கேரளாவிற்கு சென்று பார்க்கும்போது அங்கே தனித்துவமாகத் தெரிவது, கேரள உணவுகள் மற்றும் கேரள வீடுகள் ஆகும். கேரளாவில் உள்ள வீடுகள் மற்ற மாநிலங்களில் கட்டும் வீட்டைக் காட்டிலும் மாறுபட்டு அழகாகவும், தனித்துவமாகவும், பாரம்பரியமாகவும் காட்சியளிக்கிறது. இதற்குக் காரணம் என்ன? அப்படி அந்த வீட்டை இவ்வளவு அழகாகக் காட்டுவதற்கு என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
1. கேரள வீடுகளில் பயன்படுத்தப்படும் மரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தேக்கு, Mahogany, ரோஸ்வுட் இந்த மூன்று வகை மரங்களைத்தான் பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்துவார்கள். இதுபோன்ற மரங்களை பர்னிச்சர்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல், சுவர் மற்றும் சீலிங்கிலும் (ceilings) பயன்படுத்துவது வீட்டின் அழகை அப்படியே மாற்றிவிடும்.
2. இந்த வீடுகளில் இருக்கும் Flooring அதிகமாக ஆக்ஸைட் Flooring ஆகத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல், ஆத்தங்குடி டைல்ஸ், டெரக்கோட்டா டைல்ஸ் பயன்படுத்துவார்கள். சிவப்பு மற்றும் கருப்பு ஆக்ஸைட் Flooring ஐ பாரம்பரியமாக பயன்படுத்துவார்கள். டைல்ஸை விட ஆக்ஸைட் Flooring விலை குறைவாகும். இது பார்ப்பதற்கும் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் இருக்கும். ஆத்தங்குடி, செட்டிநாடு பக்கம் உள்ள ஊராகும். இங்கு தயாரிக்கப்படும் இந்த வகை டைல்ஸ்கள் 100 வருடங்கள் கூட உழைக்கும் தன்மையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3. கேரளாதான் Mural artsன் பிறப்பிடம் ஆகும். அதனால் வீடுகளில் ராமாயண, மகாபாரதம் போன்ற இதிகாசங்களை தழுவிய ஓவியங்களை நிறைய காண முடியும். Textured wallsல் கூட ஓவியங்கள் வரைவது வீட்டை இன்னும் அழகாக மாற்றியமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. கேரளாவில் உள்ள வீடுகள் அனைத்தையும் பார்க்கும்போது ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புலப்படும். அவர்கள் இருக்கும் மொத்த இடத்திலும் வீட்டைக் கட்டாமல், தோட்டத்திற்காக, செடிக்கொடிகள் அமைப்பதற்காக கண்டிப்பாக இடத்தை ஒதுக்குவார்கள். அப்படி இடத்தை ஒதுக்கியது போக, நடுவிலேதான் வீட்டையே கட்டுவார்கள். கேரள மக்கள் அதிகம் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.
5. கடைசியாக, கேரள வீடுகளில் பயன்படுத்தும் கலர் பேலட்கள் என்னவென்றால் சிவப்பு, பச்சை, Brown, earthy tones இந்த நான்கு கலரைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்த நிறங்களைப் பயன்படுத்தும்போது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
கேரளாவின் பாரம்பரியமான வீட்டின் பெயர், நெல்லுக்கட்டு ஆகும். இதை பாரம்பரிய முறையான தச்சு சாஸ்திரத்தைக் கொண்டு கட்டியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நல்ல குறிப்புகளை நீங்களும் வீடு கட்டும்போது பயன்படுத்தி உங்கள் வீட்டையும் சிக்கனமான விலையில் அழகாக மாற்றலாம். முயற்சித்துப் பாருங்கள்.