கே தெரியாத தொலைவுக்கு சென்றுவிட்டது. இது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மேலும், ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ‘உலகிலேயே மிகவும் வேகமாக பறக்கும் பறவையினம், அதுவாகத்தான் இருக்குமோ?’ என்று எண்ணினார்.

அது தொடர்பாக பல புத்தகங்களில் தேடிப் பார்த்தார். ஆனால், எங்கும் அதற்கான விடை கிடைக்கவில்லை. இதனால் அது தொடர்பாக நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன? என்று யோசித்தார். உடனே லண்டன் சென்று, அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்களை சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டை சகோதரர்களை சந்தித்தார். மேலும், அவர்களிடம் தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்பு தர முன்வந்தனர். அந்த 3 பேரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ந் தேதி 198 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. அதில் உலகிலேயே மிகவும் பெரியது, மிகவும் சிறியது போன்ற விவரங்கள் அடங்கி இருந்தன. மேலும், அந்த ஆண்டு வெளியான புத்தகங்களில் அமோகமாக விற்பனையான புத்தகம் என்ற பெருமையையும் அது பெற்றது.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களை பற்றிய செய்திகளோடு இந்தப் புத்தகம் வெளிவருகிறது. ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம், 1957 மற்றும் 1959 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை. ஆனால், அதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை. கின்னஸ் புத்தகம் பற்றிக்கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ம் ஆண்டு தகவல் இருந்தது. அதாவது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில் இடம் பிடித்தது. முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது 40 மொழிகளில் வெளியாகிறது. சில ஆச்சர்யமான சாதனைகள்.

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவனுக்கு 4 வயதுதான் ஆகிறது. சரியாக 4 ஆண்டுகள் 218 நாட்களில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயதில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மார்ச் 9, 2023 அன்று, அவரது சயீத் என்ற யானையும் கரடியும் (The Elephant Saeed and the Bear) என்ற குழந்தைகள் புத்தகம் 1,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையான பிறகு அவரது சாதனைப் பதிவு சரிபார்க்கப்பட்டது. இந்தப் புத்தகம் இரு விலங்குகளுக்கு இடையே எதிர்பாராத நட்பு ஏற்பட்டதைப் பற்றிய கதை.

இதையும் படியுங்கள்:
வீட்டுப் பெரியவர்களிடம் நாம் கற்க வேண்டிய  வாழ்க்கைப் பாடங்கள்!
Guinness Book

உலகில் பெரும்பாலான மக்கள் வித்தியாச வித்தியாசமாக சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் இதாகோ ( Idaho) நகரைச் சேர்ந்த டேவிட் ரஷ் 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனைகளை செய்து அசத்தியுள்ளார். முதலில் ஜாக்கிலிங் வித்தை (3 ஆப்பிள்களை ஒன்றின் பின் ஒன்றாக தூக்கிப்போட்டு ஒரு நிமிடத்திற்குள் அதிக முறை அதை கடித்து சாதனை). இரண்டாவதாக டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 பாட்டில் மூடிகளில் 10 முறை துள்ளச் செய்வது, வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்துப் பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 வினாடிகளில் அதிக டி - ஷர்ட்களை அணிதல், 10 டாய்லெட் பேப்பர் ஒரே கையால் வேகமாகக் கழிவறைத் தாள்களை அடுக்குதல். கைகளால் 30 வினாடிகளில் அதிக அளவில் தண்ணீரை அப்புறப்படுத்துதல். 1 லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றை உறிஞ்சு குழாய் மூலம் வேகமாகக் குடித்தல் என 15 உலக சாதனைகளை செய்து அசத்தியுள்ளார். இவர் தனது வாழ்நாளில் இதுவரை 250 உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com