குகையின் உள்ளே இருக்கும் அழகிய கிராமம் எங்குள்ளது தெரியுமா?

Do you know where the beautiful village inside the cave is?
Do you know where the beautiful village inside the cave is?https://www.chinadragontours.com

சீன நாட்டின் Guizhou மாகாணத்தில் உள்ள ஜாங்டாங் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய மலையின் குகையில் ஒரு கிராமமே உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகையின் உள்ளே 18 குடும்பங்கள் வசிக்கின்றன.

நூறு பேர்கள் கொண்ட இந்த கிராமத்தை, ‘சீனாவின் குகை கிராமம்’ என்று அழைக்கிறார்கள். சீனாவின் கடைசி குகை கிராமம் இது. வெளி உலகத்துடன் அதிக தொடர்பில்லாமல் இருக்கும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது.

இந்தக் குகைக்குள் வாழும் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்தது. ஆனால், சீன அரசு 2008 முதல் மக்கள் அந்தக் குகைக்குள் வாழ தடை விதித்ததுடன் அங்கு இயங்கிக் கொண்டிருந்த பள்ளியையும் மூடிவிட்டது. அது மட்டுமின்றி, அங்கிருந்து மக்களையும் வெளியேற அறிவுறுத்தியது. ஆனால், இங்குள்ள மக்கள் இந்தக் குகையை விட்டு வெளியேற விரும்பவில்லை. இங்கேயே வீடுகள் அமைத்துக் கொண்டு விவசாயம் செய்து வாழ்கின்றனர்.

கடுமையான வெப்பம் மற்றும் குளிரிலிருந்து இந்தக் குகை அவர்களை  பாதுகாப்பதாகக் கூறும் இவர்கள், தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி பயில அனுப்புகின்றனர். இவர்கள் இரண்டரை மணி நேரம் கடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் படிக்கின்றனர். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத இந்த கிராமத்தில் 2000 ஆண்டிற்கு பின்னர்தான் மின்சார வசதி வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சருமப் பிரச்னைகளுக்கு குட் பை சொல்லும் 7 வீட்டு வைத்தியப் பொருட்கள்!
Do you know where the beautiful village inside the cave is?

1949ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தக் குகையில் அடைக்கலம் புகுந்தனர். அதைத் தொடர்ந்து அங்கேயே தங்கி தங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொண்டு, அங்கேயே விவசாயம் செய்து வாழ்ந்து‌‌‌‌ வருகின்றனர். இங்குள்ள பிள்ளைகள் மேற்படிப்புக்காக வெளியூர்களுக்குச் சென்றும் படித்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து இங்குள்ள குகை கிராமத்தைக் கண்டு வியந்து செல்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com