சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி செய்ய என்னென்ன பொருட்கள் தேவை தெரியுமா?

Siddha's mooligai sambrani
How to make Siddha's mooligai sambrani?Image Credits: Maalaimalar

லக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக  சித்தர்கள் அருளிய விஷயங்கள் ஏராளம். அந்த வகையில் வீட்டில் உள்ள தீயசக்திகள் விலகி, நல்ல சக்தி பெருகுவதற்காக போடப்படும் மூலிகை சாம்பிராணியை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

சித்தர்கள் அருளிய இந்த மூலிகை சாம்பிராணியை போடுவது, வீட்டில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கக்கூடிய சர்வலோக நிவாரணியாக செயல்படக்கூடியதாகும். ஏழு வகையான மூலிகையை பயன்படுத்தி இந்த தூபத்தை எவ்வாறு செய்வது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

இந்தப் பொடியை வீட்டில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள், கடை மற்றும் தொழில் நிலையங்களில் பயன்படுத்தும்போது வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். வீட்டில் பயன்படுத்தும்போது நல்ல சக்தி நிலைத்து நிற்கும். குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு, தூக்கமின்மை, நிம்மதியின்மை, நோய் தொல்லை போன்றவை அனைத்துமே விலகி விடும். விஷ ஜந்துக்கள், விஷக்கிருமிகள் வீட்டில் தங்காது.

அறிவியல் ரீதியாக பார்க்கும்போது தூபம் போடுவது கெட்டக்காற்றை அகற்றி, விஷ ஜந்துக்கள் வீட்டினுள்  வராமல் தடுத்து, எதிர்மறை எண்ணங்களை போக்கி  நல்ல மனநிலையை தரக்கூடியதாகும்.

இந்த தூபத்தில் பயன்படுத்தக்கூடிய 7 பொருட்கள், வெண்கடுகு, நாய்கடுகு, மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வப்பொடி, வேம்பு பொடி, குங்கிலியம் ஆகும். வெண்கடுகும், நாய்கடுகும் பைரவருக்கு உகந்ததாகும். மருதாணி விதை திருமகளுக்கு உரியதாகும். அருகம்புல் விநாயகருக்கு உகந்ததாகும். வில்வமும், வேம்பு பொடியும் சிவன் மற்றும் சக்திக்கு உரியதாகும்.

இப்போது இந்தப் பொருட்களையெல்லாம் அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை வாரத்திற்கு மூன்று நாட்கள் காலை, மாலை வீட்டில் போடுவது மிகவும் நல்லதாகும். இந்த மூலிகை சாம்பிராணி தயார் செய்யப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக்கடைகளிலேயே சுலபமாகக் கிடைக்கும். இதை சாம்பிராணியுடன் சேர்த்து 48 நாட்கள் வீட்டில் போட்டு வர அனைத்து எதிர்மறை சக்திகளும் வீட்டை விட்டு விலகிவிடும். இந்த மூலிகை சாம்பிராணி தெய்வீக மணத்தைக் கொடுக்கும். இதை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் காட்டுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
முகம் வியர்க்கும் அதிசய அம்மன் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?
Siddha's mooligai sambrani

பைரவர், சக்தி, சிவனுக்கு உகந்தது இந்த மூலிகை சாம்பிராணி. எனவே, வீட்டில் தொடர்ந்து போட்டு வருவது நல்ல பலனைத் தரும். பழந்தமிழர்கள் மூலிகை தூபம் போடுவதை ஒரு பழக்கமாவே வைத்திருந்தனர். தற்போது இதுபோன்ற பழக்கத்தை மக்கள் செய்வது கிடையாது. எனவே, இதை தினமும் வீட்டில் போடுவது நிறைய நன்மைகளை நமக்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் தரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com