கிராஜுவிட்டி என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?

Gratuity
Gratuityhttps://www.indiafilings.com

ன்று மே 1, தொழிலாளர் தினம். ஒவ்வொரு தொழிலாளரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல் இது. பணிக்கொடை எனப்படும் கிராஜுவிட்டி என்றால் என்னவென்று தெரியாமலேயே இன்னும் பல தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பணியாற்றும் நிறுவனம் நமக்குத் தரவேண்டிய உரிமை தொகை இது. ஆனால், அந்த உரிமையை நாம் எப்படிப் பெறுவது? கிராஜுவிட்டி பற்றி நம்மில் பலருக்கு முழுமையாகத் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. கிராஜுவிட்டி என்றால் என்ன, அது எப்போது கிடைக்கும், அதை எப்படிக் கணக்கிடுவது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒரு ஊழியர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் அவருக்கு கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை செலுத்தப்படும். சம்பளதாரர்கள் கிராஜுவிட்டி பெறுவதற்கு என விதிமுறைகளும், கிராஜுவிட்டி தொகையை கணக்கிடுவதற்கு தனி ஃபார்முலாவும் இருக்கிறது.

குறைந்தது 5 ஆண்டுகளாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தால் அந்த ஊழியர் கிராஜுவிட்டி பெற தகுதியானவர் ஆகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அந்த நிறுவனத்தை விட்டு விலகினாலும் அவருக்கு கிராஜுவிட்டி கிடைக்கும். சம்பளதாரர்களுக்கான கிராஜுவிட்டி தொகையில் ஊழியரின் சம்பளத் தொகையில் இருந்து சிறு தொகை மட்டுமே எடுத்து சேர்க்கப்படும். பெரும்பகுதி தொகை நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும்.

பணிக்கொடை சட்டம் 1972 (Payment of Gratuity Act, 1972) விதிகளின்படி, குறைந்தது 10 ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் எல்லா ஊழியர்களுமே கிராஜுவிட்டி பெற தகுதியானவர்கள். கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ் வராத நிறுவனங்களும் கூட விருப்பப்பட்டால் ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி செலுத்தலாம் என சட்டம் சொல்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆல்மண்ட் ஆயிலில் இருக்கும் அற்புதமான 10 ஆரோக்கிய நன்மைகள்!
Gratuity

கிராஜுவிட்டியை கணக்கிடும்போது, ஒரு ஊழியர் 6 மாதத்துக்கு வேலை செய்திருந்தால் அது ஒரு ஆண்டாகவே கருதப்படும். உதாரணமாக, ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் 7 மாதம் வேலை செய்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு கிராஜுவிட்டி கணக்கிடும்போது 7 ஆண்டுகளாகவே கணக்கிடப்படும். மறுபுறம், ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் 4 மாதம் வேலை செய்திருந்தால், அவர் 6 ஆண்டுகள் வேலை செய்ததாகவே கருதப்பட்டு கிராஜுவிட்டி கணக்கிடப்படும்.

அனைத்து ஊழியர்களுக்கும் கிராஜுவிட்டி கணக்கிடுவதற்கு ஒரே ஃபார்முலாதான் பயன்படுத்தப்படுகிறது. மொத்த கிராஜுவிட்டி தொகை = (கடைசியாக பெற்ற சம்பளம்) x (15 / 26) x (வேலை செய்த ஆண்டுகள்). உதாரணமாக ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் வேலை செய்ததாக வைத்துக்கொள்வோம். அவர் கடைசியாக பெற்ற சம்பளத் தொகை 40,000 ரூபாய் என வைத்துக்கொள்வோம்.

கிராஜுவிட்டி = (40000) x (15 / 26) x (7) = 161538 ரூபாய். ஆக, அந்த ஊழியருக்கு 1,61,538 ரூபாய் கிராஜுவிட்டி தொகையாகக் கிடைக்கும். மேற்கூறிய ஊழியர் ஏழு ஆண்டுகள், 8 மாதம் வேலை செய்திருந்தால் கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுவது? இப்போது அவரது பணிக்காலம் 8 ஆண்டுகளாகக் கருதப்படும். கிராஜுவிட்டி = (40000) x (15 / 26) x (8) = 1,84,615 ரூபாய். ஆக, அவருக்கு 1,84,615 ரூபாய் கிராஜுவிட்டி தொகையாக செலுத்தப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com