மே தினம் வந்த கதை தெரியுமா உங்களுக்கு?

May day
May dayhttps://www.ndtv.com

ன்று உலகெங்கும் மே மாதம் முதல் நாளை தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். மே தினம் பிறந்த இடம் சோவியத் நாடு என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. மே தினம் பிறந்த இடம் அமெரிக்காதான். 1884ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அமெரிக்கா, கனடா நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் பேரவை எட்டு மணி நேர வேலையை சட்டபூர்வமாக ஆக்கிட வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்க தீர்மானித்தது. அதன்படி 1886ம் ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் உள்ள தொழில் நகரங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றாலும் சிகாகோ நகரம்தான் தீவிர உணர்ச்சிமிக்க தொழிலாளர்களின் போராட்டக் களமாகத் திகழ்ந்தது. அதுவரை தொழிலாளர்கள் அப்படிப் போராடியதே கிடையாது. அதைக் கண்டு அரசாங்கம் சினந்தது. அவ்வண்ணம் போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கண்மூடித்தனமாக ஏவி விட்டது. மே 3ல் நடைபெற்ற மெக்கார்மிக் ரீப்பர் தொழிற்சாலை வேலை நிறுத்தமும், மறுநாள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டமும் பெரும் அடக்குமுறைக்கு ஆளாகியது. இதில் உயிர் பலிகள் ஏராளம்.

1888ம் ஆண்டில் நடைபெற்ற தொழிலாளர் பேரவையில் தொழிலாளர்கள் இயக்கத்தினை அரசியல் முறையில் மே முதல் நாள் நடத்தத் திட்டமிட்டது. 1889 மே முதல் நாளை அமெரிக்க தொழிலாளர் பேரவை விரிவாக நடத்தத் திட்டமிட்டிருந்ததால் அனைத்து நாடுகளில் உள்ள தொழிலாளர் அமைப்புகள் இதையே தொழிலாளர் நாளாகக் கொண்டாட முடிவு செய்தனர். இப்படித்தான் மே தினம் பிறந்தது. 8 மணி நேர வேலை உரிமைக்காக தோன்றிய போராட்ட நாளில் பிறந்ததுதான் மே நாள் என்ற தொழிலாளர் தினம்.

ஆண்டுதோறும் மே தின விழாவில் ரஷ்யாவின் தலைவர் கலந்துகொண்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் முதலாளித்துவ சுரண்டலின் கேடு, உலக அமைதியின் அவசியம் முதலானவற்றை விளக்கி உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. தொழிலாளர்கள் இயக்கத்தை முதன் முதலில் தொடங்கியவர் சர்.ஜேம்ஸ் லுடாயி. முதன் முதலில் தோன்றிய தொழிலாளர் இயக்கத்திற்கு, ‘லூடாயி இயக்கம்’ என்றே பெயர்.

இதையும் படியுங்கள்:
கிராஜுவிட்டி என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?
May day

1864ல் உலக அளவிலான தொழிற்சங்கத்தை முதன் முதலில் காரல் மார்க் ஏற்படுத்தினர். பி.பி.வாரியா 1918ல் முதல் தொழிற்சங்கத்தை சென்னையில் தொடங்கினார். சென்னையில் தோன்றிய முதல் தொழிற்சங்கத்தின் பெயர், ‘மதராஸ் லேபர் யூனியன்’ என்பதாகும். இன்றைய நாளில் மே தின பேரணிகள் நடைபெறுகின்றன.

மே தினம் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவதெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் மாறுபாட்டினால்தான். புராதன ரோமானியர்கள் மே தினத்தை மகிழ்ச்சி அளிக்கும் நாள், கேளிக்கை தினமாகக் கொண்டாடினர். வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மே தினத்துக்கு முதல் நாள் இரவை வேடிக்கை இரவு என்று கொண்டாடுகின்றனர். அன்று இரவில் வீடு மற்றும் கடைகளில் கதவுகள் அகற்றப்பட்டிருக்கும். கதவுகளின் பூட்டுகளை உடைத்து வைத்து விடுவர். கடைகளின் பெயர்ப்பலகைகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கும். இவை எல்லாம் மே தின கொண்டாட்டங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com