ஆல்மண்ட் ஆயிலில் இருக்கும் அற்புதமான 10 ஆரோக்கிய நன்மைகள்!

Almond Oil
Almond Oilhttps://www.dermaessentia.com

நாம் தினசரி உண்ணும் சரிவிகித உணவுடன் ஆல்மண்ட் ஆயிலையும் ஒரு பகுதியாக சேர்த்து உண்ணும்போது பலவித ஆரோக்கிய நன்மைகள் உடலுக்குக் கிடைக்கும் என்பது உறுதி. அந்த நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

* ஆல்மண்ட் ஆயிலில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். இவை உடலிலுள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். அதனால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு குறைகிறது.

* இதில் கலோரி அளவு அதிகம். இருந்தபோதும் இதை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளும்போது இதிலுள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைக் கொடுக்கும். இதனால் அடிக்கடி உணவு உட்கொள்ளும் தேவை குறைந்து உடல் எடை அதிகரிக்கும் அபாயம் குறைகிறது.

* ஆல்மண்ட் ஆயிலில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதனால் மூளையின் அறிவாற்றல், ஞாபக சக்தி மற்றும் கூர்நோக்கும் திறன் ஆகியவை அதிகமாகின்றன.

* இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் உள்ளும் புறமும் ஆரோக்கியமடையவும், நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. இதனால் சருமத்தில் சுருக்கம் மற்றும் வீக்கம் உண்டாவது தடுக்கப்படுகிறது.

* ஆல்மண்ட் ஆயிலில் உள்ள அதிகளவு வைட்டமின் E, வைட்டமின் D மற்றும் மக்னீசியம் சத்துக்கள், தலையின் முடி வளரும் பகுதி மற்றும் மயிர்க்கால்களுக்கு நல்ல சக்தி தர உதவி புரிகின்றன. இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும் வாய்ப்பு உருவாகிறது.

* சிறிதளவு ஆல்மண்ட் ஆயில் உட்கொள்ளும்போது அதிலுள்ள மைல்டு மலமிளக்கும் குணமானது மலச்சிக்கலைத் தடுக்கும்; மற்ற உணவுகளின் ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கும் உதவும்.

இதையும் படியுங்கள்:
எதிர்மறையான சுய பேச்சு தரும் தீமைகள் தெரியுமா?
Almond Oil

* தொடர்ந்து ஆல்மண்ட் ஆயில் உட்கொள்ளும்போது அதிலுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர உதவுகின்றன. ஆஸ்ட்டியோபொரோஸிஸ் நோய் வருவதையும் தடுக்கின்றன.

* இதிலுள்ள வைட்டமின் E மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்யவும், செல்களை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸிலிருந்து பாதுகாக்கவும், உடலில் வீக்கங்கள் உண்டாவதைத் தடுக்கவும் உதவுகின்றன.

* இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது உடல் முழுவதும் வீக்கங்கள் உண்டாகும் அறிகுறிகளைக் களைந்து, ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ், சருமத்தில் வீக்கம் போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.

* ஆல்மண்ட் ஆயில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதை அளவோடு எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படும் வாய்ப்புள்ளது.

ஆல்மண்ட் ஆயில் தரும் ஆரோக்கிய நன்மைகளை நன்குணர்ந்து நாமும் அதை உண்போம்; நற்பலன் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com