வீட்டுப் பெரியவர்களிடம் நாம் கற்க வேண்டிய  வாழ்க்கைப் பாடங்கள்!

பெரியோரிடம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்
பெரியோரிடம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்https://seniority.in
Published on

ம் வீட்டில் வசிக்கும் வயதில் மூத்த பெரியவர்கள் தம் வாழ்நாள் அனுபவங்கள், ஞானம், நிதானம் போன்ற பல குணங்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பொறுமை: வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்கள், சவால்கள், துயரங்களை சந்திக்க பொறுமை மிக அவசியம். நாம் நினைத்தது நடக்கும் வரை காத்திருப்பதன் அவசியத்தையும் மதிப்பையும் நம் வீட்டுப் பெரியவர்கள் நமக்குக் கற்பிக்கிறார்கள். சிறிய விஷயத்துக்குக் கூட விரக்தி அடையும் இளையோர் இந்த குணத்தை வயதானவர்களிடமிருந்து அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உறவுகளின் முக்கியத்துவம்: பெரியவர்கள் பெரும்பாலும் குடும்பம், நட்பு மற்றும் சமூகத்தின் மதிப்பை உணர்ந்து நடந்து கொள்கிறார்கள். ஒரு நிறைவான வாழ்க்கைக்கு உறவுகள் முக்கியம் என்பதை அவர்கள் புரிந்து, அதை கடைப்பிடித்தும் வருகிறார்கள். மேலும், அவர்கள் இளமையாக இருந்தபோது தங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடாததற்கு தற்போது முதுமையில் வருந்துகிறார்கள். இந்தப் பாடத்தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

திருப்தி மற்றும் எளிமை: பொதுவாக முதியவர்கள் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. எளிமையான இன்பங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். தொடர்ந்து வாழ்க்கையில் தேடிக்கொண்டே இருப்பதை விட, தங்களிடம் உள்ளவற்றை கொண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். சிறிய அன்றாட தருணங்களில் கூட அவர்களால் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ முடிகிறது. இது மிகவும் மதிப்பு மிகுந்த பாடமாகும்.

ஆரோக்கியத்தின் மதிப்பு: வயதாகும்போது முதியவர்கள் அடிக்கடி உடல் நல சவால்களை எதிர்கொள்கின்றனர். இது ஒருவர் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. நமது உடல், மன ஆரோக்கியம் நல்வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் நினைவூட்டுகிறார்கள்.

நன்றி உணர்வு மற்றும் பணிவு: வாழ்க்கையில் உயர்வு மற்றும் தாழ்வு இரண்டையும் அனுபவித்த மூத்தவர்கள் பெரும்பாலும் ஆழ்ந்த நன்றி உணர்வு மற்றும் பணிவு ஆகியவற்றை கடைப்பிடிக்கிறார்கள். நம்மிடம் இருப்பதை பாராட்டுவதன் முக்கியத்துவத்தையும், நமக்கு கிடைத்த விஷயங்களுக்காக நன்றியுடன் இருப்பதையும், வாழ்க்கையில் எந்த நிலைமைக்கு உயர்ந்தாலும் பணிவுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் கற்பிக்கிறார்கள்.

விட்டுக் கொடுக்கும் ஞானம்: பிறரை அனுசரித்துப் போவது, எளிதில் சமாதானமாவது போன்ற செயல்கள் மூலம், முதியவர்கள் விட்டுக் கொடுத்தலை கடைப்பிடிக்கிறார்கள். வாழ்க்கை நிலையாமையை உணர்ந்ததால் விட்டுக்கொடுத்து வாழ்தல் சிறந்தது என்பதை அவர்கள் உணர்த்துகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான உணவுகள்!
பெரியோரிடம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்

கற்றலின் முக்கியத்துவம்: பல முதியவர்கள் தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். பொழுதுபோக்குகளை தொடர்கிறார்கள். இந்த உலகத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். வயது என்பது ஒரு எண் மட்டுமே. எந்த வயதிலும் கற்கலாம். அறிவுசார் வளர்ச்சி என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் செயல் என்பது அவர்கள் உணர்த்துகிறார்கள்.

மீள் தன்மை: பல முதியவர்கள் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள், போர்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட துன்பங்களின் மூலம் தங்களை மெருகேற்றிக் கொண்டுள்ளனர். அவற்றை எதிர்கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் மன வலிமை, சிரமங்களில் இருந்து மீளும் தன்மை போன்றவை எல்லோருக்குமே ஒரு சக்தி வாய்ந்த பாடமாகும்.

மரபு மற்றும் தாக்கம்: முதியோர்கள் தாங்கள் விட்டு செல்லும் பாரம்பரியத்தை பற்றி சிந்திக்கிறார்கள். நம் செயல்கள், மதிப்புகள் மற்றும் உறவுகள் நாம் மறைந்த பின்பு மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நமக்கு கற்பிக்கிறார்கள்.

எனவே, நம் வீட்டில் நம்முடன் வாழும் பெரியோர்களின் அர்த்தமுள்ள, சமநிலையான நிறைவான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் விலைமதிப்பற்ற வழிகாட்டுதலை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com